Tuesday, 15 September 2015

விவசாயத்தினைத் துறந்த நாடும், விவசாயியை மறந்த நாடும் உருப்படவே முடியாது -

நிலங்கள் வீடு ஆயின !
களங்கள் காடு ஆயின !!

விவசாயி விண்ணோடு போகிறான் !
விவசாயம் மண்ணோடு போகிறது.....!!

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்,
இருநூறு ஆண்டு !
இனி, உணவிற்காக பிச்சை எடுக்கப்போகிறோம் !! எத்தனை ஆண்டுகளுக்கோ ?.....

பல கிராமங்களில் பலரைக் காணோம் !  
பல இடங்களில் கிராமங்களைக் காணோம் !! 🏡🏡
பூமி, யாரையும் கைவிடாதத் தாயானவள், இன்று
யாவராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்,
கோயிலுக்கு சிறப்பில்லை !
சிற்பிகளே அழிந்துவிட்டால்,
கோயிலுக்கே பிறப்பில்லை.....!!

விவசாயி அழிந்துவிட்டால்,
உண்ணக்கூட வழியில்லை !
விவசாயம் அழிந்துவிட்டால்,
வருந்தியப் பின் பயனில்லை.....!!

நிதிநிலை அறிக்கையில்,
அரசின் அறிவின்மை !
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி !!
நாம் வாழ நாலாயிரம் கோடி.....!!!

கரும் மேகங்கள் காணவில்லை !
கால் நடைகள் பேனப்படவில்லை !!
நாளை வரும் பசி போக்க,
நாகரிகம் உதவவில்லை.....!!!

ஏறு போன நிலங்கள் !
இன்று கூறு போன மனைகள் !!
பருப்பு கொடுத்த சோலைகள், இன்று !
செருப்புத் தொழிற்சாலைகள்.....!!  🏭

நிலத்தை விற்ற பணத்தை போட்டால்,
வங்கி பணம் வட்டி தரும் !
வாய்ப் பசிக்கு ரொட்டி தருமா ?.....
பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால், அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேய்த்து விவசாயிகளாகி இருப்பார்கள்.....

iPod ஐயும் Android ஐயும் தின்னமுடியாது !
Windows ஐயும் Vista வையும் உண்ண முடியாது !
மதுவை மட்டும் தாகத்திற்கு குடிக்க முடியாது !
பசிக்காதது போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....
விஞ்ஞான வளர்ச்சியில, வசதிகள் வரும்.
வயிறு நிரம்புமா.....?

விவசாயத்தினைத் துறந்த நாடும்,
விவசாயியை மறந்த நாடும்
உருப்படவே முடியாது -
- உண்மை இன்று புரியாது.

விவசாயத்தினை நேசித்தால் பகிருங்கள்......🌿🌾🍀🌾🌾🏃🏇 🐓 🐺 🐃🐂🌴🌳🌲🌱🌽

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.