Monday, 14 September 2015

கலப்பட பெருங்காயம் எது?

நல்ல‍ பெருங்காயம் எது? கலப்பட  பெருங்காயம்  எது? – கண்டறிய எளிய சோதனை

நல்ல‍ பெருங்காயம் எது? கலப்பட  பெருங்காயம்  எது? – கண்டறிய எளிய சோதனை
தமிழர்கள் ஆதிகாலத்தில் இருந்தே சமையலில் பயன்படுத்தும் ஒரு வகை மூலிகையே
பெருங்காயம்  ஆகும். இதில் பெருங்காயத்திலுள்ள “ ஓலியோ ரெஸின்’ மிக உயர்ந்த மருத்துவ குணங்களைக்கொண்டது.  இதன் மனிதகுலத்திற்கு கிடைத்த‍ மகத்தான மூலிகை என்றே சொல்ல‍லாம்.
அத்த‍கைய பெருங்காயத்தில் சிலர் கலப்படம் செய்கின்றார்கள். இக்கலப்பட பெருங்காயத்தை சமைக்கும்போது கலந்து தயாரிக்கும் உணவை நாம் உட்கொள்ளும் போது பலவித பக்க‍ விளைவுகளும், சில பின் விளை வுகளும் ஏற்பட்ட‍ மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு வேட்டுவைக்கிறது.
அதனால் நல்ல‍பெருங்காயம் எது? கலப்பட பெருங் காயம் எது? என்பதனை எளியமுறையில் கண்டறிய லாம். 
கலப்படம் செய்து விற்கப்படும் பெருங்காயத்தை அறிந்துகொள்ள ஒரு வழி இருக்கிறது. இப்பெருங்காயத்தைத் தண்ணீரி ல் போட்டால் கரையாமல் கோந்துபோலக்காணும் . அக்கோந்தை எடுத்து எரித்தால் கரி மட்டுமே மிஞ் சும். கலப்பட மில்லாத சுத்தமான பெருங் காயமா னால் தண்ணீரில் போட்டவுடன் கரைந்து தண்ணீர் பால் நிறமாக மாறிவிடும். மேலும் சுத்தமான பெருங்காயத்தின் மேல் தீக் குச்சியைப் பற்றவைத்துப் போட்டால் கற்பூரம்போலப்பற்றிக் கொண்டு முழுவதுமாக எரிந்துவிடும்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.