Wednesday, 16 September 2015

> ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது ஏங்குகிறேன் அம்மா..!!

*அன்புள்ள அம்மா.!!!!**
அம்மா...
> எழுத வார்த்தைகள் இல்லாமல்

>
> தொடங்குகிறேன்...!!
>
> பருவம் வரை பக்குவமாய்
>
> வளர்த்து விட்டாயே
>
> ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
>
> உத்தமன் என் பிள்ளை என்று
>
> விட்டு கொடுக்காமல் பேசுவாயே
>
> அம்மா..!!
>
> நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
>
> தட்டி சென்ற நாட்கள்..!!
>
> செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
>
> போய்வாட என நீ சொல்ல
>
> இந்த வயதில் கடைக்கு போவதா?..
>
> என நான் சொன்னேன்..!!
>
> இன்றோ..
>
> இங்கே கண்ணுக்கு தெரியாத
>
> யாரோ ஒருவருக்காக ஓயாமல்
>
> வேலை செய்கிறேன் அம்மா..!!
>
> நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
>
> உந்தன் கை பக்குவ உணவு
>
> நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
>
> இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!
>
> கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
>
> சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல
>
> பத்து நிமிஷமா..!, நான் வெளியல
>
> சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி
>
> கிளம்பிய தருணங்கள்..!!
>
> இன்றோ..
>
> இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
>
> சாப்பிடும் போதே கண்கள் களங்க
>
> இன்று காரம் கொஞ்சம் அதிகம்
>
> போய்விட்டது என கடைக்காரர்
>
> சொல்ல..!!
> எனக்கு மட்டும் தெரிந்த
>
> உண்மை..!!
>
> பாசமுடன் நீ அளித்த உந்தன்
>
> ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
>
> ஏங்குகிறேன் அம்மா..!!
>
> அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
>
> வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
>
> தடவி விடும் எண்ணெய் துளிகள்
>
> வேண்டா வெறுப்பாய் நிற்கும்
>
> நான்..!!
>
> இன்றும்
>
> என் தலை முடி சகாராதான் அம்மா
>
> உந்தன் கை ஒற்றை எண்ணெய்
>
> துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!
>
> ஆசையால்..
>
> மழையில் நனைந்து வர
>
> முனுமுனுத்தபடி துடைப்பாய்
>
> உந்தன் முந்தானையில்
>
> இப்போது நனைகிறேன்
>
> ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,
>
> அத்தி பூக்கும் தருணமாய்..!
>
> என்றாவது ஒருநாள் என்னை
>
> திட்டும் நீ..! அந்த நொடியில்
>
> எதிர்த்து பேசினேனே அம்மா..!!
>
> இன்றோ..
>
> இங்கே உயர் அதிகாரி திட்ட
>
> சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே
>
> அம்மா..!!
>
> என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!
>
> தொலைபேசியில்...
>
> உனக்காக, தேடி திரிந்து பார்த்து,
>
> பார்த்து வாங்கிய புடைவையை பற்றி
>
> சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்
>
> வருமே..! கண்ணு உனக்காக
>
> ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது
>
> எடுத்துகிட்டு போடா என்று..!!
>
> எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
>
> அன்பையும் , எண்ணத்தையும்
>
> என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...
>
> கைபேசியை எடுத்து , அம்மா....என்று
>
> சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
>
> எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு
>
> நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா
>
> இருக்க..!!!
>
> என் அன்னை ஆயிற்றே...
>
> எந்தன் ஒற்றை வார்த்தையில்
>
> புரிந்து கொள்வாய் எந்தன்
>
> மனதை..!!
>
> நான் சொல்ல மறந்த வார்த்தைகளை
>
> பக்குவமாய் பட்டியளிடுவாய்..,
>
> "வேளைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு "
>
> "மறக்காம எண்ண தேச்சி குளிடா"
>
> "ரோட்ல பத்திரமா பாத்து போடா"
>
> " உடம்ப பாத்துக்கோடா தங்கம் "
>
> என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
>
> என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே
>
> அம்மா..!!
>
> உன்னை என்னிடம் இருந்து பிரித்த
>
> இந்த வாழ்க்கையை திட்டுவதா..?
>
> இல்லை..
>
> உந்தன் மேல் நான் வைத்திருக்கும்
>
> பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?
>
> தெரியவில்லையே அம்மா..!!
>
> உனக்காக உயிரற்ற பொருட்களால்
>
> அன்பு சின்னம் அமைத்து என்ன
>
> பயன்..!!
>
> உதிரம் எனும் பசை தடவி
>
> எலும்பு என்னும் கற்கள் அடுக்கி
>
> உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்
>
> அம்மா என்றும் உந்தன்
>
> காலடியில்...!!!****
Dedicated to all mom's....

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.