Sunday, 20 September 2015

சமூக நோயான தமிழ்சினிமா தமிழகத்திற்கு செய்ததென்ன?

தமிழகத்து சாபம்
வெள்ளையர் விட்டுசெல்லும் பொழுது
தென்னிந்தியாவின் மிக முன்னேறிய
நகரம் சென்னை,
அன்று
பெங்களூர்,ஐதராபாத்,விசாகபட்டின
ம்,திருவனந்தபுரம் என எந்த
ஊரினைவிடவும் பலநூறுமடங்கு
வளர்ந்திருந்தது.
மாநிலங்கள் பிரிக்கபடும்பொழுது
எங்களுக்கு சொல்லிகொள்ளும்படி
நகரம் இல்லை, இதனை கொடுங்கள்
அல்லது பங்கிடுங்கள் என கெஞ்சியது

ஆந்திரம்.
மாநிலங்கள் பிரிக்கபட்ட பின் மற்ற
நகரங்கள் எல்லாம் படுவேகமாக வளர்ந்து
இன்று எங்கோ சென்றுவிட்டன,
பெங்களூர் உலக நகரங்கள் வரிசைக்கு
வந்துவிட்டது, ஐதராபாத்தின் வளர்ச்சி
அலாதியானது. அது
தெலுங்கானவிற்கு போனால் என்ன?
விசாகபட்டினத்தை சிங்கப்பூராக்கு
வோம் என சீமாந்திரா முண்டாசு
கட்டிகொட்டிருக்கின்றது.
கொச்சிவிமான நிலையம் சோலாராக
மாறி உலகிற்கு வழிகாட்ட, இன்னும்
என்னவெல்லாமோ வளர்கின்ற காலத்தில்
சென்னை நிலை என்ன?
கூவம் வரிசையில் சென்னை விமான
நிலையத்தின் இடிந்து விழும்
செய்தியும் ஒரு கரும்புள்ளியாக
சேர்ந்துவிட்டது. பெரும் வளர்ச்சி
கண்டிருக்க வேண்டிய தமிழகம்
தத்தளிக்கின்றது, ஊருக்கொரு
பிரச்சினைகள் அதிலும் பல மகா
ஆபத்தானவை. அணு,மீத்தேன் என ஒரு
காலத்தில் நாமும் ஆப்ரிகர்களை போல
நடுகடலில் அல்லாடவேண்டிய சூழல்
வருமோ எனும் அஞ்சும் நிலை.
எல்லாம் நாசமாகி, டாஸ்மாக்
வருமானத்தில் அரசு நிர்வாகம் நடக்கும்
அவலநிலைக்கு என்ன காரணம்?
இரண்டே காரணம், ஒன்று சினிமா,
இன்னொன்று அதனை பிரமாண்டமாக
மக்களிடையே காட்டிய பத்திரிகைகள்
இன்று தொலைகாட்சிகள்.
அந்த சமூக நோயான தமிழ்சினிமா
தமிழகத்திற்கு செய்ததென்ன? ஒரு
மண்ணாங்கட்டியும் இல்லை, ஆனால்
அழித்தது அதிகம்.
சினிமாவினை கட்சியின் ஊடகமாக்கிய
அண்ணாவினை கொன்ற
புற்றுநோயினை விட மகா மோசமாக
தமிழகத்தினை தாக்கிகொண்டிருக்கும்
நோய் இது.
MLA, MP பதவி வகித்தவர்கள் : கலைஞர், MGR, ஜெயலலிதா, SSR, விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன், ராதாரவி, SVசேகர், JKரித்திஷ், ராமராஜன், அருண்பாண்டியன், T. ராஜேந்தர்
அரசியலில் உள்ளவர்கள்:  கார்த்திக், குஷ்பு, CR சரஸ்வதி, பாக்யராஜ், வாகை சந்திரசேகர்,
இன்றும் பத்திரிகையினை புரட்டுங்கள்,
செய்திதாள்களின் முக்கால்வாசி
பக்கங்களை அவர்களின் படங்கள்,சண்டைகள
்,கிசுகிசுக்கள் அல்லது
அறிவிப்புகள்தான் நிறைந்திருக்கும்,
தொலைக்காட்சிகள் கேட்கவே
வேண்டாம்.
அதுவும் பாருங்கள் நடிகர்களுககு ஒரு
சங்கம், தயாரிப்பாளர்களுக்கு ஒரு சங்கம்,
விநியோகிஸ்தர்களுக்கு ஒரு சங்கம்,
தொழிலாளர்களுக்கு ஒரு சங்கம்.
இதில் நடிகர்களுக்குள் முதல் சண்டை,
பின் தயாரிப்பாளர்களுக்கும்
நடிகர்களுக்கும் சண்டை, பின்
விநியோகிஸ்தர்களுக்கும்
தயாரிப்பாளருக்கும் சண்டை. இதனை
எல்லாம் கண்ட பின் தொழிலாளர்கள்
சும்மா இருப்பார்களா? திடிரென
அவர்களுகுள் அல்லது அவர்களுக்கும்
அல்லது ஏதாவது ஒரு சங்கத்திற்கும்
சண்டை,
சண்டை..சண்டை, தகறாறு இதனை தவிர
ஒரு மண்ணாங்கட்டியும் தமிழகத்திற்கு
கொடுக்காத திரையுலகம் இது.
எம்ஜிஆர் காலத்திலே நடிகர் சங்கத்திற்கு
கட்டடம் கட்டினார்களாம், அதில் கடன்
வேறு வந்ததாம். அக்கால நடிகர்களின்
சம்பளத்தில் நூற்றில ஒரு பங்கு கூட
இல்லாத கடன் அது. அதனை அடைப்பதில்
சிவாஜி மனம் நொந்து
கிளம்பிவிட்டாராம். தனக்கு வேண்டியவர்களுக்கு தன்னை
பார்த்தவர்களுக்கெல்லாம் அரசு நிலத்தை, மக்கள் பணத்தை
அள்ளிகொடுத்த எம்.ஜி.ஆரும் அந்த
கடனை கண்டுகொள்ளவில்லையாம்.
இன்று ஒரு சாதாரண நடிகையே அந்த
கடனை அடைத்துவிட கூடிய
சூழல்தான், ஆனால் இன்னும் கடன்
உண்டாம், அதனை அடைப்பதில்
சண்டையாம், இதில் இவர்களுக்கு தேர்தல்
வேறாம்.
இவர்கள் கழுத்துபிடி சண்டையில்
இருக்கும் பொழுதே தயாரிப்பாளர்கள்
சங்கம் முட்டிகொண்டு நிற்கின்றது,
அப்படியே பெப்சி போராட்டம் விரைவில்
தொடங்குமாம், இன்று தயாரிப்பாளர்
சங்கள் படம் வெளியிடுவது நிறுத்தி
போராடுகின்றதாம்.
எப்படி பட்ட போராட்டம் பார்த்தீர்களா? இந்த
போராட்டங்களால் இந்த தமிழ்நாட்டிற்கு
ஏதாவது நன்மை உண்டா?.
ஆனால் இந்த பரபரப்புகள்தான்
தமிழகத்தின் மகா முக்கிய செய்திகள், குஜராத்திலிருந்து சேவை
செய்வதற்காக நடந்தே தமிழகம் வந்த, ஆடை படிப்பில்
ஆராய்ச்சிப்படிப்பில் பட்டம்பெற்ற நமீதா
அவர்கள் விரைவில் அரசியலுக்கு
வருவதாக பெரும் பரபரப்பினை
கிளப்பிவிட்டிருக்கின்றார், உலகமே
ஆடிப்போய் நிற்கின்றது.
சாதி சண்டை, மத சண்டை, டாஸ்மாக்
சண்டை என தீர்க்கவேண்டிய சண்டைகள்
எவ்வளவோ இருக்க, இந்த கூத்தாடிகளின்
சண்டைதான் மகா முக்கியமா?
நேற்று பெரும் ராணுவ
அணிவகுப்பினை நடத்தி உலகை மிரட்டி
இருக்கின்றது சீனா, அங்கு எடுக்கபடாத
திரைபடமா? உலகம் கொண்டாடும்
புருஸ்லீ, இன்று கலக்கிகொண்டிருக்கும்  ஜாக்கிசான்,ஜெட்லீ என அவர்கள்
திரை உலகிற்கு கொடுக்காத
நடிகர்களையா தமிழகம்
கொடுத்துவிட்டது?
இன்றும் உலகபடங்களில் சீன படங்களின்
தாக்கம் மிக பெரிது.
ஹாலிவுட் ஜாம்பவான் ஜாக்கிசான்
நிலை சீனாவில் என்ன? மகன்
போதைபொருள் வழக்கில் பகிரங்கமாக
கைதுசெய்யபட்டபொழுது, "என் மகனை
நல்ல முறையில் வளர்த்து நாட்டிற்கு
கொடுக்காத என்னை மன்னியுங்கள்" என
கலங்கி நின்றாரே? அது சமூக
பொறுப்பு, அவன் மனிதன்.
நடிகராக இருந்து அமெரிக்க
ஜனாதிபதி ஆனாலும், அமெரிக்க
திரையுலகினை வைக்கவேண்டிய
இடத்தில் வைத்திருந்தாரே ரீகன், அவர்
நாட்டுபற்றாளன்.
இங்கு என்ன நடக்கின்றது? சிவாஜி
கணேசன் குடும்பத்தார் ஜூவல்லரி
வைத்திருப்பார்கள், ஆனால் சிவாஜி
கணேசனுக்கு அரசு சார்பில் மண்டபம்.
தமிழக திரைப்படங்களுக்கு
வரிவிலக்கு. நடிகர், தயாரிப்பாளர்,வி
நியோகிஸ்தர் வருமான வரி எல்லாம்
பற்றி யாருக்கும் தெரியாது.
இந்த திரையுலகம் இல்லாவிட்டால்
தமிழகம் வாழாதா? மூடினால் பல
ஆயிரம்பேர் வேலை இழப்பார்களாம், ஏன்
வேறுதொழிலே இவர்களால் செய்ய
முடியாதா?
ஒரு நன்மையும் தராத இந்த
கும்பலுக்கு ஏன் இவ்வளவு
முக்கியத்துவம் இங்கு, இந்த
தமிழ்சினிமா தமிழக அரசியலை
கெடுத்தது, தமிழக வளர்ச்சியினை
கெடுத்தது, அப்படியே கடல்தாண்டி
உலகினை ஆச்சரியமாக பார்க்கவைத்த
ஈழபோரட்டத்தை கெடுத்தது.
நிச்சயமாக சொல்லலாம்,
இப்படி பல கெடுதல்களை கொடுத்து,
பத்திரிகைகளிலும்
தொலைகாட்சிகளையும்
புற்றுநோயாக தாக்கி இருக்கும் இந்த
சினிமாவினை ஒழிக்காமல் நிச்சயம்
தமிழகத்திற்கு விடிவே இல்லை.
கோடிகோடியாக சம்பாதிப்பார்களாம்,
ஆனால் அவர்களின் சங்க கட்டிடத்து
கடனை அடைக்கமாட்டார்களாம், வங்கியில்
கடன்வாங்கிய விவசாயிகளை சாக
துரத்தும் வங்கிகள், இவர்களை மட்டும்
விட்டுவிடுமாம்.
இந்த சங்க காரியத்திற்காக சில
லட்சங்களை கூட இழக்கவிரும்பாத
இவர்களுக்கு அரசியல் முதலமைச்சர்
கனவு வேறு, நாடு உருப்படுமா?
என்றாவது ஒரு நாள் மக்கள் சிந்திப்பர்,
மாற்றம் வரும். அன்று நல்ல அரசு
அமையும்பட்சத்தில் செய்யவேண்டியது
என்ன தெரியுமா?
இந்த நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க
கட்டங்களை எல்லாம் இடித்துவிட்டு
அப்துல் கலாம், நம்மாழ்வார், இவர்கள் பெயரில்
நல்ல நூலகமும், ஆய்வகங்களும்
அமைக்கவேண்டியது.
அது செய்யாமல் தமிழகம் உருப்பட
வாய்ப்பே இல்லை.

2 comments:

  1. excellent article. most of the tamil actors and actresses are non tamilians. and the directors are also non tamilians. the producers are also from other states and countries. they don't know about our culture and the specialiity of tamil language and they are not worry about that. our tamil culture and language are murdered by them. most of the money earned by them going outside of tamilnadu to their native states.but the bitter truth is our tamil people are taking them as role model. first the capital of tamilnadu should be changed from chennai to either trichy or madurai because most of the people in chennai are non-tamilians . tamil cinemas are sewage of tamil culture.

    ReplyDelete
  2. ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தாத கூட்டத்திற்கு இவ்வளவு பெரிய கட்டுரையா? எளிமையாக இவர்களை தூக்கி எறிய ஒரே வழி இனி எந்த திரைப்படத்தையும் பார்க்க மாட்டோம் என முடிவு எடுப்பதுதான். தீவிரமாக நினைத்தால் திருட்டு விசிடியை வாங்கி மக்களுக்கு இலவசமாக கொடுங்கள்.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.