Monday, 14 September 2015

வருமான வரியிலும் சேமிக்க சில பயனுள்ள‍ குறிப்புக்கள்

வருமான வரியிலும் சேமிக்க சில பயனுள்ள‍ குறிப்புக்கள்

வருமான வரியிலும் சேமிக்க சில பயனுள்ள‍ குறிப்புக்கள்
‘‘வருமான வரி செலுத்துவது என்பது, ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதேபோல, வருமான வரிவிலக்குப் பெறுவதும், அதற்குத் தகுதியானவர் களின் உரிமை. ஆனால்,
பலரும் அதை பயன்படுத்திக்கொள்ளும் வழியை அறியாமல், பின்பற்றாமல், ஆண்டு இறுதியில் கிட்டத்தட்ட தங்களின் ஒரு மாதச் சம்பளத்தை வரியாகச் செலுத்துகிறார்கள்’’ என்று சுட்டிக் காட் டும் சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார், வருமான வரிவிலக்குப் பெறும் முறைகளை விரிவாக விளக்குகிறார்…
கல்விக்கடன் அல்லது கல்விக் கட்டணம் (UNDER SECTION 80C)
‘பிள்ளைகளின்பள்ளி மற்றும் கல்லூரிக்கட்டணங்களை  முன்னிறுத்தி, பெற்றோருக்குவருடத்துக்கு 1.5லட்சம் வ ரை வரிவிலக்குண்டு. இரண்டு பிள்ளைகள் எனில், கண வன் 1.5 லட்சத்துக்கும், மனைவி 1.5 லட்சத்துக்கும் என தனித்தனியாக மொத்தம் மூன்று லட்சத்துக்கு வரிச்சலு கை பெற முடியும். இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் கல்விக்கட்டணங்களுக்கு வரிச்சலுகை கிடையாது.
மாணவர் பெயரில் பெறப்படும் வங்கிக்கடனுக்கான வட்டிக்கும், SECTION 80E-ன்படி வரிவிலக்குஉண்டு. இதற்கு வரம்பு இல்லை, எவ்வளவு ரூபாய் வட்டி செலுத்துகிறோமோ அனைத்தையும் வரிவிலக்குக்கு எடுத்துக் கொள்ளமுடியும். கடன் பெற்றதில் இருந்து ஏழு வருடங்கள் வரை இதை பெற முடியும்.
பயணத்துக்கான (சுற்றுலா) வரிவிலக்கு (LTC – Leave Travel Concession – 10(5) செக்‌ஷன்)

ஒவ்வொரு வருடமும், ஏப்ரல்முதல் மார்ச் வரை (உதாரணம்: 2016ஏப்ரல்  முதல் 2017 மார்ச்), LTC கணக்கு முடிக்கப்படுகிறது. பயணத்துக்கான செல வுகளை 4 வருடத்துக்கு ஒருமுறை வரிவிலக்குக் காக க்ளெய்ம் செய்யலாம். ஒருவேளை, 4 வருடங்க ளில் சுற்றுலா செல்ல முடியாமல் இருந்திருந்தால், அதை சமன்செய்ய, அடுத்த 4 வருடத்தின் முதல் வரு டத்தில் சுற்றுலாசென்று, க்ளெய்ம் செய்யமுடியும். கூடவே, வரவிருக்கும் 4 வருடத்துக்கானவாய்ப்பையும் பயன்படு த்திக் கொள்ளலாம்.
இந்த சலுகையைப்பெறுவதற்கான விதி முறைகள் சிலவற்றைப் பார்ப்போம். வெளி நாடு செல்ல அனுமதி இல்லை. இந்தியாவு க்குள் எங்கும் பயணம் செய்யலாம். ரயில், விமானம், பேருந்து டிக்கெட் டுகளை மட்டுமே சமர்ப்பிக்க முடியும். கார், கால்டாக்ஸி, ஷேர்ஆட்டோ, தங்கும்விடுதி , உணவுச் செலவுகள் இதில் சேர்க்கப்பட மாட்டாது. அனைத்தையும் ஒரிஜினல் ரசீது களாகச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். LTC க்ளெய்முக்கு கட்டாயமாக மெடிக்கல் லீவில் போகமுடியாது. பெற்றோரைச் சார்ந்திருக்கும் 2 குழந்தைகளை உடன் அழைத்துச்செல்லலாம். ஒருவேளை  இரண்டாவது டெலிவரியில் இரட்டைக் குழந்தை எனில், மூன்று குழந்தைகளுக்கு அனுமதி உண்டு.
வேலைக்குச் செல்லும் பிள்ளைகள்/திருமணமான பிள்ளைகளின் செலவு களை வரிவிலக்குக்குச் சமர்ப்பிக்க முடியாது. இன்னொரு முக்கியமான விஷயம்… கணவன், மனைவி இருவரும் ஒரே ரசீதுகளை வரிவிலக் குக்குப் பயன்படுத்த முடியாது. எனவே, யார் பெயரில் க்ளெய்ம் செய்யவேண்டுமோ, டிக்கெட் பதிவுகளை அவர் பெயரிலேயே செய்ய வேண்டும்.
ஹெல்த் இன்ஷூரன்ஸ் (மெடிக்கல் இன்ஷூரன்ஸ்) பிரீமியத்துக்கானவரிவிலக்கு – UNDER SECTION 80 D):
மெடிக்கல் இன்ஷூரன்ஸுக்காக நீங்கள் செலுத்தும் பிரீயமித்தொகைக்கு வரிவிலக்கு உண்டு. உதாரண மாக, ஒருகுடும்பத்தலைவன் இரண்டு லட்சம் ரூபாய் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசிஎடுத்து, வருடத்துக் குசீனியர் சிட்டிசன்களான தன்பெற்றோருக்கு 20,000 ரூபாயும்… தான், தன்மனைவி, குழந்தைகள் என தன் குடும்பத்துக்கு 15,000 ரூபாயும் (2015 பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு ` 30ஆயிரம், மற்றவர்களுக்கு 25ஆயிரம் என உயர்த்தப்பட் டுள்ளது) ஹெல்த் இன்ஷூரன்ஸ்(மெடிக்கல்இன்ஷூரன்ஸ் ) பிரீமியமாகக்கட்டிவருகிறார் என்று வைத்துக்கொள்வோ ம். இதற்கானபில்களை வரிவிலக்குக்குசமர்ப்பிக்கலாம்.
ஆயுள் காப்பீடு பிரீமியத்துக்கான ( லைஃப் இன்ஷூர ன்ஸ்) வரிவிலக்கு – 80 சி
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் நீங்கள் எடுத்துள்ள பாலிசிக்காக கட்டி வரும் பிரீமியத் தொகைக்கு வரு மான வரிவிலக்கு உண்டு. உதாரணமாக, 10லட்ச ரூபாய் பாலிசிதாரராகச்சேர்கிறீர்கள் என்றால், அதன் பிரீமியத் தொகை யை குறிப்பிட்ட மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், வருடம் ஒரு முறைஎன்று வசதியைப் பொறுத்து செலுத்தி வரலாம். அதற்குரிய வருமானவரிவிலக்குண்டு. உதாரண மாக, சிங்கிள் பிரீமியம் எனும் வகையில் அந்த 10 லட்சத்தையும் ஒரே தொகையாகக்கட்டுகிற வர்கள், இதில் 10%(1 லட்சம்) வரிவிலக்குப் பெற லாம். ஆனால், அதற்கான வருமான வழிகளை சரியாகச்சமர்ப்பிக்கவில்லை எனில் வருமானத்துக்கு அதிகமாகபிரீமியம் கட்டப்பட்டிருந்தால், 30% வருமான வரி கட்ட வேண்டி வரும்.
கணவனின் வருமானத்தை, மனைவியின் பெயரில் சேமிக்கலாமா?
மாதந்தோறும் கட்டும் பிரீமியத்தொகையை மனைவிக்கு … கணவன், கணவனுக்கு… மனைவி, பெற்றோருக்கு … மகன் என வருமானம் பெறும் எவரும், பிறர் பெயரில் செலுத்தி, அந்தத் தொகைக்கான வரிவிலக்கைப் பெற்றுக்கொள்ளலாம். அதில் கவனிக்க வேண்டிய விஷ யம், கணவர் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறு கிறார் என்றால் மனைவிக்கு மூவாயிரம் அல்லது ஐயா யிரம்போன்று சிறிய தொகையைத்தான் பிரீமியமாகக் கட்டவேண்டும். தன் வருமானத்தை தாண்டி, மனைவியி ன்பெயரில் முதலீடுசெய்தால், வருமானம் எங்கிருந்து வந்தது என்கிற கேள்வி எழுப்பப்படும். எனவே, கணவன் மனைவிக்கு பிரீமியம் செலுத்திவந்தால் கணவன்பெயரிலேயே காண்பிக்கவேண்டு ம்’’ என்று தகவல்கள்தந்த சதீஷ்குமார், வரி விலக்கை பயன்படுத்திக்கொள்ளுங்கள்! என்று விடை கொடுத்தா ர்.
வரி… சில வரிகள்!
2014-ல் இருந்து ஆண், பெண் பாகுபாடின்றி இருபால ரும் தங்களின் வருட ஊதியம் 2.5 லட்ச ரூபாய்க்கும் மேல் போனால் வரி செலுத்தி ஆகவேண்டும் என்பது கட்டாயம். இதில் பெண்களுக்கென எந்தவித வரிச் சலுகையும் கிடையாது.
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும்போது, உதார ணத்துக்கு 15,000 ரூபாய் சம்பளதாரருக்கு, நிறுவனம் 1,500 ரூபாயும், சம்பளதாரர் 1,500 ரூபாயும் எதிர்கால ஓய்வூ தியத்துக்கு செலுத்தி வர வேண்டும். இதுதான் பிராவிடண்ட் ஃபண்ட் என ப்படும் பி.எஃப். இதில் நிறுவனம் செலுத்தும் தொகைக்கு வரி விலக்கு இல்லை. ஆனால், சம்பளதாரர் செலுத்தும்தொ கை 1.5 லட்சத்துக்குள் செலுத்தும்வரை வரிவில க்கு உண்டு.
சுயதொழில் செய்பவர்கள், அஞ்சலகத்தில் பப்ளிக் பிராவிடண்ட் ஃப்ண்ட்மூலமாக பணம் செலுத்தி, 1.5லட்சம்வரை வரி விலக்குப் பெறலாம்.
80சி ஃபிக்சட்டெபாசிட் ஸ்கீம் (நிரந்தரவைப்பு நிதி – 80C fixed deposit scheme):  இந்த ஸ்கீம் வழியாக டெபாசிட் செய்து வரும் பணத்தை ஐந்து வருடம் வரை இடையில் எடுக்கமுடியாது. இதற்கும் அதிகபட்ச தொகையாக ஒரு வருடத்துக்கு 1.5 லட்சரூபாய் வரிவிலக்கு உண்டு (பள்ளி மற்றும் கல்லூரிக்கட்டணம், பிராவிடண்ட் ஃபண்ட், இன்ஷூரன்ஸ்பிரீமியம் இவை அனைத்தையும்சேர்த்து)
காலக்கெடு
பொதுவாக வருமானவரிக் கணக்கை ஒவ்வொரு வருடமும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.