Wednesday, 23 September 2015

ஓட்டைகளை என்ன செய்வாய்?

✔கோபம்… வேண்டாமே..

📃குட்டி கதை !!


👉மனிதனுக்கு அதிகமா கோபம் வருதால் எந்த நற்பயணும் இருக்காது என்பதற்க்கு இந்த சிந்தனை கதை ஒரு எடுத்துக்காட்டு..

👉ஒரு இளைஞன் இருந்தான் அவனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது.

கோபம் வரும்போது அவன் கத்தி தீர்த்து விடுவான் மேலும் அவன் இயல்பு தன்மைக்கு மாறாக நடந்து கொள்கிறான்.

👉ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.

”இனி மேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.

👉முதல் நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.

ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான்,
மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.

இனி கோபம் வராது என அவன்
அப்பாவிடம் கூறினான்.

👉இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.

45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து
காட்டினான்.

👉“உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய், சுவற்றில் உள்ள ஒட்டைகளை
என்ன செய்வாய்?

உன் கோபம் இது போல பலரை
காயப்படுத்தி இருக்கும் அல்லவா?

👉அந்த இளைஞன் வெட்கித் தலை குணிந்தான். பிறரை காயப்படுத்துவதை நிறுத்தினால்
வாழ்க்கை புதிய அத்தியாயம் பெறும்.

1 comment:

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.