Saturday, 19 September 2015

சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?

Sundar: வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.

Jayakumar: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?
Sundar: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.
Jayakumar: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.
Sundar: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!
Jayakumar: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.
Sundar: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.
Jayakumar: எப்படிச் சொல்றீங்க?
Sundar: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.
Jayakumar: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.
தப்பா நினைக்காதீங்க.
இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.
என் மனைவி போட்ட காபி.

Sundar: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

Jayakumar: குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.

🌷மாரிதாஸ்🌹

1 comment:

  1. Very nice story....I like the humour and the concept also....

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.