Friday, 25 September 2015

அனைத்தும் கரையான் புற்றுகள் அல்ல. எந்தப் புற்றிலும் எந்தப் பாம்பும் இருக்கலாம்

ரவீந்தர் குமாருக்கு 24 வயது. டெல்லி போலீஸ் விசாரித்தபோது, கண் சிமிட்டவும் இல்லை.
கலங்கவும் இல்லை. குறைந்தபட்சம் 15 பேரையாவது கொன்றிருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் சிறுவர், சிறுமிகள். இவனைப் பற்றிய நிஜங்கள் சுடுகின்றன.அனைத்தும் பலாத்காரக் கொலைகள். கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்த கட்டிடத்தில், ஒரு சிறுமியைக் கொன்று பதுங்கியிருந்த அவனைச் சுற்றிவளைத்தது போலீஸ். டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசப் போலீசாரால் 6 ஆண்டு காலமாக ரவீந்தர் தேடப்பட்டு வந்திருக்கிறான்.தனியாக இருக்கும் சிறுமிகள் மட்டுமல்ல; சிறுவர்களையும் இவன் விட்டு வைக்கவில்லை. ‘சிறுவர், சிறுமிகளைக் கடத்தும்போது அழுவார்கள் அல்லது சத்தம் போடுவார்கள். அவர்களது வாயை அமுக்கி மூச்சுத்திணறச் செய்து  சத்தத்தை ஓய வைத்துவிடுவான். பெரும்பாலும் அவர்கள் இறந்துவிடுவார்கள். பொதுவாக அவன் இறந்த உடல்கள் மீது தான் வன்புணர்ச்சியைக் காட்டியிருக்கிறான்’ என்று போலீசார் கூறுகின்றனர்.

எந்தெந்தச் சிறுவர், சிறுமிகளை இவன் கொன்றிருக்கிறான் என்று பட்டியலிடுவது போலீசுக்குச் சிரமம்தான். ஏனெனில், 2012ல் தொழிலாளி ஒருவரின் மகளைக் கடத்திக் கொன்றிருக்கிறான். ஆனால், தொழிலாளர்கள் போலீசுக்குத் தெரிவிக்காமலே சிறுமியை அடக்கம் செய்துவிட்டனர்.‘பணம் இருந்தால் சிறுவர், சிறுமிகளைத் தேடி நான் ஏன் போகிறேன்? சிறுவர், சிறுமிகள்னா ரொம்ப ஈசி... நினைத்த நேரத்துக்குக் கதையை முடிக்கலாம்’ என்று அப்பாவி போல் கூறுகிறான் இந்தக் காமக்கொடூரன். ‘பாலியல் வெறிக்கு ஏழ்மையைக் காரணமாக்குகிறான். அவன் சொல்வதைப் பார்த்தால் கொலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். அவனுக்கே கூட அடையாளம் மறந்து போயிருக்கும் அளவு, கொலைகள் இயல்பாகியிருக்கின்றன’ என்று கூறுகிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.

பெற்றோரின் கண்காணிப்பு வளையத்துக்குள் சிறுவர், சிறுமிகள் இருக்க வேண்டும். பாலியல் சீண்டல்களைப் புரிந்துகொள்ளும் அறிவு, சிறுவர், சிறுமிகளுக்குத் தேவை. தொடுதல் உணர்வில் வித்தியாசங்கள் இருக்கின்றன. இதை உணர்த்த வேண்டிய கடமை, பெற்றோரைச் சார்ந்ததுதான். அறிமுகமான, அறிமுகம் இல்லாத நபர்கள் என்றாலும், குழந்தைகள் யாரிடம் பழகுகிறார்கள், குழந்தைகளிடம் யார் பழகுகிறார்கள் என்பது குறித்து பெற்றோர் அறிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, ஏழைச் சிறுவர், சிறுமிகள்தான் காமக்கொடூரங்களுக்கு அதிகளவில் இரையாகின்றனர்.சிறுவர், சிறுமிகள் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாவது குறித்த விழிப்புணர்வு பெற்றோரிடம் மிகவும் குறைவுதான். இதில், சிறுவர், சிறுமிகளின் கல்வியில் அக்கறை காட்டும் மேல்தட்டு, நடுத்தர வர்க்கப் பெற்றோரும் விதிவிலக்கல்ல.  அனைத்தும் கரையான் புற்றுகள் அல்ல. எந்தப் புற்றிலும் எந்தப் பாம்பும் இருக்கலாம். - See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=78325#sthash.unQoNsQd.dpuf

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.