Tuesday, 25 August 2015

வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

Thanks rightmantra.com
மது தளத்தில் இதுவரை வெளியான MOTIVATIONAL பதிவுகளில்
இது மிக மிக மிக மிக மிக முக்கியமான ஒன்று! இந்த பதிவின் மதிப்பை எல்லாரும் உணர்ந்துகொள்வது கடினம்.
கைக்கடிகாரங்கள் தற்போது மெல்ல மெல்ல அழிந்து, வெறும் அலங்காரப் பொருளாகிவிட்டன. எச்.எம்.டி. நிறுவனம் அதில் தனிக்காட்டு ராஜாவாக உச்சத்தில் இருந்தபோது டைட்டன் உள்ளே நுழைந்தது. டைட்டனை அது எதிரியாக பாவிக்கத் தொடங்கி, தனது தயாரிப்புக்களின் விலையை குறைத்துக்கொண்டே வந்தது. கடைசியில் யாரும் எதிர்பாராமல் நோக்கியா மொபைல் வந்து இரண்டுக்குமே சமாதி கட்டிவிட்டது.
ரெமிங்டன், கோத்ரேஜ் இரண்டும் டைப்ரைட்டிங் மிஷின் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தன. இரண்டும் போட்டி காரணமாக விலை குறைப்பில் ஈடுபட்டன. கடைசியில் அவர்கள் இருவருக்குமே எமனாக வந்தது கம்ப்யூட்டர். டைப்ரைட்டிங்கும் காணாமல் போய், டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டுகளும் தற்போது காணாமல் போய்விட்டன.
Watch
Typewriter
CISCOகணினி தயாரிப்பு நிறுவனங்களான டெல் மற்றும் எச்.பி. இரண்டும் இதே போல போட்டிபோட்டு விலை குறைப்பில் ஈடுபட்டன. ஆப்பிளும் சாம்சங்கும் எதிர்பாராமல் அவர்கள் இடத்தை ஸ்மார்ட்போன்கள் மூலம் பிடித்துக் கொண்டன.
இதே போல கார்ப்பரேட் விமான பயணிகளை ஈர்க்க லுப்தான்சாவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்ஸும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டனர். கடைசியில் CISCO TELEPRESENCE என்கிற தொழில்நுட்பத்தை கொண்டு வந்து இருவரது வருமானத்திற்கும் வேட்டு வைத்துவிட்டது. சிஸ்கோ செய்த புரட்சியால் கார்ப்பரேட் விமான பயணிகள் குறைந்துவிட்டனர். CISCO ஒருவேளை தானும் விமான சேவையை ஆரம்பித்திருந்தால் புலியை பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட கதையாக இன்னொரு கிங் ஃபிஷராக மாறியிருக்கும். வித்தியாசமாக சிந்தித்ததால் இன்று யாராலும் அசைக்க முடியாத ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிவிட்டது.
saregama
Trancendஇதே போல ஆடியோ நிறுவனங்களான சோனியும் சரிகமாவும் மோதிக்கொண்டன. கடைசியில் காலர் ட்யூன்கள் மூலமும் ஹலோ ட்யூன்கள் மூலமும் ஒவ்வொரு மாதமும் பல நூறு கோடிகளை அனாயசமாக குவிப்பது என்னவோ ஏர்டெல் தான்.
பிளாப்பி டிஸ்க் தயாரிப்பாளர்கள் ஆம்கெட் மற்றும் இமேஷன் தங்களுக்குள் போட்டியிட்டுகொண்டபோது மோசர்பேர் மற்றும் சாம்சங் ஆகியவை சி.டி., டி.வி.டி. மூலம் மென்பொருள் மார்கெட்டை கைப்பற்றின. ஆனால் அவர்கள் வைத்திருந்த மார்க்கெட்டை தற்போது டிரான்ஸ்செண்ட், சான்டிஸ்க் ஆகியவை கைப்பற்றிவிட்டன. இப்போது பல நிறுவனங்கள் பிளாஷ் டிரைவ் சந்தையில் இருந்தாலும் டிரான்ஸ்செண்ட், சான்டிஸ்க் அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை. காரணம் கணினியில்  யூ.எஸ்.பி. (USB) அறிமுகமாகி பாப்புலர் ஆகும்போதே மேற்கூறிய இரண்டும் சந்தைக்குள் தங்கள் தயாரிப்புக்களை களமிறக்கிவிட்டுவிட்டன.
வி.ஜி.பன்னீர்தாஸ் & கோவும், செல்லமணி & கோவும், விவேக் & கோவும் மாறி மாறி ரேடியோக்களில் விளம்பரம் செய்துகொண்டிருக்க, சத்தம்போடாமல் ஃபிளிப்கார்ட் உள்ளே நுழைந்து எலக்ட்ரானிக் சந்தையை கைப்பற்றிவிட்டது.
சினிமாவிலும் இதே போன்ற உதாரணங்கள் உண்டு. மிக பெரிய ஜாம்பவான் இயக்குனர்கள், தமிழ் சினிமாவில் புது ரத்தம் பாய்ச்சியவர்கள் என்றெல்லாம் கூறப்பட்ட பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்கள் எல்லாம் குறிப்பிட்ட வருடங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை. காரணம் மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் தங்களை அப்டேட் செய்துகொள்ளாதது தான். ஆனால் எத்தனையோ புதுப் புது இயக்குனர்களின் படையெடுப்பிலும் ஷங்கரும், மணிரத்னமும் தாக்கு பிடிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்கள் மாறும் ட்ரெண்டுக்கு ஏற்ப தங்களை, தாங்கள் படம் எடுக்கும் தொழில்நுட்பத்தை, தங்களை மேம்படுத்திக்கொள்கிறார்கள் என்பது தான்.
இதே போல பல உதாரணங்கள் உண்டு.
நாம் அமெரிக்காவை பார்த்து, ஐரோப்பாவை பார்த்து பயப்படுகிறோம். ஆனால் உண்மையில் நமக்கு அனைத்து வழிகளிலும் (உள்நாட்டு சந்தை, பாதுகாப்பு etc) அச்சுறத்தலாக இருப்பது சீனா தான்.
உங்கள் போட்டியாளர்களை உங்கள் எதிரிகளாக பாவிக்கவேண்டாம். அவர்கள் என்றுமே உங்கள் எதிரிகள் அல்ல. இன்றைய எதிரிகள் உங்கள் கண்களுக்கு தெரியாமல், எதிர்பாராத இடங்களிலிருந்து தான் வருவார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க ஒரே வழி INNOVATION எனப்படும் புதுமை தான்.
உங்கள் போட்டியாளர்களை உங்கள் எதிரிகளாக பாவிக்கவேண்டாம். அவர்கள் என்றுமே உங்கள் எதிரிகள் அல்ல. இன்றைய எதிரிகள் உங்கள் கண்களுக்கு தெரியாமல், எதிர்பாராத இடங்களிலிருந்து தான் வருவார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க ஒரே வழி INNOVATION எனப்படும் புதுமை தான்.
மாறும் சூழலுக்கேற்பவும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்பவும் தொழில்நுட்பரீதியாக தங்களை மேம்படுத்திக்கொள்ளாத எந்த ஒரு வியாபாரமும் நீடித்து நிற்க முடியாது.
- See more at: http://rightmantra.com/?p=21311#.dpuf

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.