Tuesday, 4 August 2015

கலாம் வசித்த டெல்லி இல்லம் பூட்டி சீல் வைப்பு!

 கலாம் வசித்த டெல்லி இல்லம் பூட்டி சீல் வைப்பு!

ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் விலைமதிக்க‍ முடியாத சொத்துக்கள்! – கலாம் வசித்த டெல்லி இல்லம் பூட்டி சீல் வைப்பு!
இராமேஸ்வரத்தில் பிறந்து உலகமே போற்றும் வகையில் விளங்கியவ ரும். மறைந்த குடியரசு முன்னாள் தலைவருமான‌ அப்துல்கலாம், தன்  குடும்பத்தில் கடைக்குட்டி. அந்த வீட்டில்
முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயரே மூத்தவர். அப்துல் கலாமின்பெயரில் உள்ள சிலசொத்துக்கள் உள்ளன.  தனது சொத்துகள் அனைத்தையும் அண்ணனிடமே பராமரிக்க அப்துல் கலாம் கூறியிருந்தார்.
அதேபோல் அவரது புத்தகங்கள், படைப்புகள் மூலம் கிடைக்கும் ராயல்டி யும் அவரது மூத்த சகோதரர்  மரைக்காயரிடமே இனிமேல் வழங்க ப்படவுள்ளது. தற்போது 99வயதுநிரம்பிய  மரைக்காயர் ராமேஸ்வரத்தில் தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். அப்துல்கலாமுக்கு என்று வாரிசுகள் இல்லாத காரண த்தினால், தனது சொத்துக்கள் மற்றும் ராயல் டிகளுக்கு வாரிசாக தனக்குஎல்லாமுமாக இருந்த சகோத ரரையே  நியமித்துள்ளார். ஆனால் இதற்கென்று தனியாக உயில் எழுத வில்லை.
கலாமின் மிகப் பெரிய சொத்தே அவரது நூல்கள்தான். கடைசி வரை விலைமதிப்பில்லாத சொத்தாக புத்தகங்களைத்தான் அவர் கருதினார்.டெல்லியில் கலாம் வசித்துவந்த ராஜாஜி மார்க் இல்லம் தற்போது பூட்டி வைக்கப் பட்டுள்ளது. அவரது அறையும்கூட பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.  கலாம் உறவி னர்கள் டெல்லி வரும் போது அவர்கள் முன்னிலையில் அந்த அறையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கலாம் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் அக்னி சிறகுகள் மட்டும் 10 லட்சம் பிரதிகள் விற்றுள்ளது. அப்துல் கலாமே மாணவர்களுக்கு இந்த புத்தகத்தைதான் பரிசாக அளிப்பார். அந் தளவுக்கு அக்னி சிறகுகள் மீது கலாமுக்கு ஈடுபாடு. கலாமின் நூல்கள்மூலம் கிடைக்கும் அனைத்து ராயல்டியும் இனி அவரது மூத்த சகோதரருக்கு போக உள்ளது. கலாமின்  மறைவால் அவரது  நூல்களை வாங்க மக்கள் மிகுந்த ஆர்வர் காட்டி வருகின்றனர். இதனால் ராயல்டி தொகையு ம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கலாமின் உதவியாளர் ஒருவர் இதுகுறித்து கூறுகை யில், ”கலாம்  தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வள வு உதவி தன்னை சார்ந்தவர்களுக்கு செய்து வந்துள் ளார். பெங்களூருவில் இருந்த அடுக்குமாடி குடியிருப் பை கூட தனது பேத்தி (சகோதரர் பேத்தி ) பெயருக்கு எழுதி வைத்து விட்டார்.
அதுபோல் தன்னிடம் வேலைபார்ப்பவர்களுக்கும் அப்துல்கலாம் தேவை யறிந்து உதவி வந்துள்ளார். வருடா வருடம் ராமேஸ்வரத்தில் உள்ளஇஸ்லாமிய ஜமாத்துக்கு ரம்ஜான் சமயத்தில், நோன்பு கஞ்சி ஊற்றுவ தற்காக தனது சேமிப்பில் இருந்து  ரூ. 1.10 லட்சம் அனுப்பி  வந்துள்ளார்.
தனது சேமிப்பையும் கூட அவர் அவ்வப்போது தனது உறவினர்களுக்குப் பிரித்துக்கொடுத்து விடுவார். வங்கி யிருப்பு என்று பெரிதாக எதுவும் இல்லை” என்றார்.
செத்தும் கொடுத்தான் சீதக்காதி, அப்துல் கலாம் உருவ த்தில்  நம்முடன் மீண்டும் ஒரு முறை வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
எளிமைக்கு பெயரெடுத்த‍ காமராஜர் தனக்காகவும் தனது குடும்பத்தாருக் காAbdul Kalamகவும் சொத்துக்களையோ அல்ல‍து பணத்தை சேர்த்துவைக்க‍வில்லை
ஆனால் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களது விலை மதிக்க‍ முடியாத சொத்துக்களாக வைத்திருந்த‌ அரிய வகை நூல்களை விட்டுச் சென்றுள்ளார்.
காந்தியடிகளாரது சீரிய வழியில் …. 
காமராஜர், மற்றும் அப்துல் கலாம்
வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!  வாழ்க!  வாழ்க!  வாழ்க!  வாழ்க!

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.