Thursday, 6 August 2015

ஆபத்து, ஆபத்து… ஆபத்து!

ஆபத்து, ஆபத்து… ஆபத்து! – இனி திக் திக் திகிலில் நீங்கள்…!- எச்ச‍ரிக்கை

இன்றைய தேதியில் அனைத்து விவகாரங்களும் அதாவது செய்தியிலி ருந்து வங்கிப் பணிகள் வரை அனைத்திற்கும்
ஆண்டிராய்ட்போன் என்ற நிலை வந்து விட்டு. மனிதனின் சோம்பேறித் தனத்தைப் பயன்படுத்தி, வங்கியிலிருந்து, சில்லறை வியாபாரிகள்வரை, இந்த வசதியைத் தாங்களும் பயன்படுத்தி வர்த்த கத்தை விரிவாக்குகிறார்கள். ஆண்டிராய்ட் இத ற்கு மட்டு மின்றி வாட்ஸ்அப் செய்திகள், வீடியோ படங்கள், செல்ஃபிகள், குறுஞ்செய்திகள் என்று தனிப்பட்ட நபருக்கு முக்கியமான பல விஷயங்கள் போனில் இருக்கின்றன. இவை யாருக்கும் தெரியவராது என்ற நம்பிக்கையில் பலவிஷயங்கள் நடக்கின்றன. எல்லாவற்றிற்கும் ஒரு தரவுச்சொல் (Password) உருவாக்கினால் போதும் என்று நினைக் கின்றனர்.
ஆனால் ஆண்டிராய்ட் போன், எதுவாக இருந்தாலும் ஒரு குறுஞ்செய்தி அதனுடன், ஒருசிறு வீடியோப்படத்தை அனுப்புவதன் மூலம், ஆண்டிராய்டை ‘உடைக்க’முடியும் என்றநிலை ஏற்பட்டிருக்கிற து. அதாவது குறிப்பிட்ட ஒருகுறுஞ்செய்தி, அத னுடன் ஒரு குறும்படம் உங்களுக்கு அனுப்பப் படும். அதைத் திறந்தாலோ என்னவென்று பார்த் தாலோ, ‘ஹார்கர் ‘ (Hacker) உள்ளே நுழைந்து விடுவார்.
அதன் பிறகு என்ன? உங்களது போனில் உள்ள அனைத்துத் தகவல்கள், படங்களை அவர் தனது ஃபோனுக்கு அல்லது ஹார்டுவேருக்கு (Hard- ware)மாற்றிக்கொள்ளலாம். இத்தகவலைசமீபத்தி ல்தான் சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஜிம்பெரியம் (Zimperium) வெளியிட்டிருக்கிறது. ஆண்டிராய்ட் போன்களை ஹாக்செய்து உள்ளே வருவதற்கு ஸ்டேஜ் ஃப்ரைட் (Stage fright)என்ற சங்கேத வார்த் தையைப் பயன்படுத்துகிறார்கள் என்று மட்டும் தெரிய வந்திருக்கிறது. இதை நீங்கள் முழுவதுமாகப்பார்க்காவிட்டாலும்கூட ‘அறிவிக்கை’ (Notification) பகுதியில் பார்த்தாலும் போதும், தாக்கும் ஆயுதம் உள்ளே வந்து விட்டது என்று அர்த்தம். இதுவரையில் இதற்கு மாற்று இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.
ஆண்ட்ராய்ட்போன்களின் பாதுகாப்பு அவர்களை உடைக்கமுடியும் என் று கண்டுபிடித்திருக்கும் ‘ஹாக்கர்கள்’ இதை பயன்படு த்தி, மற்றவர்களை மிரட்ட ஆரம்பிக்கும்போதுதான், இதற்கான மாற்று கண்டுபிடிக்கவும் ஒரு வழி பிறக்கும் என்று கூறுகிறார்கள். அதுவரையில் உலகிலுள்ள 950 மில்லியன் ஆண்டிராய்ட் ஃபோன்களின் சொந்தக்காரர்களுக்கும் ‘திக்’, ‘திக்’ தான்.
இணையச் செய்தி

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.