Sunday, 9 August 2015

தற்கொலைக்கு அனுமதி கேட்கும் 70 டாக்டர்கள்

போபால் : மத்திய பிரதேசத்தின் வியாபம் ஊழலில் 70 டாக்டர்கள்
மற்றும் மருத்துவ மாணவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்ட நடவடிக்கைகளால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதால் தங்களின் எதிர்காலம் இருண்டுள்ளதாகவும், அதனால் தாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த கடிதத்தின் நகல்கள் பிரதமர் அலுவலகம், தலைமை நீதிபதி, மத்திய பிரதேச ஐகோர்ட், தேசிய மனித உரிமைகள் ஆணையம், உள்துறை அமைச்சகம் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.