Wednesday, 5 August 2015

இறந்தும் ஒளி கொடுத்த 3 வயது அஞ்சனா

கேரளாவில் முதன்முறையாக 3 வயதான பெண் குழந்தையின்
உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் உருக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே கரகுளம் ஏனிகரா நிலவூர்தட்டம் பகுதியை சேர்ந்தவர் அஜீத். இவரது மகள் அஞ்சனா. வீட்டில் விளையாடிபோது அஞ்சனா திடீர் என்று மயங்கி விழுந்தார். பின்னர் அவரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமிக்கு மூளை சாவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த நிலையில் அஞ்சனாவின் கண்கள் மூலம் தற்போது 2 மாணவர்கள் பார்வை பெற்றுள்ளனர். 2 மாணவர்களும் இடது கண்ணில் பார்வை இழந்து தவித்தவர்கள். தற்போது அஞ்சனாவின் கண்கள் மூலம் இவர்கள் உலகை தெளிவாக காணும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 2 மாணவர்களுக்கும் திருவனந்தபுரம் அரசு கண் மருத்துவமனையில் இதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.