Saturday, 15 August 2015

ஆகஸ்ட் 15-ஆனந்த சுதந்திரம்

ஆகஸ்ட் 15-ஆனந்த சுதந்திரம்

எங்கள் 
சுதந்திர மலர் 
சும்மா 
பூத்துவிடவில்லை! 

எங்கள் மாமனிதர்களின் 
மரண தண்டனையில் 
மலர்ந்த மலரிது! 

ஆங்கிலேயனின் 
துப்பாக்கித் துளையிலும் 
வேர்விட்ட 
விடுதலை இது! 

அன்று 
கட்டபொம்மன் 
வரி கட்டாமல் 
வீரத்தை விதைத்தார்! 

அதன்பின் 
பாரதி 
வரி கட்டியே 
தீரத்தை வளர்த்தார்! 

அப்போது அடித்த 
ஆதிக்கப் புயலை 
எங்கள் 
தமிழ்க் கப்பலொன்றும் 
தள்ளிப் பார்த்தது ! 

எங்கள் 
சுதந்திரக் குயில்களை 
சுடத் தெரிந்தவர்களால் 
அதன் கீதத்தை 
கிழிக்க முடியவில்லை! 

எங்கள் 
சுதந்திர பூவைச் சுற்றி 
சொல்லமுடியாத 
முள்ளிருந்தும் 
காந்தி போட்ட 
கணக்கால் 
காயம் படாமல் 
பறித்தோம்! 

இன்று எங்கள் 
சுந்தர பூமியில் 
சுதந்திர மணம் 
சுகமாய் வீசுகிறது! 

இனி 
எங்கள் திசைகளை 
யார் திருட முடியும்! 

இனி எங்கள் 
பருவ காற்றுகூட 
பாதை மாறாது ! 

இனி எங்கள் 
வறண்ட நிலங்களில் 
வசந்தங்கள் 
வரையப் படலாம் ! 

நாங்கள் இனி 
சாதிகளையும் 
சலவை செய்வோம்! 

இனி மதங்களையும் 
மாலை கட்டுவதே 
எங்கள் வேலை! 

இனி 
இந்திய நதிகள் 
தனித்தனியாய் 
அழாது! 
அவை என் 
தாய்த் திருநாட்டின் 
ஒவுவொரு குளத்திலும் 
கூடி கும்மி அடிக்கும்! 

இந்த மண்ணில் 
பாரதம் 
மாநகரமாய் மாறும் 
மகத்துவம் நடக்கும் 
அப்போது 
எங்கள் வீடுகளுக்கு 
கலாச்சாரக் கலவைகளால் 
கதவுகள் செய்வோம்! 

அணுகுண்டு 
அது எங்களுக்கு 
கோலிகுண்டு 
அகிம்சையே 
எங்கள் ஆயுதம்!

2 comments:

  1. அருமை அருமை. இஃது என்னை மெய்சிலிர்க்க வைத்த கவிதை.

    சுதந்திர வேள்விக்கு சமித்துக்குச்சிகளாகிய - நம்
    சரித்திர நாயகர்களுக்கு
    என்
    இராஜ வணக்கம்.

    ReplyDelete
  2. நம்
    கொடிமரத்தின்
    வேர்களுக்கு
    வீர வணக்கம்.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.