Monday, 13 July 2015

தந்திரத்தால் தடுமாற்றம்! - வாசகர்

தந்திரத்தால் தடுமாற்றம்!

‘பிரபலமாக உள்ள துறையில் ஏமாற்று வேலைகள் அதிகமாக இருக்கும் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் ரியல் எஸ்டேட்' என்று எனக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர் அடிக்கடி சொல்வார். ஆனால், அவரே ஒருநாள் ரியல் எஸ்டேட் டில் ஏமாந்தார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் களில் பெரும்பாலானவர்கள் பல இடங்களைக் காட்டி பலவாறு நம்மை வாங்கத் தூண்டுவார்கள். அவர்களின் அந்தத் தந்திரத்தாலேயே ஏமாந்தவர்கள் பலபேர். அப்படித்தான் இவரும் ஏமாந்து போயிருக்கிறார். தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம், தான் நிலம் வாங்க இருப்பதாகச் சொல்ல, அவரோ அவருக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரிடம் இவரைச் சிக்க வைத்திருக்கிறார்.

அந்த ரியல் எஸ்டேட் வியாபாரி ஒருநாள் இவர்களுக்காகத் தனியே கார் ஒன்றை ஏற்பாடு செய்து, அன்றைய தினத்துக்கான அனைத்து செலவுகளை யும் அவரே செய்து தன்னிடமுள்ள பல இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டி இருக்கிறார். எந்த இடமும் பிடிக்காமல் போனாலும், நமக்காக இவர் இவ்வளவு செலவு செய்கிறாரே என நினைத்து ஓர் இடத்தைப் பதிவு செய்திருக்கிறார். ஆனால், அந்த இடத்தில் இன்று வரை ஆட்கள் நடமாட்டமே இல்லாமல் இருக்கிறது.



நிலத்தை விற்க நினைப்பவர்கள் ஆயிரம்தான் சொன்னாலும் அந்த இடம் குறித்த விவரங்களைத் தனிப்பட்ட முறையில் விசாரிக்காமல் வாங்கக் கூடாது. அதேபோல, விற்பனை செய்பவரின் மீது பரிதாபப்பட்டு சொத்தை வாங்கக் கூடாது.

உஷார் வழிகள்!

பொதுவாக வீடு வாங்குகிறவர்கள், முக்கியமாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குகிறவர் கள் உடற்பயிற்சி நிலையம் இருக்கிறது, நீச்சல்குளம் இருக்கிறது என்றெல்லாம் நினைத்து, அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால், அதை நாம் பயன்படுத்துவோமா என்றெல்லாம் அந்த நேரத்தில் யோசிக்க மாட்டார்கள்.



சில நேரங்களில் நிலத்துக்கான தேவை இருக்காது. ஆனால், நல்ல வருமானம் தரும் முதலீடு என்று பிறர் சொல்லக் கேட்டு, வட்டிக்கு கடன் வாங்கியாவது நிலத்தில் முதலீடு செய்து ஏமாந்து போவார்கள். இதுபோன்ற தருணங்களில் கொஞ்சம் உஷாராக இருந்தால் ஏமாற்றத்தைத் தவிக்கலாம்”

1 comment:

  1. எத்தனையோ படிக்காத பாமரர்களை ஏமாற்றி நிலத்தை அபகரித்து பணம் தராமல் ஏமாற்றி வரும் ஆசாமிகளை பற்றி ஏமாந்தவர்கள் என்னிடமே சொல்லியிருக்கிறார்கள்...உஷார்...

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.