Saturday, 11 July 2015

தேர்தல் தேறட்டும்… (பொறுப்பில் உள்ள‍வர்களின் சிந்தனைக்கு …)

தேர்தல் தேறட்டும்… (பொறுப்பில் உள்ள‍வர்களின் சிந்தனைக்கு …)

தேர்தல் தேறட்டும்… (பொறுப்பில் உள்ள‍வர்களின் சிந்தனைக்கு …)
(இந்த (ஜூலை) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள‍ அற்புத தலையங்கம்)
இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய சவால் தேர்தல், 125 கோடி மக்க‍ளை நிர்வகிக்க‍ உலகிலேயே மிகச்
சிறந்த தேர்தல்முறையை அறிமுகப்படுத்தி வெற்றியும்பெற்றிருக்கிற பெருமை நமக்குண்டு.
‘ஜ‌னநாயகத்தில் நாம் எல்லோரும் மன்ன‍ர்’ என்பதை மெய்ப்பித்துக் காண்பித்திருக்கிறது நமது தேர்தல் முறை. அதனால்தான் திரைப் பட நட்சத்திரங்கள் முதல்வராக முடிகிறது… தேனீர் கடை வைத்த‍வர் பிரதமராக முடிகிறது. தேர்தல் முடிவை மக்க‍ள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று எல்லோரும் ஏற்றுக் கொள்கிற அரசியல் முதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
டி.என்.சேஷன் என்ற ஒற்றை மனிதரால் கொண்டு வரப்பட்ட‍ தேர்தல்சீர்திருத்த‍ம் தேர்தல் முறையில் அதிரடி மாற்ற‍ ங்களை ஏற்படுத்தியது. குற்ற‍ம் நிரூபிக்க‍ப்பட் டால் தேர்தலில் நிற்கத் தடை… தேர்தலில் நிற்பவர்கள் சொத்துக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்.. தேர்தலுக்கு இவ்வ‍ளவுதான் செலவு செய்யவேண்டும்..தேர்தல்அறிவிப்புக்கு பிறகு புது திட்டங்கள் செயல்படுத்த‍க்கூடாது.. வாக்கு ப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது கேமராமூலம் கண் காணிப்பு என பல விதிமுறைகள் இருந்தபோதிலும் இன்றையதேர்தல் நடத்த‍ப்படுகிற விதமும் அதற்கான திட்ட‍ங்களும் கேலிக்கூத்தாகவும், தேவையற்ற‍தாகவும் அமைந்துள்ள‍ன•
தேர்தல் பிரச்சாரமுறையில் முதலில் மாற்ற‍ம் வேண்டு ம். ஒவ்வொரு கட்சியும் போட்டிப் போட்டுக்கொண்டு பேனர் வைத்து… போஸ்டர் ஒட்டி.. பிரியாணி தந்து.. குடிக்க‍ வைத்து… கும்மாளமிட்டுபோக்குவரத்தை நிலை குறையச் செய்து… காது கிழிய பேசி எப்ப‍டா தேர்தல்முடியும் என்றளவிற்கு நடக்கும் கேலி க்கூத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க‍வேண்டும். வெளிநாடுக ள்போல ஊடகங்கள்மூலம் மட்டுமே பிரச்சாரம் நடைபெற சட்ட‍ம் இயற்ற‍ப்படவேண்டு ம்.
எவ்வ‍ளவு பெரிய மனிதரானாலும்… எந்தக் கட்சியை சேர்ந்தவரென்றாலும் ஒருவர் 2 முறைக்கு மேல் ஒரு பதவிக்கு போட்டியிட முடியாதபடி வரைமுறை வகுக்க‍ப்படவேண்டும். இடைத்தேர்தல்கள் என்ற பெயரில் நம் தேசமெங்கும் நம் மக்க‍ளின் வரிப்பணம் நேரம்,அமைதி எல்லாம் நாசமாகிக்கொண்டிருக்கிறது. பொதுத்தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னதாக எந்த பதவிக்கும் எந்த தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்த‍க் கூடாது. மாறாக பக்க‍த்து தொகுதி பிரதிநிதிக்கு அந்த தொகுதியை நிர்வகி க்கும் பொறுப்பை தர வேண்டும். (ஒரு அமைச்ச‍ர் இரண்டு மூன்று துறைகளை நிர்வகிக்க‍வில்லையா?)
வாக்குறுதிகள் என்ற பெயரில் அறிவிக்க‍ப்படும் இலவசத் திட்ட‍ங்களுக்கு உரியபணம் எப்ப‍டி வரும் என்பதை தேர்தலுக்கு முன்னரே ஒவ்வொருகட்சியும் முறைப்படி அறிவிக்க‍வேண்டும். கல்வி, மருத்துவம் , உணவு தவிர்த்து அனைத்து இலவசங்களும் தடைச்செய்யப்பட வேண்டும். 

ப‌லரை ஏமாற்றி சிலருக்கு மட்டும் சில்லரை யைத்தேடித்தரும் தற்போதையதேர்தல் முறை … சிலரையும் மாற்றி, பலருக்கும் ஏற்ற‍ம் தருவதாக மாற வேண்டும் என்பதே உரத்த‍ சிந்தனையுள்ளோரின் ஒரு மித்த‍  வேண்டுகோள்!

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.