Saturday, 11 July 2015

மொபைல் வாங்கலையோ மொபைல்!!!


தனிப்பட்ட முறையில், நாம் அதிக அளவில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முதலீடு செய்ய விரும்புவதில்லை. முதலில் அவ்வளவு மதிப்பானதா? என்று சந்தேகம் வரும். இரண்டாவது மற்ற பொருட்களை காட்டிலும் ராக்கெட் வேகத்தில் விலை குறைந்து விடும். அதன் பிறகு ஒன்றும் செய்யவும் முடியாது.

எப்பொழுதுமே சில நிறுவனங்கள் புதிய மாடல்களை சந்தைக்குள் கொண்டு வரும் போது பழைய ஸ்டாக்குகளை நல்ல சலுகைகளில் வழங்கி சீக்கிரம் விற்க முனைவார்கள். இதனால் புதிய மாடல்களை அதிக அளவில் பிரபலப்படுத்த முடியும் என்பது ஒரு நம்பிக்கை.

இது மொபைலுக்கும் சாலப் பொருந்தும். மொபைலைப் பொறுத்த வரை புது மாடல்கள் வரும் வேகம் என்பதும் மிக அதிகம்.

அதனால் ஒரு மொபைல் மாடல் வரும் போது அதற்கு முந்தைய இரண்டாவது மாடலை சென்று வாங்குவது நல்லது. இதனால் விலையும் கணிசமாக குறைந்து இருக்கும். அதே நேரத்தில் தேவையான அம்சங்களும் மொபைலில் இருந்து இருக்கும்..

சாம்சங் நிறுவனத்தில் இருப்பதால் கிடைத்த அனுபவங்களுள் இதுவும் ஒன்று.

அந்த வகையில் சந்தையில் கடந்த வருடம் வரை மிக அதிக விலையில், அதிக எண்ணிக்கையில் விற்று தற்போது நல்ல விலை சரிவை சந்தித்து இருக்கும் இரு மொபைல்களை பற்றி பார்ப்போம்.

Xiaomi Redmi 2
இந்த மொபைல்  Xiaomi நிறுவனத்தால் விற்கப்படுகிறது. இது ஒரு வெற்றிகரமான மாடல்.

இது வரை 13 மில்லியன் மொபைல்கள் விற்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கடந்த மாதம் வரை 6,999 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த மொபைலின் விலை தற்போது ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு 5,999 ரூபாய்க்கு தருகிறார்கள்.

LTE, நல்ல ஸ்க்ரீன், அதிக நேரம் நீடித்து நிற்கும் பேட்டரி போன்றவை முக்கியமான நேர்மறை விடயங்கள்  எல்லாவற்றையும் விட கொடுக்கிற காசுக்கு ஏற்ற பொருள்.

RAM 1GB, நினைவகம் 8GB, 32GB வரை SD card போட்டுக் கொள்ளலாம்.

கேமரா மட்டும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்து இருக்கலாம்.

இந்த மொபைல்  அமேசான், ப்ளிப்கார்ட் எல்லாவற்றிலும் ஒரே விலை தான். சேவையின் தரம் கருதி அமேசான் இணைப்பை மட்டும் கீழே தந்துள்ளோம்.

Mi Redmi 2 (White) in Amazon for Rs.5,999 

Apple iPhone 4sஎங்கள் நிறுவனத்துடன் அடிக்கடி சண்டை போடும் நிறுவனம். ஆனால் தரம் என்று பார்த்தால் ஆப்பிளை மிஞ்ச இன்னும் கொஞ்சம் காலம் ஆகலாம். ஆகாமலும் போகலாம்:)

ஐபோன் 6 வெளிவந்த பிறகு நான்கை சீக்கிரம் விற்க பார்க்கிறார்கள். அதனால் கடந்த வருடம் வரை இருபதாயிரம் ரூபாய்க்கு அருகில் விற்றுக் கொண்டிருந்த மொபைலை தற்போது 13,000 ரூபாய்க்கு அருகில் கொண்டு வந்துள்ளனர்.

இந்த மொபைலின் தரத்தை பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.

512 MB RAM, 8 GB உள்ளக நினைவகம், 8 மெகா பிச்செல் கேமரா கொடுத்துள்ளார்கள்.

ஐபோன் வைத்து இருந்தால் கெத்தாக இருக்கும் என்று நினைப்பவர்கள் தாரளமாக வாங்கலாம். விலையின் மதிப்புக்கேற்ற பொருள்.

அமேசானில் 13,600க்கு அருகில் கிடைக்கிறது. இணைப்பு இங்கே..

Apple iPhone 4S in Amazon for Rs.13,600 

ஸ்னேப்டீலில் 13,300க்கு அருகில் கிடைக்கிறது. இணைப்பு இங்கே..

Apple iPhone 4S in Snapdeal for Rs.13,300 

2 comments:

 1. திகில் கதை
  மூன்று நண்பர்கள் 100 மாடிகள்
  கொண்ட ஒரு பில்டிங்கில் தங்கி
  இருந்தனர்.ஒரு நாள் லிப்ட் வேலை
  செய்யவில்லை.

  மூவரும் கதை சொல்லிக் கொண்ட
  மாடி ஏறி விடலாம் என் பிளான்
  செய்து கொண்டு ஏறினார்கள்.

  முதல் நபர் 50 ஆவது மாடி வரை
  ஒரு ACTION கதை சொல்லி கொண்டே
  வந்தார்.

  இரண்டாவது நபர் 99 ஆவது மாடி
  வரை ஒரு COMEDY கதை சொல்லி
  கொண்டே வந்தார்.

  மூன்றாவது நண்பர் மிகவும் திகிலான
  கதையை ஒரு வரியில் சொன்னார்.ரூம்
  சாவியை கார்லயே மறந்து விட்டு வந்துட்டேன்.

  ReplyDelete
 2. என் ப்ரெண்ட்டு கார்த்திக் புதுசா LED TV வாங்க போனான்...

  எனக்கு நிறைய விஷயம் தெரியும்னு நம்பி... என்னையும் கூட வர சொன்னான்...

  ( அவன் தலையெழுத்து அப்படி இருந்தா
  நாம என்ன பண்ண முடியும்..?!! )

  சரினு போனேன்...

  கடையில சாம்சங், சோனி ரெண்டு டி.வி பிடிச்சி இருந்தது... எதை வாங்கறதுனு ஒரே குழப்பம்...

  என்கிட்ட கேட்டான்..

  "சாம்சங் வாங்கிக்கோ..!! "

  " மச்சி... அதைவிட சோனி 4 ஆயிரம் ரூபா ஜாஸ்திடா.. அதையே வாங்கிக்கலாமே..!! "

  " பணத்தை வெச்சி எல்லாம் தரத்தை எடை போடதே... நீ கம்முன்னு சாம்சங்கே வாங்கு..!! "

  " இல்ல மச்சி... என்ன இருந்தாலும் சோனி ஜப்பான் கம்பெனி.. சாம்சங்.. கொரியா இல்ல..!! "

  " இன்னிக்கு டெக்னாலஜி எங்கையோ போயிடுச்சு... இப்ப போயி ஜப்பான், கொரியானு பேசிட்டு.... "

  "சரி.. முடிவா என்ன சொல்ற..?!!

  " முடிவா இல்ல... நான் ஆரம்பத்துல இருந்து ஒண்ணே தான் சொல்லிட்டு இருக்கேன்.. சாம்சங் எடு...!! "

  " ஓ.கே...!! நீ சொன்னா எதாவது விஷயம் இருக்கும்...!! அதையே வாங்கறேன்.. "

  33,000 ரூபாய்க்கு பில் போட்டு சாம்சங் டிவியை வாங்கி.... கார்ல வெச்சிட்டு இருக்கும்போது கார்த்திக் கேட்டான்.....


  " அது ஏன் மச்சி... இந்த டிவியே தான் வங்கணும்னு ஒற்றை கால்ல நின்னே..?!! "

  " ஹி., ஹி., ஹி., இந்த டி.வில தானே தமன்னா பாட்டு ஓடிச்சி....!!! "

  "அட... நாதாரி பயலே...."

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.