Saturday, 11 July 2015

பொறியியல் படித்துப்பார்!!!!

படித்ததில்மிகவும்


படித்ததில் மிகவும் ரசித்தது ......

பொறியியல் படித்துப்பார்

உன்னைச் சுற்றி
நட்பு வட்டம் தோன்றும்
உலகம் விரியும் 
ராத்திரியின் நீளம் சுருங்கும்
உனக்கும் கதை எழுத வரும்
தலையெழுத்து ஊசலாடும்
External தெய்வமாவான்
Assignment எழுதியே 
கை உடையும்
கண்ணிரண்டும் பிதுங்கும்

பொறியியல் படித்துப்பார்

புத்தகமே தலையணையாக்குவாய்
பல முறை bulb வாங்குவாய்
Study leave வந்தால் 
வருஷங்கள் நிமிஷமென்பாய்
Semester வந்துவிட்டால் 
நிமிஷங்கள் வருஷமென்பாய்

Arrear வைத்துப்பார் 
ஆயம்மாகூட உன்னை கவனிக்கமாட்டார் - ஆனால்
கல்லூரியே உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்
Result அன்று
வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்
உன் அப்பா உன் HOD
அந்த staff இந்த princi 
எல்லாம் 
எமனின் ஏற்பாடுகள் என்பாய்

பொறியியல் படித்துப்பார்

இருப்பிடம் அடிக்கடி
இடம் மாறி இருக்கும்
நிசப்த அலைவரிசைகளில்
faculty குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்
உன் விதியே விளையாடி 
உனக்கெதிராய் அம்பு விடும்
Padips image- ஐ
groupstudy கிழிக்கும்
Syllabus 
நைல் நதியாய் பெருக்கெடுக்கும் 
மதிப்பெண்கள் மட்டும் 
சஹாராவாகும்
கனவுகள் சமுத்திரமாகும்
பின் outsourcingக்குள் 
கனவுகள் அடங்கும்

பொறியியல் படித்துப்பார்

Test எழுதி எழுதியே 
சோர்ந்துபோக 
உன்னால் முடியுமா?
Project guide-இன் 
இம்சையை அடைந்ததுண்டா?
Border line இல் passஆகிற சுகம் 
அறிந்ததுண்டா?
ஒரே நாளில் syllabus cover செய்ய தெரியுமா?
First bench ஐ தனிமையாக்கவும் 
Last bench ஐ சபையாக்கவும் 
உன்னால் முடியுமா?
Depression அடைய வேண்டுமா?
பல மாதம் சென்னையில் 
பணி தேடும் படலத்தில்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?

பொறியியல் படித்துப்பார்

சின்னச் சின்ன bitகளில் 
சிலிர்க்க முடியுமே
அதற்காகவேனும்
Page நிரப்பியே
pass ஆக முடியுமே 
அதற்காகவேனும்
Breakage என்ற சொல்லுக்கும்
Caution deposit என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே
அதற்காகவேனும்
Arrear வைத்துக்கொண்டே 
படிக்கவும் முடியுமே 
படித்துக்கொண்டே 
Arrear எழுதவும் முடியுமே
அதற்காகவேனும்
பொறியியல் படித்துப்பார்

இறுதி ஆண்டு முடிக்கையில் 
bank manager சட்டை பிடித்தாலும் 
உறவுகள் 
உயிரெடுத்தாலும் 
விழித்துப் பார்க்கையில்
உன் கனவுகள்
களவு போயிருந்தாலும்
ஒரே பணிக்கு பலருக்கு 
Offer letter கொடுக்கப்பட்டாலும்
நீ தேர்வான 
companyஇல் இருந்து 
உன்னை அழைக்க மறந்(றுத்)தாலும்
பொறியியல் படித்துப்பார்
BPO - journal edition 
இரண்டில் ஒன்று 
இங்கேயே நிச்சயம்
பொறியியல் படித்துப்பார்......

-ப. நிவேதா. B.tech

2 comments:


 1. கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க...
  மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம்வந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா..?
  வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல,
  இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்...
  கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...
  மனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்...(ஐந்து நிடங்கள் கழித்து )
  கணவன் - உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி...
  மனைவி - ஐயா, ஜாலி...
  கணவன் - போறப்ப அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது...
  மனைவி - (சற்று அதிர்ச்சியுடன்)வந்தது எங்க அப்பா அம்மாவா..
  கணவன் - (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே) ஆமா..
  உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா போடி).

  ReplyDelete
 2. முகப்பரு நீங்க

  * பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது முழ்கும் அளவு சூடான தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்கவும்.இவ்வாறு செய்தல் பருக்கள் நாளடைவில் மறையும்.

  * சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவி வந்தால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் நாளடைவில் மறையும்.

  *தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம்.

  *ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை, ஒரு ஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து அதை முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு துடைத்து விடவும். இது சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி பருக்கள் வராமல் பாதுகாக்கும்.பார்லர்களில் இதே சிகிச்சையை ஆரஞ்சு பீல் மாஸ்க் என்ற பெயரில் செய்கின்றனர்.

  * வேப்பிலை பொடி, துளசி பொடி, புதினா பொடி ஆகியவை தலா ஒரு டீஸ்பூனும், முல்தானிமெட்டி இரண்டு ஸ்பூன்களும் எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிதமான சுடுநீரில் கலந்து முகப்பருக்களில் தடவவும். இந்த கலவையை கண்களுக்கு அடியில் தடவக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும்.

  * இரண்டு ஸ்பூன்கள் ஓமவல்லி இலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் பருக்கள் தொல்லை நீங்கும்.

  * சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம்.

  * ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம். இது பருக்களின் வடு மறைய உதவுகிறது

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.