Tuesday, 14 July 2015

இலக்கியக்கலவையோடி நீ -

கற்குவேல் பா

இலக்கியக்கலவையோடி நீ - கற்குவேல்  பா
இலக்கியக்கலவையோடி நீ 
```````````````````````````````````````` 

திருக்குறள் , 
உன் இதழ் .. !! 

* * 

குறுந்தொகை , 
உன் இடை .. !! 

* * 

நெடுநல்வாடை , 
உன் நடை .. !! 

* * 

பழமொழி , 
உன் விழி .. !! 

* * 

நற்றினை , 
உன் இமை .. !! 

* * 

நன்னெறி , 
உன் நெற்றி .. !! 

* * 

பதிற்றுப்பத்து , 
உன் பற்கள் .. !! 

* * 

கண்ணன் பாட்டு , 
உன் கண்ணம் .. !! 

* * 

குயில் பாட்டு , 
உன் குரல் .. !! 

* * 

சாகுந்தலம் , 
உன் கூந்தல் .. !! 

* * 

முல்லைப்பாட்டு , 
உன் கூந்தல்வாசம் .. !! 

* * 

மூதுரை , 
உன் இளநரை .. !! 

* * 

வளையாபதி , 
உன் புருவம் .. !! 

* * 

குண்டலகேசி , 
உன் நாசி .. !! 

* * 

ஏலாதி , 
உன் செவிப்பறை .. !! 

* * 

முக்கூடல் , 
உன் கழுத்து .. !! 

* * 

கைந்திலை , 
உன் கைகள் .. !! 

* * 

கலித்தொகை , 
உன் கால்கள் .. !! 

* * 

ஐங்குறுநூறு , 
உன் விரல்கள் .. !! 

* * 

சிலப்பதிகாரம் , 
உன் ஆரம் ..!! 

* * 

சீவகசிந்தாமணி , 
உன் கொலுசுமணி .. !! 

* * 

கலிங்கத்துப்பரணி , 
உன் மச்சங்கள் .. !! 

* * 

புறநானூறு , 
உன்னில் பார்த்தவை .. !! 

* * 
அகநானூறு , 
உன்னில் பார்க்காதவை .. !! 

* * 

பிளைத்தமிழ் , 
உன்னில் நமக்கானது .. !! 

-- கற்குவேல் . பா

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.