பெண்கள், இரவு படுக்கப் போகும்முன்பு . . .!

பெண்கள், இரவு படுக்கப் போகும்முன்பு . . .!
பெரும்பாலான பெண்கள், தங்களது கூந்தலை மிகுந்த அக்க‍றை செலுத்தி பார்ப்ப‍தற்கு அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க‍ விரும்புகின்றனர். இதற்காக
அவர்கள் பெரிதும் முயற்சி எடுக்கின்றனர். ஆனாலும் அவர்கள் எவ்வ‍ளவுதான் முயற்சி எடுத்தாலும் அவர்களுக்கு ஏதாவது ஒரு கூந்தல் பிரச்சனை இருந்துகொண்டே இருக்கு ம். அது ஏன்? எதனால்? என்பதை அவர்கள் யோசிப்ப‍து கிடையாது. யோசிக்க‍வும் நேரம் கிடைப்ப‍தில்லை. அவர்களின் இப்பிரச்சனை களுக்கு அவர்கள் பயன்படுத்தும் செயற்கை அழகு சாதனங்கள் காரணங் களாக இருக்கின்றன• இயற்கையான முறையில் கூந்தலை பராமரித்து வரவேண்டும்.
பெண்கள், செய்யும் சிறு தவறுகளால்கூட அவர்களது கூந்தல் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன என்பது எத்த‍னை பெண்களுக்கு தெரியும்.•  பொதுவாக பெண்கள், பாய்யிலோ அல்ல‍து படுக்கையிலோ படுக்கும் போது, அப்ப‍டி படுத்துக்கொள்வர். அதாவது இவர்கள் படுக்கும்போது இவர்களது கூந்தல்மீதே படுத்துக்கொள்வ ர். இதனால் முடிவளர்ச்சி பாதிப்படைவதோடு, சில கூந்தல் பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு.
பெண்கள், இரவு படுக்க‍ப்போகும்முன், தங்களது தலைமுடிக்கு சுத்த‍மான தேங்காய் எண்ணெய் யை தடவி, தலையை நன்றாக வாரி, சற்றே தளர்வாக பின்ன‍ல் போட்டு, (ரிப்ப‍ன் வைத்து கட்டுவதோ அல்ல‍து ரப்ப‍ர் பேண் டு போடுவதோ அல்ல‍து பின்னிய கூந்தலை அப்ப‍டியே விடுவ தோ அது அவரவர் விருப்ப‍ம் ) அந்த பின்ன‍லை முன்னால் போட்டுக்கொண்டு படுக்கையி ல் படுத்த‍ப்பிறகு தங்களது தலைக்கு மேலே கூந்தலை விட வேண்டும். இதனால் அவர்கள் கூந்தல் வளர்ச்சி மென் மேலும் அதிகரிக்க‍ச் செய்வதோடு, ஆரோக்கியத்தையும் மேலோங்கச் செய்து, கூந்தல் பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் இருக்கும்.