Sunday, 12 July 2015

கடவுள் காமராஜர்

கடவுள் காமராஜர்
என் கைகள் என்ன பாக்கியம் 
செய்ததோ இன்று.! 
ஓர் மாமனிதரை பற்றி எழுத.! 

நான் ரசித்து வியந்த முதல் 
அரசியல் தலைவர் நீங்களே.! 
என் நாவிற்கு கொடுப்பனை 
இல்லை உங்களை 'அப்புச்சி' 
என அழைக்க.! 

என் கைகளுக்கு அதிஷ்டம் 
இல்லை உங்கள் கைபிடித்து 
பள்ளிச்செல்ல.! 

என் கண்கள் தவம் செய்யவில்லை 
உங்கள் கம்பீரத்தை நேரில் காண.! 
எளிமை என்ற சொல்லுக்கும் 
உங்கள் பெயருக்கும் வித்தியாசம் 
உண்டோ.!! 

உங்கள் துடிப்பான பேச்சும் செயலும் 
தமிழகத்தை கரைசேர்க்கும் 
துடுப்பாய் இருந்ததே.!! 

உங்கள் ஆட்சியே தமிழகத்தின் 
"பொற்காலம்" இனி எந்த ஆட்சியால் 
முடியும் அதை மீட்டு வர.?? 

மதுக்கடையின் கதவுகளுக்கு 
தைரியம் உண்டோ.!உங்கள் பெயர் 
கேட்டால் திறக்க.?? 

கல்வியை காசாக்கும் துணிவு 
உண்டோ.! உங்கள் பார்வை 
கண்டால், இந்த கயவர்களுக்கு.?? 

எல்லா பட்டங்களுக்கும் பதவிகளுக்கும் தகுதியானவர் நீங்களே.!! 

பதவி மோகம் கொண்ட 
சாதாரண பாமரனா நீங்கள்.!! 
பிறர் பதவியை தீர்மானித்த 
கிங்மேக்கர் அல்லவோ தாங்கள்.!! 

உங்கள் கழுத்தில் பாசக்கயிற்றை 
வீசியபோது எமனின் கைகளும் நடுங்கியிருக்குமே.!! 
உங்கள் உயிரைக்குடிக்க அந்த 
பாசக்கயிறும் பதறி இருக்குமே.!! 

என் பிறப்பை நிறுத்தி உங்கள் 
ஆயுளை நீட்டித்திருக்ககூடாதா.!! 
நீட்டித்திருந்தால்.?? 

இன்று என்நாட்டு கோட்டையிலும் 
வல்லரசுக்கொடி பறந்திருக்குமே.!! 


இனி இவர் போல் எவர்.????

7 comments:

 1. தந்திரத்தால் தடுமாற்றம்!

  ‘பிரபலமாக உள்ள துறையில் ஏமாற்று வேலைகள் அதிகமாக இருக்கும் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் ரியல் எஸ்டேட்' என்று எனக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர் அடிக்கடி சொல்வார். ஆனால், அவரே ஒருநாள் ரியல் எஸ்டேட் டில் ஏமாந்தார்.
  ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் களில் பெரும்பாலானவர்கள் பல இடங்களைக் காட்டி பலவாறு நம்மை வாங்கத் தூண்டுவார்கள். அவர்களின் அந்தத் தந்திரத்தாலேயே ஏமாந்தவர்கள் பலபேர். அப்படித்தான் இவரும் ஏமாந்து போயிருக்கிறார். தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம், தான் நிலம் வாங்க இருப்பதாகச் சொல்ல, அவரோ அவருக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரிடம் இவரைச் சிக்க வைத்திருக்கிறார்.

  அந்த ரியல் எஸ்டேட் வியாபாரி ஒருநாள் இவர்களுக்காகத் தனியே கார் ஒன்றை ஏற்பாடு செய்து, அன்றைய தினத்துக்கான அனைத்து செலவுகளை யும் அவரே செய்து தன்னிடமுள்ள பல இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டி இருக்கிறார். எந்த இடமும் பிடிக்காமல் போனாலும், நமக்காக இவர் இவ்வளவு செலவு செய்கிறாரே என நினைத்து ஓர் இடத்தைப் பதிவு செய்திருக்கிறார். ஆனால், அந்த இடத்தில் இன்று வரை ஆட்கள் நடமாட்டமே இல்லாமல் இருக்கிறது.  நிலத்தை விற்க நினைப்பவர்கள் ஆயிரம்தான் சொன்னாலும் அந்த இடம் குறித்த விவரங்களைத் தனிப்பட்ட முறையில் விசாரிக்காமல் வாங்கக் கூடாது. அதேபோல, விற்பனை செய்பவரின் மீது பரிதாபப்பட்டு சொத்தை வாங்கக் கூடாது.

  உஷார் வழிகள்!

  பொதுவாக வீடு வாங்குகிறவர்கள், முக்கியமாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குகிறவர் கள் உடற்பயிற்சி நிலையம் இருக்கிறது, நீச்சல்குளம் இருக்கிறது என்றெல்லாம் நினைத்து, அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால், அதை நாம் பயன்படுத்துவோமா என்றெல்லாம் அந்த நேரத்தில் யோசிக்க மாட்டார்கள்.  சில நேரங்களில் நிலத்துக்கான தேவை இருக்காது. ஆனால், நல்ல வருமானம் தரும் முதலீடு என்று பிறர் சொல்லக் கேட்டு, வட்டிக்கு கடன் வாங்கியாவது நிலத்தில் முதலீடு செய்து ஏமாந்து போவார்கள். இதுபோன்ற தருணங்களில் கொஞ்சம் உஷாராக இருந்தால் ஏமாற்றத்தைத் தவிக்கலாம்”

  ReplyDelete
 2. காலைவணக்கம் குருகுல வாசகர்களே★

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. கருப்பு தங்கம் காமராசர்

  தோண்டி எடுக்குமுன்
  தங்கமும் கருப்புதான்
  தோன்றி மறைந்தப்பின்னரும்
  காமராசர்
  கருப்பு தங்கந்தான்.

  இவரின்
  பள்ளிக்கூடம் வாழ்வென்னவோ
  பாதியிலே!
  இவரால்
  பல பள்ளிக்கூடம் வாழுது - இப்
  புவி மீதினிலே!

  விருதுநகரின்
  விருது - இவருக்கு
  வெள்ளைநிற மனது.

  இவர்
  ஏழைப்பிள்ளைகளின்
  செவிக்கும் வயிற்றுக்கும்
  சேர்த்தே உணவளித்தார்.

  கரிகாலனின்
  கல்லணைப்போல் - இப்
  பரிபாலனின் பெயரையும்
  பல் அணைகளும்
  பறைசாற்றும்.

  இவருக்கு
  அடுக்குமொழி பேசிட தெரியாது
  மிடுக்கான ஆடை அணிந்தது கிடையாது.

  இவர்
  வாழ்க்கையின் சொத்து
  நாலு வேட்டித்துண்டு
  வார்த்தையின் சொத்து
  நறுக்குன்னு
  வெட்டுத்துண்டு.

  அறம் கூறும்
  இவர் 'நா' ஒருபோதும்
  புறஞ்சொல் கூறாது.
  இவரை
  புறம் கூறும்
  "நா க்களால்" இவர்
  அகம் கீராது.

  தலை
  தாழாத - இத்
  தலைமகனை
  தோற்கடித்து நகைத்தது
  தமிழகம்
  அதனால்தான் என்னவோ
  இன்றுவரை
  தலைநிமிர திகைக்கின்றது.

  தோண்டி எடுக்குமுன்
  தங்கமும் கருப்புதான்.
  தோன்றி மறைந்தப்பின்னரும்
  காமராசர்
  கருப்பு தங்கந்தான்.

  வைரபாரதி  ReplyDelete
 5. வணக்கம் நண்பர்களே டெட் வழக்கு நாளை வவருகிறதா உண்மை தகவல் என்ன?

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. இன்றைய தமிழகத்தின் வளர்ச்சி
  நேற்றைய காமராஜரின் ஆட்சி

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.