Wednesday, 8 July 2015

உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, இதை உரக்கச் சொல்வோம் உலகுக்கு.....

வாழ்க கலாச்சாரம்...

இரவை பகலாக்க நினைத்து பகலையும் இரவாக்கிவிட்டோம் சாளரங்களில்லா (window) அடுக்ககம் (apartment) அமைத்து...

பேஸ் புக்கில் ஆயிரம் நண்பர்கள் இருந்தும் பேசி பழகவில்லை பக்கத்து வீட்டாரிடம்...

விளைவுகள் தெரிந்தும் விளை நிலத்தை விற்பனை செய்கிறோம்   விதை நெல்லை வேக வைத்து தின்பது என்ற அறியாமை தெரியாமல்.....

மக்கிபோவதை மட்டும் ‪உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உண்மை மக்கி போகாத மண்ணுக்கு தெரிந்திருந்தும்,மக்கி போகாததை உற்பத்தி செய்கிறோம் மண்ணோடு மண்ணாய் மக்கி போக இருக்கும் நாம்...

விவசாய வேலை செய்பவனை கேவலமாகவும்,கணினியில் வேலை செய்பவனை கவுரவமாகவும் நினைபவர்கலுக்கு எப்படி தெரியும் அரிசியை இண்டர்னெட்டில் download செய்ய முடியாது என்று...

அரை குறை ஆடை பழகி விட்டது நமக்கு, ஆடை இல்லாத மேனியையும் நியாயப் படுத்த விரும்புகிறோம்-உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கலாச்சாரம் நம் தமிழ் இனம் என்பது கூட தெரியாமல்...

குக்கரில் வைத்த சர்க்கரை பொங்கல்,பொங்கி வெளி வர முடியாமல் அழுதுபுலம்புகிறது,விவசாயத்திற்கு மரியாதை செலுத்ததான் நம் முன்னோர்கள் விறகு அடுப்பில் பொங்கல் வைத்து விழா எடுத்தார்கள் என்பது தெரியவில்லை என்று....


தாவணி என்றால் என்ன என்று google-ல் தேடுகிறாள் jeans போட்ட தமிழ் பெண்.

கற்பு என்றால் என்ன என்று கேட்கிறாள் ஐந்தாவது கணவனிடம் 5 விவாகரத்து செய்த தமிழ் பத்தினி...

சித்தப்பாவையும் மாமாவையும்-uncle என்று முறை கெட்டு அழைக்கும் ஆங்கிலத்துக்கு எப்படி தெரியும் எல்லா உறவையும் மதித்து பெயர் வைத்து அட்டவணை போட்டது நம் தமிழ் இனம் என்று...

அம்மாவை பிணம்(mummy) என்று சொல்லும் இவர்களுக்கு எப்படி தெரியும் தெய்வமாக கருதும் அம்மாவை மனதில் வைத்துதான் "அ" என தமிழை தொடங்கினோம் என்று...

உறவுகள் வாழ்க்கைக்கு முக்கியம் என்று உணர்த்ததான் கடவுளுக்கும் உருவம் கொடுத்து உறவு கொடுத்து வைத்தது நம் கலாச்சாரம்...

ஆணும் பெண்ணும் இல்லாமல் வாழ்க்கை இல்லை ,உலகமும் இல்லை என்ற அர்த்தம் உணர்த்ததான் "அர்த்தனாரீஸ்வரரை" படைத்தது நம் தமிழ் மதம்...

நீதியையும், தர்மத்தையும் எல்லா விதமான நியாயங்களையும் தாயை முன் வைத்தே தொடங்கி வைத்தார்கள் நம் தமிழ் இனத்தில்....

தாய் காட்டினால் தான் தகப்பன் யார் என்று தெரியும்,தகப்பன் காட்டினால் தான் குரு, குரு காட்டி தான் கடவுள்.

இந்த தர்மத்தை நெறி படுத்திதான் "மாதா-பிதா-குரு-தெய்வம்" என்று வரிசை படுத்தினார்கள்.

நம் நாடு பெண்ணிற்கு முக்கியத்துவம் தரும் நாடு...

காடுகளுக்கும் மலைகளுக்கும், ஆறுக்கும் கடலுக்கும் பெண்ணை மனதில் வைத்து தான் பெயர் வைத்து வழிபட்டர்கள்.

கங்கை,காவிரி,கோதாவரி என ஆற்றுக்கும்  குறிஞ்சி முல்லை மருதம் என நிலத்திற்கும்,  நியாயத்திற்கு "தர்ம தேவதை" என்றும் அநியாயத்திற்கு "பத்ர காளி" என்றும் பூமிக்கு பூமாதேவி என்றும் பெண்ணை மனதில் வைத்துதான்
அழைத்தார்கள்.

5 வயது சிறுமி என்றாலும் 16 வயது குமரி என்றாலும் "தாயே பிச்சை போடு" அல்லது "அம்மா பிச்சை போடு" என்பான் நம் நாட்டு பிச்சைகாரன்.
சிறுமியே அல்லது குமரியே பிச்சை போடு என்பதில்லை.

5 என்றாலும் 16 என்றாலும் பெண்ணை தாயாகத்தான் பார்த்தார்கள் நம் முன்னோர்கள்.

இதிலிருந்தே தெரியும் தாயை முன் வைத்துதான் நாம் தர்மத்தை தொடங்கினோம் என்று...

குனிந்த தலை நிமிராதவள் தமிழ் பெண்,நிமிர்ந்த தலை குனியாதவன் தமிழ் ஆண்.

எதிரே வரும் பெண் திருமணம் ஆனவள் என தலை குனியா ஆணுக்கு உண்ர்த்ததான் பெண்ணுக்கு தாலி படைத்தார்கள்.

எதிரே வரும் ஆண் கல்யாணம் ஆனவன் என தலை நிமிரா பெண்ணுக்கு உணர்த்ததான் ஆணுக்கு மெட்டி போட்டார்கள்...

புது பெண்ணை அம்மி மிதித்து அருந்ததி பார்க்க சொன்னது ,கற்புக்கு அடையாளமாய் வானத்தில் நட்சத்திரமாய் மின்னும் அருந்ததியை (அருந்ததி ஒரு பெண்) போல் இவளும் மின்ன வேண்டும் என்ற அர்த்தம் உணர்த்ததான்.

அக்னியை சாட்சியாய் வைத்து திருமணம் செய்தது,ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நம் கலாச்சாரத்தை தாண்ட கூடாது,தாண்டினால் அக்னி எவ்வாறு சுட்டு சாம்பலாக்குமோ அது போல
பெண்ணையும் ஆணையும் மனசாட்சி சுட்டு கொல்லும் என்பதற்காகதான்..,


கல்யாணமான பெண்ணை நெற்றியில் குங்குமத்தை வைக்க சொன்னது தன் தலைமுறைக்கு மேல் தன் கணவனுக்கு ஆயுளை கொடு என்பதற்காகதான்....,,,

கல்யாணமாகாத பெண்ணை கழுத்தில் குங்குமத்தை வைக்க சொன்னது நல்ல தாலி பாக்கியத்தை தன் கழுத்தில் கொடு என்று இறைவனிடம் வேண்டிக்கொள்ளதான்...

இந்து தர்மப்படி ஆண் பலமானவன்,பெண் பலவீனமானவள்.பலவீனமான பெண்ணை பலமுள்ள ஆண் பாதுகாப்பது   கடமை என்று உணர்த்ததான் ஆணை குடும்ப தலைவனாக (initial) வைத்தார்கள்...

அப்போதெல்லாம் கல்யாணம் செய்ய என்ன படித்தாய் என்று ஆணை கேட்பதில்லை.அவனை ஆண் தானா என்று மட்டும் தான் சோதித்தார்கள்.
காளை அடக்குபவனுக்கும், இளவட்டக் கல்லை தூக்குபவனுக்கும் தான் பெண்ணை கட்டிக்கொடுத்தார்கள்.

இப்போது இந்த சோதனை வைத்தால் முக்கால் வாசி ஆணுக்கு கல்யாணம் என்பது கனவாகதான் இருக்கும்.

இருப்பினும் பலம்தான் ஆணுக்கு பலவீனம்.பலவீனம் தான் பெண்ணுக்கு பலம் என்று மறைமுக தர்மம் சொல்கிறது இந்து மதம்.

எவ்வளவு பெரிய (பலமான)ஆணாக இருந்தாலும் வளைத்து போடும் வல்லமை (பலவீனமான)பெண்ணுக்கு உண்டு.
அதனால் தான் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று சொல்லி வைத்தார்கள்...

நல்ல கற்புடைய பெண் பெய் என சொன்னால் பெய்யுமாம் மழை.
படி தாண்டா பத்தினி என்று சொன்னது வாசல் படியை அல்ல.
பெண்ணுக்கே உரிய "அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு" எனும் படிதலை தாண்டா பத்தினி என்று உணர்த்ததான்...

உலகமே வலப்பக்கமாக சுழல்கிறது என்று உணர்த்ததான் புது பெண்ணை வலது கால் எடுத்து வைத்து நல்ல எண்ணங்கலோடு வாழ்க்கையை தொடங்க வைத்தது நம் கலாச்சாரம்...

பார்ப்பதற்கு நமக்கு முட்டாள்தனமாக தோன்றினாலும் எல்லா விதமான சடங்குகலும் சம்பிரதாயங்கலும்  நம் கலாச்சாரத்தில் அர்த்தங்கலோடுதான் உண்டாக்கப்பட்டது...


நேற்று கூவம் நதிக்கரையில் வயதான கிழவி ஒருத்தி அழுது புலம்பி கொண்டு இருந்தாள்.அருகே சென்று ஏன் அழுகிறாய் என்றேன்.
என் பிள்ளைகள் என்னை கைவிட்டார்கள் என்றாள்.யார் உன் பிள்ளை என்றேன்.6 1/2 கோடி பேர் பிள்ளைகள் என்றாள். பைத்தியம் பிடித்து விட்டது என நினைத்தேன்.உன் பெயர் என்ன என்றேன் அந்த கிழவி சொன்னாள் "தமிழ்" என்று....
பிறகு தான் புரிந்தது அந்த கிழவிக்கு நானும் பிள்ளை என்று...
மனதிற்குள் உறுதி கொண்டு கிழவியிடம் சொன்னேன் இனி நான் தமிழை மதிப்பேன், தமிழையே பேசுவேன், தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றுவேன் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்... என் நண்பர்களாகிய நீங்களும் ஆயிரக்கணக்கான வருடத்திற்கு மேல் மூத்த அந்த தமிழ் கிழவிக்கு பிள்ளைதானே...
தயவு செய்து நம் கலாச்சாரம் போற்றுங்கள், தமிழை காப்பாற்றுங்கள்...


உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, இதை உரக்கச் சொல்வோம் உலகுக்கு.....

1 comment:

  1. Pey enap peyyum mazhai. Ikkuralin porulai thavaraaka purinthu kondeer nanbarea.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.