Thursday, 16 July 2015

அவனும் முப்பது முகமூடிகளும்

அவனும் முப்பது முகமூடிகளும்

விவரங்கள்எழுத்தாளர்: எம்.ஸ்டாலின் சரவணன்தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்பிரிவு: கவிதைகள் வெளியிடப்பட்டது: 15 ஜூலை 2015

வீட்டுக்குள் நுழையும்போது
வெளியில் செல்லும்போது
தெருமுனை டீக்கடையில்
மளிகைக்கடை அண்ணாச்சிக்காக
அலுவலகம் நுழைகையில் வாட்ச்மேனுக்காக
உள்நுழைந்து மேனஜருக்கு வணக்கம் வைக்கையில்
பக்கத்து இருக்கை ரவிக்காக
எதிர் இருக்கை பத்மாவுக்காக
இப்படி நாள் ஒன்றுக்கு
யாரும் பார்த்துவிடாதபடி
முப்பதுக்கும் குறையாத
முகமூடிகளை கழட்டி மாட்டிக்கொள்கிறான்.
ஆனாலும் ஒருநாள் இரவு
முகமூடிகளை கழட்டி மாட்டும் இடைவெளியில்
அவன் நிஜமுகத்தை கண்டுகொண்ட
தெருநாய் ஒன்று
விடாமல் குரைத்துக்கொண்டே இருந்தது
விடியும் வரை!

- எம்.ஸ்டாலின் சரவணன்

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.