Saturday, 18 July 2015

"எங்களுக்கு மருத்துவம் தெரியாது!" - மாற்று முறை மருத்துவர்...

"நோய்களை குணப்படுத்த முடியாது, கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்க முடியும்" என்ற பெயரில் நம் உடலுக்கு அந்நியமான ரசாயனங்களை, மருந்துகள் என்ற பெயரில் தொடர்ந்து உள்ளே திணித்து... அதன் பக்க விளைவாக புதுப்புது நோய்களை உருவாக்குவதை மருத்துவம் என்றும்...

பழுதுப்பட்ட உடல் உள் உறுப்புகளிலிருந்து கழிவுகளை வெளியேற்றி, அவற்றை சரியாக இயங்க வைக்க தெரியாமல், அந்த உறுப்பையே அறுத்து எறிபவர்களை மருத்துவர்கள் என்றும் கூறும் மக்கள் மத்தியில்...

இன்றைய நவீன யுகத்தில், பெரிய விஞ்ஞானிகளே மூக்கில் விரலை வைத்து ஆச்சரிய படும் வகையில், பல விஷயங்களை முன்பே அறிந்து கூறிய, நம் நாட்டு மகான்கள், சித்தர்கள், யோகிகள் உருவாக்கிய...

உடல் பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளும் மூலிகைகளை கொண்டு, நோய்களை குணப்படுத்துவதை... மாற்று முறை மருத்துவம் என்றும்...

உடல் உள் உறுப்புகளிலிருந்து கழிவுகளை வெளியேற்றி, அவற்றை சரியாக இயங்க செய்பவர்களை, மாற்று முறை மருத்துவர் என்றும் கூறும் இந்நாட்டில்...

மாற்று முறை மருத்துவர்கள் ஆகிய எங்களுக்கு மருத்துவம் தெரியாது தான்!...

சந்தோஷமான, உன்னதமான கர்ப்பகாலத்தை நோயுற்றகாலமாக மாற்றி...
பிரசவத்திற்கு பின் தாயையும்,சேயையும் நிரந்தர நோயாளிகளாக ஆக்குவதுதான் மருத்துவம் என்றால்...
எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது தான்!...

நுரையீரலில் தங்கிய கழிவை, சளியாக மாற்றி, இருமி உடல் வெளியேற்ற முயற்சிப்பதை...
ரசாயன மருந்துகளை கொடுத்து...
அந்த கழிவை தேங்க வைத்து...
நாள்பட்ட நோய்களாக மாற்றுவதுதான் மருத்துவம்...
என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது தான்!...

வெப்ப மண்டலத்தில் வாழ்பவர்களும், குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்களும்...
சைவ உணவு சாப்பிடுபவர்களும், அசைவ உணவு சாப்பிடுபவர்களும்...
கடினமாக உழைப்பவருக்களுக்கும், ஏ.சியில் அமர்ந்திருப்பவருக்கும்...
இரத்தத்தில் சர்க்கரையும், இருதயத்தில் அழுத்தமும்
இன்னும் பிற அளவுகளும், சராசரியாக இவ்வளவுதான்
இருக்க வேண்டும், என்றும்...

எல்லோரும்ம் சராசரியாக இவ்வளவுதான் நீர் பருக வேண்டும் என்றும்...

எல்லோரும் சராசரியாக இவ்வளவு தான் உண்ண வேண்டும் என்றும்...
சராசரி பட்டியல் நீட்டுவது தான் மருத்துவம் என்றால்...
எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது தான்!...

ஒரு உயிரை, அவருக்கே தெரியாமல், அறுத்து (கொலை)...
தானம் என்ற பெயரில் உடல் உறுப்புகளை விற்பனை செய்து... பணம் பறிப்பதுதான் மருத்துவம் என்றால்...
எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது தான்!...

பன்னாட்டு கம்பெனிகளுக்கு கைக்கூலியாய் செயல்பட்டு... தன்னாட்டு மக்களை ஏமாற்றி...
பொய்யுரைத்து...
இம்சித்து...
வேதனைபடுத்தி...
செல்வத்தை பிடுங்குவது தான் மருத்துவம் என்றால்...
எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது தான்!...

“பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை” இது ஊரறிந்த உண்மை...
ஆனால், மரணத்தை முன்னிறுத்தி, மக்களை பயமுறுத்தி அவர்களை நோயாளி ஆக்குவது மருத்துவம் என்றால்...
எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது தான்!...

சகோதர, சகோதரிகளே!...
சிந்தியுங்கள்...
சீர்தூக்கிப் பாருங்கள்...
உடலை செம்மையாக்குங்கள்...

வாழ்க நலமுடன், வளமுடன்...

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.