Saturday, 11 July 2015

B.Ed தேர்வு முடிவு இன்று வெளியீடு

பி.எட்., தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, மணிவண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில் நடந்த, பி.எட்., படிப்புக்கான தேர்வு முடிவுகள், பல்கலை இணையதளமான, www.tnteu.inல், இன்று வெளியாகும்.மதிப்பெண் பட்டியல்,தற்காலிக சான்றிதழ் ஜூலை, 30ம் தேதிக்குப் பின், கல்லுாரிகள் வழியே வழங்கப்படும். 
மறுகூட்டல், மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் பெற, தனித்தனி விண்ணப்பங்களை, ஜூலை, 24ம் தேதிக்குள், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பப் படிவங்களை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.