Tuesday, 7 July 2015

மருத்துவம் சார் பட்ட படிப்பு: முதல் நாள் 8,316 விண்ணப்பம்

பி.எஸ்.சி., நர்சிங் உள்ளிட்ட, மருந்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கு, ஒரே நாளில், 8,316 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.தமிழகத்தில், ஐந்து அரசு மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம்., - பி.எஸ்.சி., ரேடியோ தெரபி உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார் பட்டப்படிப்புகள் உள்ளன. 150 சுய நிதி கல்லுாரிகளையும் சேர்த்து, மொத்தம், 8,000 இடங்கள் உள்ளன.

            இதற்கான விண்ணப்ப வினியோகம், 19 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் நேற்று துவங்கியது. முதல் நாளில், 8,316 பேர் விண்ணப்பம் பெற்றனர். 'வரும், 17ம் தேதி வரை, விண்ணப்பம் கிடைக்கும். மேலும் விவரங்களை, www.tn.gov.in, www.tnhealth.org என்ற இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.