Friday, 31 July 2015

வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 புதிய வசதிகள் – ஆக்டிவேட் செய்யும் வழிமுறை!

  பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் 3 புதிய வசதிகளுடன் கூடிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வசதிகளை அப்டேட் செய்யப்பட்ட லேட்டஸ்ட் பதிப்பான V.2.12.194 -ஐ டவுண்லோடு செய்து பெறலாம்.
3 புதிய வசதிகளின் விபரம் பின்வருமாறு:-
மெசேஜ்களை நீங்கள் விரும்பும் போது படித்துக் கொள்ளும் வசதி
நமக்கு வரும் மெசேஜ்களை நாம் விரும்பும் போது படிக்கும் வகையில் Mark as Unread option வசதியை வழங்கியிருக்கிறது வாட்ஸ் ஆப். இந்த வசதியை பெற உரையாடல்களில் லாங் பிரஸ்ஸிங் செய்தால் archive chat, delete chat, email chat options-க்கு அடுத்ததாக Mark as Unread என்ற மெனு தோன்றும்.

விருப்பத்திற்கு ஏற்றவாறு நோட்டிபிக்கேஷன்களை மாற்றிக் கொள்ளும் வசதி
மற்றொரு புதிய வசதியாக நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு மெசேஜ் நோட்டிபிக்கேஷன்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் புதிய வசதியை தந்திருக்கிறது வாட்ஸ் ஆப். சாட் செட்டிங்ஸில் சென்று tones, vibration length, light, popup notifications, call ringtone உள்ளிட்ட வசதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் இப்போது contact அல்லது group-ல் ஒவ்வொன்றுக்கும் வேவ்வேறு வகையான நோட்டிபிக்கேஷன்களை வைத்துக் கொள்ளலாம். இதுதவிர mute chat. வசதியும் தரப்பட்டுள்ளது.
குறைந்த இண்டர்நெட் டேட்டாவில் அதிக வாட்ஸ் ஆப்
ஒருவேளை இண்டர்நெட் டேட்டா பேலன்ஸ் குறைவாக இருக்கும் பட்சத்தில் வாய்ஸ் கால்களை மிகக்குறைந்த டேட்டாவிலேயே பயன்படுத்தக் கூடிய அளவிற்கு புதிய அப்டேட்டை வழங்கியிருக்கிறது வாட்ஸ் ஆப். மேலும், வாட்ஸ் ஆப் உரையாடல்களில் எவ்வளவு இண்டர்நெட் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதியை WhatsApp settings-ல் பெறலாம்.

இந்த 3 புதிய வசதிகளும் ஆன்ட்ராய்டு மட்டுமின்றி ஆப்பிள் ஐ.ஓ.எஸ், விண்டோஸ், பிளாக்பெர்ரி மற்றும் சிம்பியன் ஆகிய இயங்குதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில், வாட்ஸ் ஆப் உரையாடல்களை கூகுள் டிரைவில் நேரடியாக பேக்அப் எடுத்துக் கொள்ளும் புதிய வசதியும் வரவுள்ளது.

31 comments: 1. பள்ளிக்கூடம்(Schools) அல்லது கல்லூரிகளின் அருகில் நீங்கள் குடியிருந்தால் பல்வேறு வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன...

  28. கேன்டீன் ஆர்டர் எடுக்கலாம்.

  29. மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான ஆட்டோக்கள் வாங்கி வாடகைக்கு விடலாம்.

  30. பள்ளியின் அனுமதியுடன் ஸ்டேஷனரி கடை வைக்கலாம்.

  31. டெய்லரிங் தெரிந்திருந்தால் பள்ளியில் மொத்தமாக ஆர்டர் எடுத்து யூனிஃபார்ம் தைத்துத் தரலாம்.

  32. பள்ளிக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ ஜெராக்ஸ்(Xerox) கடை வைக்கலாம். கம்ப்யூட்டர் இருப்பின் பிரின்ட் எடுத்து தரும் வேலையையும் செய்யலாம்.

  33. புத்தகங்களை பைண்டிங் செய்து தரும் வேலை நன்றாக கைகொடுக்கும்.

  34. இப்போதெல்லாம் பள்ளிகளில் கிராஃப்ட்(Craft) வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, நீங்கள் ஓரளவுக்கு அதில் கில்லாடி எனில், அக்கம் பக்கமிருக்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தரச்சொல்லி உங்களை மொய்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

  ReplyDelete
  Replies

  1. ''அம்மா, நான் படிக்கறதை நிறுத்திட்டு, பிசினஸ்(Business) பண்ணி சம்பாதிக்கப் போறேன்!''

   ''என்னது... படிப்பை(Education) நிறுத்தப் போறியா...? படிக்கறது

   நாலாங்கிளாஸ். அதை நிறுத்திட்டு என்ன பிசினஸ் பண்ணிக் கிழிக்கப் போற?''
   ''மூணாங்கிளாஸ் பசங்களுக்கு டியூஷன் எடுக்கப்போறேன்!''

   - என்ன... படித்ததுமே 'குபுக்' என்று சிரிப்பு பொங்கிக் கொண்டு வருகிறதா? கூடவே, இந்த 'எஸ்.எம்.எஸ்' (SMS) ஜோக் புறப்பட்டதன் அடிநாதம்... இந்த உலகமே பிசினஸ் எனும் ஒரு புள்ளியை மையமாக வைத்துதான் சுழன்று கொண்டிருக்கிறது என்பதும் புரிந்திருக்குமே!

   ஆம், எடுத்ததெல்லாம் பிசினஸ் Business என்பதாகிக் கொண்டிருக்கும் 'பிசினஸ் பெருங்காலத்தில்' நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆதிமனிதனின் மட்பாண்டத்தில் ஆரம்பித்து, இன்றைய இன்டர்நெட்(Internet) வரை எதை எடுத்தாலும் பிசினஸ்தான். இத்தகைய சுற்றுச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, தோள் கொடுக்கும் உற்ற தோழிதான் இனி படையெடுக்கும் அத்தனை டிப்ஸ்களும்!

   Delete
 2. 35. 'நேர்மறை சிந்தனை, போதுமான பேச்சுத்திறன், தமிழ் மற்றும் ஆங்கில அறிவு... இதெல்லாம் எனக்கு உண்டு!' என்பவர்களை, மனிதவளத்துறை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. உங்கள் பேச்சைக் கேட்டு இதுவரை உங்கள் நட்பு வட்டம் மட்டுமே உத்வேகம் அடைந்திருக்கும். இனி, அதை உங்கள் தொழில் அடையாளமாக மாற்றிக் கொண்டு சுற்றுப்புறத்திலிருக்கும் பள்ளிகளை முதலில் அணுகுங்கள். கல்லூரி அளவில் பர்சனாலிட்டி டெவலப்மென்ட், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் போன்றவற்றைப் பிரித்து மேய்வதற்கு பெரிய பெரிய புலிகள் இருக்கும்போது, பள்ளிகளில் இதற்கான முயற்சிகள் பெருமளவில் நடைபெறுவதில்லை என்பதே உங்களுக்கான வாய்ப்பு திறந்தே இருக்கிறது என்பதற்கு அடையாளம். ஆளுமை வளர்ச்சி பற்றிய டிப்ஸ், குட்டிக் குட்டி நீதிக் கதைகள் எனத் தொடங்கி சிறப்பான ஒரு பவர்பாயின்ட் பிரசன்டேஷனைத் தயார் செய்யுங்கள். நியாயமான சிறு தொகைக்கு பயிற்சி வகுப்பு எடுத்து, வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்படி செய்யுங்கள். முதல் மூன்று அல்லது நான்கு பள்ளிகள் தான், பிறகு உங்கள் டைரி எப்பவுமே ஹவுஸ்ஃபுல்தான்!

  ReplyDelete
 3. 79. காளான் வளர்ப்பு பெரிய பிசினஸாக வளர்ந்து வருகிறது. வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலேயே பயிர் செய்து, அக்கம் பக்கத்து வீடுகளுக்கு ரெகுலராக சப்ளை செய்தாலே... மாதாந்திர செலவுக்கு கைகொடுக்கும்.

  80. கீரையைக் கிள்ளுவதுதான் பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதனால், கீரையை வாங்கி சுத்தப்படுத்தி, அதைக் கிள்ளி பாக்கெட் போட்டுக் கொடுத்தால் பக்காவாக காசு பார்க்கலாம்.

  ReplyDelete
 4. 92. பொருட்கள் எவ்வளவு முக்கியமோ... அதே அளவு அதனை 'பேக்' செய்து கொடுக்கும் விதமும் அவசியம். பொருட்களை அழகாக பேக் செய்து கொடுப்பதை மறந்தால் வாய்ப்புகள் மங்கிவிடும்.

  93. ஏற்றுமதி தொழில் என்றால், எதிர்த்தரப்பு நம்பகமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவது அதி முக்கியம். ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் பொருள் டெலிவரியான பிறகு, பணம் செட்டில் ஆகாமல் ஏமாற வாய்ப்புள்ளது.

  94. நீங்கள் உற்பத்தி செய்யும் பொருளின் சந்தை வாய்ப்புகளை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். கண்மூடித்தனமாக உற்பத்தி செய்துவிட்டு, கடைசியில் மார்க்கெட்டிங் இல்லாமல் திண்டாடக்கூடாது.

  ReplyDelete
 5. 76. உங்கள் வீட்டு புறக்கடையில் அதிக இடமிருந்தால்... நாட்டுக்கோழி வளர்க்கலாம். உள்ளுர் சந்தையிலேயே நல்ல வரவேற்பு இருக்கும். நாட்டுக்கோழி மற்றும் அதன் முட்டைகளுக்கு எப்போதுமே கிராக்கிதான்.

  77. வீட்டுக்கு அருகில் இடமிருந்தால்... நர்சரிகளில் விற்கும் செடிகளை வாங்கி வந்து விற்கலாம். அருகில் உள்ள தோட்டக்கலை மற்றும் வனத்துறையில் மிகக் குறைந்த விலைக்கு நாற்றுகள் கிடைக்கும். உங்கள் ஏரியாவில் நன்றாக வளரக்கூடிய செடிகளை விற்பதால் அதிக லாபம். செடிகளுக்கு போடக்கூடிய ஆர்கானிக் உரம், காய்கறி மற்றும் பூச்செடி விதைகள்கூட விற்கலாம். இதற்காக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மாநில தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை போன்றவற்றை அணுகலாம்.

  78. வண்ண மீன் வளர்ப்பு என்பது நகர்ப்புறங்களில் பரபரப்பான விஷயமாக இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை கொளத்தூர் பகுதியில் வண்ண மீன் வளர்ப்புத் தொழில் பெரியளவில் நடைபெறுகிறது. இங்கு மொத்தமாக வாங்கி, சில்லறையாக விற்கலாம். தொட்டிகள் உட்பட மீன் வளர்ப்புக்குத் தேவையான பொருட்களையும் விற்கலாம்.

  ReplyDelete
 6. 68. பியூட்டி பார்லர் ஆரம்பிப்பது சிறப்பான வருமானம் தரக்கூடிய வேலை. உங்கள் வீடு மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் இருந்தால்... உடனடியாக ஆரம்பிக்கலாம். இதற்கென பயிற்சிகள் தர நிறைய நிறுவனங்கள் உள்ளன.

  69. 'பொக்கே' கொடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. மொத்த வியாபாரிகளிடம் தொடர்பு கொண்டால், தேவையான பூக்களை தினமும் வரவழைத்துத் தருவார்கள். அதை நம் கற்பனைக்குத் தக்கவாறு தயாரித்து விற்கலாம். முதலீடு இருந்தால் போட்டோ பிரின்ட்டிங், ஃபிரேமிங் போன்றவை ஆரம்பிக்கலாம். தொடர்புடைய நிறுவனங்களை அணுகி பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

  70. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் என்றால்... வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுவதையே ஒரு தொழிலாகச் செய்யலாம். ரெஸ்யூம் எனப்படும் பயோடேட்டா தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்துகொடுத்து, தகுந்த சன்மானத்தைப் பெறலாம்.

  ReplyDelete
 7. 66. ஒரு தொழிலைத் திட்டமிடும் முன்பாக... எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைக் கணக்கிடுங்கள். பிறகு, அதைப்போல இரண்டு முதல் மூன்று மடங்கு வரை பணத்தைத் தயாராக வைத்துக் கொண்டு களமிறங்குங்கள்.

  67. தோல்வி குறித்த பயமின்மை, சரியான தெளிவு, போதிய பண வசதி... ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு இவை மூன்றும்தான் முக்கியமான முதலீடுகள்.

  ReplyDelete
 8. 26. ஜூட் பேக் மெஷின்: சணல் பைகள், சணல் மிதியடி போன்றவை தயாரிக்கும் மெஷின் இது. 8 ஆயிரம் ரூபாயில் தொடங்கி பல்வேறு விலைகளில் கிடைக்கிறது. 2 மெஷினை வாங்கிப் போட்டு, ஒரு மாஸ்டர், 2 வேலையாட்களை வைத்தால்.. நல்ல லாபம் கிடைக்கும்.

  27. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைக் குறைப்பது போன்றவை இப்போது அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன. சணல் பைகள், பிளாஸ்டிக் பைகளின் இடத்தைப் பிடிக்கத் தொடங்கிவிட்டன. இந்த வணிகம் வளரும் நிலையிலிருக்கும்போதே இதில் நுழைந்து பழகிக் கொண்டால்... பெரிய வருங்காலம் உண்டு

  ReplyDelete
 9. 96. பல சந்தர்ப்பங்களில் பேச்சை விட, சிரித்த முகங்களே வெற்றியை தானே வரவழைக்கும். அதனால் எந்த சந்தர்ப்பத்தையும் ஒரு புன்னகையோடு சமாளிக்கும் பாங்கு, எளிதில் யாரோடும் பேசிப் பழகும் தன்மை... இதெல்லாம் உங்களுக்கு முக்கியம்.

  97. தனியார் அலுவலகங்களில் 'பப்ளிக் ரிலேஷன் ஆபீஸர்' என்ற பணிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இதற்கான குறுகியகால சான்றிதழ் பயிற்சிகள், தனியார் இன்ஸ்டிடியூட்களில் உள்ளன. ஆரம்பத்தில் சிறிய நிறுவனங்களில் சேர்ந்து, படிப்படியாக மிகப்பெரிய நிறுவனங்களில்கூட வேலையில் அமரும் சாத்தியங்கள் உண்டு!

  98. கவுன்சிலிங் வழங்குவது ஒரு நல்ல பணி. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் பாதிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. உளவியல் படித்த இளம் பெண்களுக்கு இது ஒரு அருமையான வேலை. மனநல மருத்துவர், தொண்டு நிறுவனத்தினர் போன்றோரின் தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையிலும் கவுன்சிலிங் வழங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்கூட கவுன்சிலிங் கொடுக்க முடியும். பணத்தை வங்கியிலோ... செக் அல்லது மணியார்டர் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம்

  ReplyDelete
 10. உஷார்... உஷார்!

  85. பக்கத்து வீட்டுக்காரர் சம்பாதிக்கிறார் என்பதற்காக அதேபோன்ற தொழிலில் நீங்களும் இறங்க வேண்டாம். உங்களுக்கு என்று ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

  86. உங்கள் பார்டனராக நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் வெறும் வாய்ச்சொல் வீரராக மட்டுமல்லாமல், பிசினஸில் முதலீடு போடுபவராகவும் இருக்கவேண்டும்.

  87. சிறு தவறுகூட பெரிய நஷ்டத்தில் கொண்டு விடும். ஒரு தவறு நடந்துவிட்டால் உடனே சரி செய்ய முயற்சியுங்கள்.

  88.உங்கள் பொருளுக்கு பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது என்றால், உடனடியாக சம்பந்தப்பட்ட விவரங்களை சரி பார்த்து, கணக்குப் போட்டு சூட்டோடு சூடாக களம்இறங்குங்கள். கொஞ்சம் தாமதித்தாலும் வேறொருவர் கைக்கு ஆர்டர் கைமாறிவிடவும் வாய்ப்பு உண்டு.

  89. நேரடியாக சென்று பொருட்களை விற்கும் தொழிலில் இறங்குகிறீர்களா... ஜாக்கிரதை. குறிப்பாக அதிக கூட்டமற்ற இடங்கள் மற்றும் இரவு, மதியம் போன்ற நேரங்களைத் தவிர்க்க வேண்டும்.

  ReplyDelete
 11. விவசாயத்துலயும் விஷயமிருக்கு!

  லட்சங்களையும் கோடிகளையும் முதலீடு செய்தால்தான் பிசினஸா... மிகக்குறைந்த முதலீட்டிலும் லாபம் பார்க்கலாம் என்பதற்கு விவசாயம் சார்ந்த பிசினஸ்களே சரியான உதாரணங்கள்...

  73. உங்கள் பகுதியில் எந்தெந்த பருவத்தில் என்னென்ன காய்கறிகள் அதிகம் கிடைக்கிறதோ... அவற்றை வாங்கி சுத்தப்படுத்தி காயவைத்து, காய்கறி வற்றல் தயாரிக்கலாம். பாலித்தீன் பைகளில் அடைத்து அருகில் இருக்கும் மொத்த வியாபாரிகளிடம் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு வருமானம் வரும். கொத்தவரங்காய், கத்திரிக்காய், சுண்டக்காய், பாகற்காய், மாங்காய் போன்ற வத்தல்களுக்கு எப்போதும் மவுசு உண்டு.

  74. சுயஉதவிக் குழு பெண்கள் இணைந்து கிராமத்தில் இருக்கும் புளிய மரங்களை ஏலத்துக்கு எடுக்கலாம். புளியம் பழங்களை உதிர்த்து, புளியை இடித்துப் பதப்படுத்தி பேக் செய்து மொத்த வியாபரிகளிடம் விற்கலாம்.

  75. நெல்லிக்காய் அதிகம் கிடைக்கும் சீஸன் என்றால்... அதை வாங்கி சுத்தப்படுத்தி, தேனில் ஊறவைத்து, நிழலில் காயவையுங்கள். பிறகு, 50 கிராம், 100 கிராம் என பாலித்தீன் பைகளில் பேக் செய்து மூலிகைக் கடைகளிலும், டவுனிலுள்ள மளிகைக் கடைகளில் கொடுக்கலாம். தொடர்ந்து செய்யும்போது ரெகுலர் கஸ்டமர்கள் கிடைப்பார்கள்.

  ReplyDelete
 12. 63. எந்தப் பொருளைத் தயாரிக்க விரும்பினாலும், பிள்ளையார் சுழி போடுவதற்கு முன்பாக நீங்கள் செய்ய வேண்டியது... விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதைத் தேடித் தெரிந்துகொள்வதைத்தான். அந்தப் பொருள் அந்தச் சூழலுக்குத் தேவையானதுதானா... அதை மக்கள் வாங்குவார்களா... என்பது போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டு சிறிய அளவிலான சர்வே நடத்துவது மிக முக்கியம்.

  64. உங்கள் பகுதியில் எந்த பொருளுக்கு சிறப்பான மரியாதை இருக்கிறது என்பதைக் கண்டறி யுங்கள். அதுவே கூட உங்களை உயர்த்திப் பிடிக்கக் கூடிய ஒரு தொழிலாக இருக்கக்கூடும். ஆம், பிற பகுதிகளிலும் அதற்கு சந்தை வாய்ப்பு இருக்கிறதா என்று தேடி அறிந்தால்... திருநெல்வேலி அல்வாவுக்கு சென்னையில் மவுசு இருப்பது போல, நீங்கள் கையில் எடுக்கும் பொருளுக்கும் மவுசைக் கூட்ட முடியும். பாக்கெட்டை நிரப்ப முடியும்! உதாரணத்துக்கு, உங்கள் பகுதியில் பனை பொருட்கள் அல்லது சுடுமண் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றால், உள்ளூர் சந்தையில் ஒரு விலை இருக்கும். பிற நகரங்களுக்கு வந்துவிட்டால் அவற்றின் விலை வேறு. இந்த சூட்சமம் உங்களுக்குப் புரிந்துவிட்டால் உள்ளூர் அம்பானி... நீங்கள்தான் அம்மணி.

  ReplyDelete
 13. 61. மாலை நேர திடீர் கடை ஆரம்பித்து சூப், பிரட் ஆம்லெட், சாண்ட்விட்ச், சாலட் தயாரித்து விற்றுப் பாருங்கள். நல்ல ஆள் நடமாட்டமுள்ள பகுதியெனில் வியாபாரம் சூடு பிடிக்கும்.

  62. இயற்கை உணவுகள் பற்றி பெரிதாக பலரும் பேச ஆரம்பித்திருக்கும் நேரமிது. கேழ்வரகு கூழ், கம்பங்கஞ்சி என்று சுத்தம் சுகாதாரமாக ஒரு கடையைப் போட்டுப் பாருங்கள்.... ஈஸியாக கல்லா நிறையும்

  ReplyDelete
 14. 56. அலுவலகவாசிகளின் மிகப்பெரிய சிக்கலே வீட்டுச் சாப்பாடுதான். கேன்டீன், ஹோட்டல் என சாப்பிடும்போது பர்ஸ் காலியாவதோடு... வயிறும் பதம்பார்க்கப்படுகிறது. இவர்களை குறி வைத்து வீட்டுச் சாப்பாடு விற்பனையில் இறங்கினால்... கொடி கட்டலாம். ஒரு இடத்தில் வைத்து விற்பதானாலும் சரி, வேலையாள் மூலமாக அலுவலக வாசல்களில் விற்பதானாலும் சரி... சிறந்த வருவாய் தரக்கூடிய வேலை. வீட்டுக்கு அருகில் இருக்கும் அலுவலகங்களில் ஆர்டர் பிடிப்பதன் மூலம் பிள்ளையார் சுழி போடலாம்.

  57. பிறந்த நாள் கேக் போன்றவை செய்வது சுவாரஸ்யமான வேலை. கேக் டெகரேஷன் பண்ணுவதே ஒரு கலை. அதைக் கற்றுக் கொண்டால் இதில் பிரகாசிக்கலாம். அருகிலுள்ள பேக்கரி, ஹோட்டல் போன்றவற்றை அணுகுவது பயனளிக்கும்.

  58. சமையலில் நீங்கள் கில்லாடி எனில், சமையல் பள்ளி ஒன்றை ஆரம்பித்தால்... சக்கை போடு போடலாம். சமைக்கத் தெரியாத பார்ட்டிகள்தான் இப்போது அதிகம் என்பதால்... உங்கள் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களே குவிய ஆரம்பித்துவிடுவார்கள்! புதுமையான விஷயமாகவும் இருக்கும்.

  59. வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால்... மினி பேக்கரி நடத்தலாம். இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள் என ஆரம்பித்து... இடம், பொருள் அறிந்து செயல்பட்டால் விரிவாகவே பிசினஸை டெவலப் செய்ய முடியும்.

  60. ஒரு ஜூஸ் ஷாப் ஆரம்பிக்கலாமே... முதலீடு கொஞ்சம் போதும். ஓரளவுக்கு மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக இருக்கவேண்டும். நாலு பேருக்கு உங்கள் கடை ஜூஸ் பிடிக்கும் வரைதான் போராட்டம். பிறகு, ஆட்கள் தேடி வருவார்கள்.

  ReplyDelete
 15. 53. வீட்டு ஜன்னல் களுக்கு அழகழகாக கர்ட்டன் செய்து போடுவது ஒரு நல்ல கலை. சிறப்பாக வடிவமைக்க முடிந்தால்... அது ஒரு நல்ல தொழிலாகிவிடும். கொஞ்சம் டெய்லரிங், கொஞ்சம் கலையுணர்வு இரண்டும் இருந்தால்... நிறைய சம்பாதிக்கலாம்.

  54. பொம்மை செய்வது பெண்களுக்கு எளிதான ஒரு பணி. பொம்மை உருவாக்கும் கம்பெனிகளிடமிருந்து ஆர்டர் பெற்று வீட்டிலேயே பொம்மைகளைத் தயாரிக்கலாம். அக்கம் பக்கத்து கடைகளிலேயே ஆரம்பகட்ட ஆர்டகளை கணக்கிட்டு, தொழிலைத் தொடங்கலாம்.

  55. ஹேண்டி கிராஃப்ட் தொழிலில் நீங்கள் வல்லவர்கள் என்றால், நீங்கள் செய்த பொருட்களோடு சென்னையில் இருக்கும் காதி கிராஃப்டை அணுகுங்கள். அங்கே மிக குறைந்த விலையில் உங்கள் பொருட்களை வைப்பதற்கு இடம் தருவார்கள். வருபவர்களின் பார்வை உங்கள் பொருளில் பட்டால் லக் உங்களுக்குதான்.

  ReplyDelete
 16. 37. செல்லப் பிராணிகளைக் கவனிப்பது, அதற்குப் பயிற்சி கொடுப்பது... இவையெல்லாம் நகர்ப்புறங்களில் நல்ல வருவாய் தரக்கூடிய பணி. ஒரு மணி நேர பயிற்சிக்கு சராசரியாக 200 ரூபாய் கிடைக்கும். அருகிலுள்ள பெட் ஷாப் மற்றும் வெட்னரி டாக்டர்களின் தொடர்பு எல்லையில் இருப்பது இதற்கு கைகொடுக்கும்.

  38. சத்தமே போடாமல் சாதித்துக் கொண்டிருக்கிறது மொழிபெயர்ப்புத் துறை, பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டால்... உள்நாட்டு மொழிபெயர்ப்பு முதல் பன்னாட்டு நிறுவன வாய்ப்புகள் வரை வாய்க்கும். சென்னையில் இருக்கும் அல்லயன்ஸ் பிரான்ஸ் (பிரஞ்சு மொழிக்கு), மேக்ஸ்முல்லர் பவன் (ஜெர்மன் மொழிக்கு) ஆகிய நிலையங்களில் இதுபற்றிய வழிகாட்டுதல் கிடைக்கும்.

  ReplyDelete
 17. 100. இந்திய அரசின் 'மைக்ரோ ஸ்மால் அண்ட் மீடியம் என்டர்பிரைசஸ்' டெவலப்மென்ட் நிறுவனம் (MSME Development Institute) பெண்களுக்காக இலவசமாக ஒன்றரை மாத பயிற்சியை அவ்வப்போது நடத்தும். இதில், வாஷிங் பவுடர், சோப், பினாயில் போன்ற கெமிக்கல் பொருட்கள் மற்றும் ஊறுகாய், ஜூஸ், ஜாம், மசாலாத்தூள் போன்ற உணவு சார்ந்த பொருட்களைத் தயாரிக்க பயிற்சி அளிப்பார்கள். இதைத் தொடர்ந்து சான்றிதழ் வழங்குவதோடு தொழில் தொடங்க வழிகாட்டுவார்கள். மார்க்கெட்டிங்குக்கு தனியாக பயிற்சி வகுப்புகளும் உண்டு.

  ReplyDelete
 18. 1. விளம்பரத்துறை (Advertisement Department) அளிக்கும் வாய்ப்புகள் எக்கச்சக்கம். கற்பனை வளம்மிக்க வாசகங்கள் எழுதுவோர் 'ஃப்ரீலான்சர்' (Freelancer) என்ற வகையில் காப்பிரைட்டராக(Copywriter) விளம்பர ஏஜென்சிகளுடன் (Advertisement Agencies) பணியாற்றலாம். மிகப்பெரிய நிறுவனங்கள்கூட (Companies) அவர்களுடைய தமிழ் விளம்பரங்களில் ஏடாகூடமாகத் தடுமாறியிருப்பதை அடிக்கடி காண முடியும். இதிலிருந்தே நல்ல தமிழ், கற்பனை வளம், சந்தைப்படுத்துதல்(Marketing) பற்றிய புரிதல்... இவை மூன்றும் இருப்பவர்களுக்கு எத்தனை வாய்ப்புகள்(Chances) உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம். www.freelanceindia.com என்ற இணையதளத்தில் நம்மைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வது இப்படிப்பட்ட வாய்ப்புகள் நம்மைத் தேடிவர உதவும்.

  2. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையதளத்தை(Web Sites), இணையத்தில் பிரபலமாக்கும் வித்தைதான் எஸ்.இ.ஓ. (SEO-Search Engine Optimisation) அதிகம் பிரபலமாகாத... ஆனால், வேகமாக வளர்ந்து வரும் துறை இது. முறையான பயிற்சி(Training) பெற்றால், துணிந்து களம் இறங்கலாம், இணையவெளிக்குள்! இதைப் பயிற்றுவிக்கும் இணையம் மூலமாகவே ஏகப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்!

  3. வலைப்பூ...(Blog) ஒரு வரப்பிரசாதம். அதாங்க நெட்ல பிளாக் எழுதுவது. 'பொழுது போகாதவர்களின் இணைய விளையாட்டு(Internet Games) அது!' என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநராக நீங்கள் இருந்தாலோ, அல்லது குறிப்பிட்ட எந்த விஷயத்தின் மீதாவது தீவிர ஆர்வம் உடையவராக இருந்தாலோ இன்றே தொடங்குங்கள் ஒரு வலைப்பூ(Blog). போதுமான அளவு பார்வையாளர்கள்(Visitors) உங்கள் வலைப்பூவுக்கு உருவாகிவிட்டால், தங்கள் நெட்வொர்க்கில் வந்து இணையுமாறு உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப் போவது யார் தெரியுமா... சாட்சாத் கூகுள்(Google)! ஆம், தன்னுடைய வாடிக்கையாளர்களின்(Clients) விளம்பரத்தை உங்கள் வலைப்பூவில் கூகுள் கொண்டு வந்து சேர்க்கும். இதற்கு பிரதிஉபகாரமாக, தன்னுடைய விளம்பர வருமானத்தில்(Earnings) உங்களுக்கு விகிதாச்சார பங்கு வைக்கும் கூகுள்! இதை மட்டுமே முழுநேரத் தொழிலாக செய்து காசு பார்ப்பவர்கள் அயல்நாடுகளில்(Other Countries) எக்கச்சக்கம்.

  ReplyDelete
 19. வீட்டிலேயோ அல்லது சிறிய அளவிலான கடையிலேயோ வைத்து பிசினஸ் செய்யும் வகையில் எண்ணற்ற இயந்திரங்கள் இருக்கின்றன. அவற்றில் சில கீழே அணி வகுக்கின்றன. உங்கள் வசதிக்கு ஏற்ப முடிவு செய்யலாம்.

  21. மெழுகுவர்த்தி மெஷின்: 700 ரூபாயில் தொடங்கி 45 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கிறது. சிறிய மெஷினில் ஒரு மணி நேரத்தில் 55 மெழுகுவர்த்திகள் செய்யலாம். ஏற்றுமதி செய்யும்பட்சத்தில் பெரிய மெஷின் வாங்கலாம். இதில் 500 முதல் 1,000 மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம்.

  22. சாக்பீஸ் மெஷின்: இதன் விலை 15 ஆயிரம் ரூபாய். நாள் ஒன்றுக்கு 10 கிலோ அளவுக்கு சாக்பீஸ் தயாரிக்கலாம்.

  23. பவுச் மெஷின்: 1 ரூபாய், 2 ரூபாய் என்று விற்பனை செய்யப்படும் ஊறுகாய், வாஷிங் பவுடர், எண்ணெய் போன்ற பொருட்களை சாஷே பாக்கெட்டுகளில் அடைத்துத் தரும் மெஷின் இது. விலை ஒரு லட்சம். 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்கலாம்.

  24. பாப் கார்ன் மெஷின்: விலை 70 ஆயிரம் ரூபாய். மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இந்த மெஷினை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தால், நல்ல வருமானத்தைப் பார்க்கலாம்.

  25. பேப்பர் கப் மெஷின்: இதில் செமி ஆட்டோமேட்டிக், ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என இரண்டு வகை இருக்கிறது. ரூ. 5 லட்சம் முதல் 18 லட்சம் வரை விற்கப்படுகிறது (18 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கும்போது, குறிப்பிட்ட கால அளவுக்கு மூலப்பொருட்களையும் சப்ளை செய்வார்கள். ஒரு வருட வாரன்ட்டியும் உண்டு). இதில், பேப்பர் பேக் கூட தயாரிக்கலாம்.

  ReplyDelete
 20. 19. ஒரு வீட்டுக்கு என்னென்ன தேவைப்படும் என்பதை பட்டியலிடுங்கள். அவற்றில் சிலவற்றைச் செய்து தரும் ஏஜென்ஸி(Agency) போல செயல்படலாம். உதாரணமாக, வீடுகளுக்கு அலாரம் அமைப்பது, கொசு வராமல் ஜன்னல்களில் வலை அடிப்பது இப்படி சில. இதற்கான நிறுவனங்களை இணையதளம் வழியாக கண்டறிந்து மொத்த விலையில் கொள்முதல் செய்து, பின்னர் நிறுவனங்கள், வீடுகளில் கேன்வாஸ் செய்து ஆர்டர் எடுக்கலாம்.

  20. உங்கள் வீட்டில் விசாலமான ஹால் அல்லது எக்ஸ்ட்ரா ரூம் இருந்தால், கம்ப்யூட்டர் கேம்(Computer Game) ஆரம்பிக்கலாம். அக்கம் பக்கத்து குழந்தைகளை அழைத்து விஷயத்தைச் சொன்னால்... அந்த ஏரியாவுக்கே விஷயம் ஈஸியாக பரவிவிடும். மணிக்கு இவ்வளவு ரூபாய்(Rupee) என கணக் கிட்டு காசு பார்க்க லாம்.

  ReplyDelete
 21. 15. மொத்த விலையில் பாக்கெட்(Packet) பால் வாங்கி, நீங்களாகவோ அல்லது ஆள் வைத்தோ வீடு வீடாக பால் சப்ளை(Supply) செய்யலாம். வீட்டில் எப்போதும் ஸ்டாக் வைத்திருந்தால் தேவைப் படுபவர்களுக்கு விற்கலாம். தயிர், மோர், தண்ணீர் கேன் மற்றும் பாக்கெட் மாவு போன்றவற்றை விற்பனை செய்தால் கூடுதல் லாபம்(Profit).வீட்டிலேயே போதுமான இடவசதி இருந்தால்... குழந்தைகளுக்குரிய(Kids) புத்தகங்களை வைத்து வாடகை நூலகம் நடத்தலாம்.

  16. அண்டை வீட்டுப் பெண்களின் புடவைகளை சேகரித்து, நாமே டிரைவாஷ் (Dry Wash)செய்து தரலாம். அல்லது டிரைவாஷ் கடைகள் மூலம் செய்து தந்து அதற்கான கமிஷனைப்(Comission) பெற்றுக் கொள்ளலாம்.

  17. அண்டை வீடுகளில் அலுவலகம்(Office) செல்பவர்களாக இருந்தால், அவர்களுடைய மின்சாரம், தொலைபேசி(Telephone) போன்றவற்றின் கட்டணங்களைச் செலுத்துவது, சமையல் கேஸ் புக் செய்வது போன்ற வேலைகளை செய்து கொடுத்து கமிஷன்(Comission) பெறலாம்.

  18. வெட்டிங்(Wedding) பிளானர்(Planner) என்பது திருமணங்களுக்குத் தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுக்கும் பணி. திருமண அழைப்பிதழ் எங்கே அச்சடிக்கலாம்(Print) என்று தொடங்கி, என்ன மாதிரியான சாம்பார் வைப்பது என்பது வரை பிளான் பண்ணும் வேலை. திறமையான சிலர் வேலைக்கு இருந்தால் மொத்தமாக ஆர்டர்(Order) பிடித்து நல்ல லாபம் ஈட்டலாம்.

  ReplyDelete
 22. ஹேட்டல்கள்(Hotels), நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், பெரிய அபார்ட்மென்ட்கள் (Apartments) என்று இருந்தால், ஏகப்பட்ட வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

  11. வீட்டுக்கு அருகில் டெய்லரிங் கடை இருந்தால், பட்டன் தைத்தல், ஹெம்மிங் செய்தல், எம்ப்ராய்டரி என்று துணைத்தொழில்களை அவர்களிடம் இருந்து கேட்டுவாங்கி செய்து கொடுக்கலாம்.

  12. ஹோட்டல்கள்(Hotels) மிகுந்த ஏரியா என்றால்... இலை மற்றும் தண்ணீர் சப்ளை செய்வ தற்கான வாய்ப்பை கேட்டுப் பெறலாம். சில ஹோட்டல் களில் மசாலா அரைத்துத் தருவது, பாத்திரம் கழுவித் தருவது போன்ற வேலைகளையே கான்ட்ராக்ட்(Contract) ஆக தருகிறார்கள். ஆர்வம் இருப்பின் ஆட்களை வைத்துக் கொண்டு அதையும் முயற்சிக்கலாம்.

  13. கடை வீதியாக இருந்தால், பல கடைகளுக்கு வாசல் பெருக்கி தண்ணீர் தெளிக்க வேண்டிய வேலை இருக்கும். இதையும் கான்ட்ராக்ட் ஆக எடுத்து செய்தால்.. அதிலிருந்து ஒரு லாபத்தைப் பார்க்கலாம்.

  14. வீட்டுக்குக் குறைந்த பட்சம் இரண்டு செல்போன்(Cell Phone) வைத்திருப்பார்கள். அதனால் ரீ-சார்ஜ்(Recharge) கூப்பன்கள் வாங்கி வைத்து வியாபாரம் செய்யலாம். மொத்தமாக நீங்கள் ரீ-சார்ஜ் கூப்பன்(Coupons) வாங்கும்போது சம்பந்தப்பட்ட செல்போன்(Cell phone) நிறுவனத்திடம் இருந்து கமிஷன் கிடைக்கும்.

  ReplyDelete
 23. 8. டைப்பிங்(Typing) நன்றாகத் தெரிந்தால் டேட்டா என்ட்ரி(Data Entry) வேலை செய்யலாம். வீட்டில் இருந்தபடியே ஆவணங்களை(Documents) கம்ப்யூட்டரில்(Computer) டைப் செய்து ஏற்ற வேண்டும். பெரும்பாலும் அதுதான் வேலை. இந்த வேலைக்காக ஆள் கேட்டு பேப்பரில்(Papers) வரும் விளம்பரங்களில் தொடர்புகொண்டு(Contact) பணி தேடலாம். அதோடு, நிறுவனத்தின் நம்பகத்தன்மையை ஏற்கெனவே பணி செய்பவர்களிடம் உறுதி செய்வதும் முக்கியம்.

  9. வீட்டில்(Home) நான்கு கம்ப்யூட்டர் வைக்க இடமிருந்தால்(Place) போதும்... குழந்தைகளுக்கு(kids) கம்ப்யூட்டர் பயிற்சி(Training) கொடுக்கும் தொழிலை ஆரம்பிக்கலாம். அளவான வருமானத்துக்கும், உங்களின் பொழுது போக்குக்கும்(Entertainment) இது உத்தரவாதம்.

  10. கம்ப்யூட்டர் ஹார்ட்வேர்(Hardware) தெரிந்தால்... வீட்டிலேயே ரிப்பேர்(Repair) கடை ஒன்றை ஆரம்பிக்கலாம். கம்ப்யூட்டர்தான் என்றில்லை... எந்தெந்த துறையில் எல்லாம் ரிப்பேர் பார்க்கும் திறமை உங்களுக்கு உண்டோ, அதிலெல்லாம் நுழையலாம்.

  ReplyDelete


 24. 4. www.franchiseindia.com போன்ற இணையதளங்களுக்குப் போய் பாருங்கள். சொற்ப முதலீட் டில் பெரிய நிறுவனங்களின் பிரான்சைஸ் வாய்ப்புகள் குவிந்திருப்பதைக் காணலாம். இதில் உங்களுக்கு ஆர்வமிருக்கும் துறையில் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து, நன்கு விசாரித்துத் தொழில் தொடங்கலாம்.

  5. இபே (ebay) போன்ற நம்பிக்கையான வலைதளங்களில் பொருட்களை வாங்கி விற்பது ஒரு லாபகரமான வேலை. சிறிது நாள் இந்த 'இபே' E-bay செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்தபின் களத்தில் இறங்குவது நல்லது.

  6. வெப் டெவலப்பர்(Web Developer) – இப்போதைய ஹாட் வேலைகளில்(Hot Job) ஒன்று. வீட்டில் இருந்தபடியே தனியாருக்குத் தேவையான வலைதளங்கள் உருவாக்கு வதுதான் இந்த வேலையே. இணையத்தில், இதற்கென இருக்கும் பகுதிகளில் உங்களைப் பற்றி ஒரு விளம்பரம்(Advertisement) கொடுத்தால் வேலை(Job) தேடி வர வாய்ப்பு உண்டு.

  7. 'புரூஃப் ரீடிங்'(Proof Reading), 'எடிட்டிங்'(Editing) போன்ற வேலைகளைச் செய்வதற்கு இப்போது நிறைய ஆட்கள்(Man Power) தேவைப்படுகிறார்கள். அதிலும், வீட்டில்இருந்தபடியே(home Based) செய்யத் தயாராக இருந்தால் வரவேற்பு நன்றாகவே இருக்கும். பத்திரிகை அலுவலகங்கள், பதிப்பகங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டால்... வாய்ப்புகள் கிடைக்கும்.

  ReplyDelete
 25. 1. விளம்பரத்துறை (Advertisement Department) அளிக்கும் வாய்ப்புகள் எக்கச்சக்கம். கற்பனை வளம்மிக்க வாசகங்கள் எழுதுவோர் 'ஃப்ரீலான்சர்' (Freelancer) என்ற வகையில் காப்பிரைட்டராக(Copywriter) விளம்பர ஏஜென்சிகளுடன் (Advertisement Agencies) பணியாற்றலாம். மிகப்பெரிய நிறுவனங்கள்கூட (Companies) அவர்களுடைய தமிழ் விளம்பரங்களில் ஏடாகூடமாகத் தடுமாறியிருப்பதை அடிக்கடி காண முடியும். இதிலிருந்தே நல்ல தமிழ், கற்பனை வளம், சந்தைப்படுத்துதல்(Marketing) பற்றிய புரிதல்... இவை மூன்றும் இருப்பவர்களுக்கு எத்தனை வாய்ப்புகள்(Chances) உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம். www.freelanceindia.com என்ற இணையதளத்தில் நம்மைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வது இப்படிப்பட்ட வாய்ப்புகள் நம்மைத் தேடிவர உதவும்.

  2. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையதளத்தை(Web Sites), இணையத்தில் பிரபலமாக்கும் வித்தைதான் எஸ்.இ.ஓ. (SEO-Search Engine Optimisation) அதிகம் பிரபலமாகாத... ஆனால், வேகமாக வளர்ந்து வரும் துறை இது. முறையான பயிற்சி(Training) பெற்றால், துணிந்து களம் இறங்கலாம், இணையவெளிக்குள்! இதைப் பயிற்றுவிக்கும் இணையம் மூலமாகவே ஏகப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்!

  3. வலைப்பூ...(Blog) ஒரு வரப்பிரசாதம். அதாங்க நெட்ல பிளாக் எழுதுவது. 'பொழுது போகாதவர்களின் இணைய விளையாட்டு(Internet Games) அது!' என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநராக நீங்கள் இருந்தாலோ, அல்லது குறிப்பிட்ட எந்த விஷயத்தின் மீதாவது தீவிர ஆர்வம் உடையவராக இருந்தாலோ இன்றே தொடங்குங்கள் ஒரு வலைப்பூ(Blog). போதுமான அளவு பார்வையாளர்கள்(Visitors) உங்கள் வலைப்பூவுக்கு உருவாகிவிட்டால், தங்கள் நெட்வொர்க்கில் வந்து இணையுமாறு உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப் போவது யார் தெரியுமா... சாட்சாத் கூகுள்(Google)! ஆம், தன்னுடைய வாடிக்கையாளர்களின்(Clients) விளம்பரத்தை உங்கள் வலைப்பூவில் கூகுள் கொண்டு வந்து சேர்க்கும். இதற்கு பிரதிஉபகாரமாக, தன்னுடைய விளம்பர வருமானத்தில்(Earnings) உங்களுக்கு விகிதாச்சார பங்கு வைக்கும் கூகுள்! இதை மட்டுமே முழுநேரத் தொழிலாக செய்து காசு பார்ப்பவர்கள் அயல்நாடுகளில்(Other Countries) எக்கச்சக்கம்.

  ReplyDelete
 26. நம்ம தான் வேலை பார்க்கிறோம்/பார்க்காட்டியும் சம்பளம் வந்துரும்,
  வேலைக்கு போற அளவுக்கு படிக்கலையே, முன்னேருவதுக்கு எதாவது வழிகிடைக்காத, கொஞ்சமா கைகாசு போட்டு எதாவது தொழில் பண்ணலாமேன்னு யோசிச்சிகிட்டு இருக்கிற நம்ம அண்ணன் தம்பிகளோ,உறவினரோ, நண்பர்களோ கண்டிப்பா இருப்பாங்க அவங்களுக்கு உதவுகிற விதமா கொஞ்சமா முதலீடு போட்டு செய்யுற மாதிரி எனக்கு தெரிந்த சில தொழில் பத்தி சொல்லுறேன், இது சம்பந்தமா என்னால நிதி உதவி செய்ய முடியலைனாலும், மற்ற உதவிகள கண்டிப்பா செய்ய தயார இருக்கேன்....சரி மேட்ட்ரருக்கு போவோம்....

  சூரத் ன்னு சொன்னாலே புடவைகள் தான் ஞாபகம் வரும், இங்க அதோட விலையும் குறைச்சல் தான், இங்கே இருந்துதான் மற்ற மாநிலங்களுக்கு அனுப்ப படுது, நம்ம ஊருலேர்ந்தும் நேரடியாகவும் ஆட்கள் வந்து கொள்முதல் பண்ணிகொண்டுபோய் விக்கிறாங்க ..
  80 ரூபாயில இருந்து 2000 ருபாய் வரையிலான விலைகள்ள புடவைகள் கிடைக்கும், ஒரு புடவைக்கு குறைந்தது 20 ரூபாயில இருந்து புடவையோட தரத்திற்கு தகுந்த மாதிரி 400 ருபாய் வரைக்கும் லாபம் வைத்து நீங்க விற்க முடியும். கொள்முதல் பண்ணுன புடவைகள இங்க இருந்து தமிழ் நாட்டுக்கு அனுப்ப லாரி வாடகையும் ஒன்னும் பெருசா இல்ல 150 புடவைகள அனுப்ப 200 ருபாய் ஆகும், ( சென்னைல பழைய வண்ணார பேட்டயிலையும் புடவை கொள்முதல் பண்ணலாம், சூரத் விலைய விட 5 - 10 ரூபாய்கள் தான் கூடுதலா இருக்கும்னு கேள்விபட்டேன் )

  அதே மாதிரி ஓரளவு தரமான பேண்ட் & சட்டை பிட்டுகளும் 150 ரூபாயில் இருந்து இருந்து கிடைக்கும் , அப்பறம் சுரிதார் துணிகள்,ஜாக்கெட் பிட்ஸ் , Jeans Pants, Readymade Shirts இது மாதிரி நிறைய ஐட்டங்கள் ஒரு அளவுக்கு ஞாயமான விலைகள்ள வாங்கலாம்....

  இதெல்லாம் சரி தான், வாங்கிட்டு போற பொருள, உங்க ஊருங்கள்ள எப்படி வியாபாரம் செய்யுறதுன்னு முன்னாடியே முடிவு பண்ணி வச்சிட்டு இதுல எறங்குங்க.....

  ReplyDelete
  Replies
  1. புடவை, மாதிரி துணி சம்பந்தமான பொருட்களை , உங்க வீட்டுல உள்ள பெண்களை கொண்டு , உங்க வீட்ல வைத்தே கூட விற்கலாம்.... ஒரு நாலைந்து தெருக்கல்ல இந்த மாதிரி கூடுதல் வருவாய் ஈட்ட விரும்புகிற பெண்கள் கிட்ட கொடுத்து அவங்க கொஞ்சம் கூடுதல் லாபம் வைத்து விற்கிற மாதிரி கூட ஏற்பாடு செய்யலாம் , இல்ல உங்க வீட்டு தாழ்வாரத்துல கூட சின்ன கடை மாதிரி கூட செட் பண்ணி மேல சொன்ன மாதிரி வியாபாரம் செய்யலாம்....
   உங்க ஊர் நடுத்தர நகரமா இருந்ததுன்னா நீங்களே அங்க உள்ள துணி கடைகள்ல ஆர்டர் பிடித்து சப்ளை பண்ணலாம்....

   இதே மாதிரி மும்பைல செம்பூர் பகுதிக்கு,சாயங்கால நேரமா போனிங்கன்ன, அங்க நல்ல,நல்ல குழந்தைகள் உடைகள் வெறும் 50 ரூபாய்க்கு விக்கிறதா பார்க்கலாம், 50 ரூபாய்க்கு விக்கிராங்கன்னா, அவங்க எந்த விலைக்கு கொள்முதல் பண்ணி இருப்பாங்கன்னு பாருங்க, அத நல்ல முறைல பேக்கிங் பண்ணி நம்ம ஊருங்களுக்கு கொண்டுபோய் விற்றோம்னா, குறைந்தது 200 -250 ரூபாய்க்கு கூட போகும்,எல்லாம் புதுசு தான், Secound Hand துணிகள் இல்ல....எல்லாம் பாம்பே தயாரிப்பு...

   அதே மாதிரி Leadies,Jents காலணிகள், பெண்களுக்கான Hand Bags எல்லாம் வெறும் 50 -100 ரூபாய்கள் தான், நம்ம ஊருங்கள்ள இத மூணு மடங்கு விலைக்கு விக்க முடியும், அதற்கான தரமும் இருக்கும்....

   ஆர்வம் இருந்தா நீங்களே போய், அவங்க எங்கே இருந்து கொள்முதல் பண்ணுறாங்கன்னு தெரிஞ்சிக்கலாம்....உங்க நண்பர்கள் யாராவது இந்த மாதிரி இடங்கள்ல இருந்தாங்கன இன்னும் வசதி....

   இந்த மாதிரி தொழில்களெல்லாம் ஆரம்பிக்க குறைந்தது ஒரு 5000 -10000 ருபாய் இருந்தா கூட போதும்....

   அதுக்கு அப்பறம், கடவுளோட கருணையும்,உங்களோட விட முயற்சியும் இருந்தா கண்டிப்பா ஒரு நல்ல நிலைக்கு உயர முடியும்.....

   Delete
 27. வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்
  ”வீட்லதான் சும்மா இருக்கேன்” என்று அங்கலாப்பவர்கள்தான் பலபேர். தங்களுக்குள் இருக்கும் திறமைகளையும், ஆர்வத்தையும் சற்று அலசி யோசித்தாலே சும்மா இருக்கும் நேரத்தில் பயனுள்ள வழிகளில் பணம் சம்பாதிக்க முடியும். அப்படி வீட்டில் இருந்த படியே செய்யச்சிறந்த பத்து தொழில்கள் பற்றிப் பார்க்கலாம்.
  1. உணவு உபசரிப்பு
  உங்கள் சமையல் கை ருசி பாராட்டப்படுகிறதா... யோசிக்காமல் இந்த உணவு உபசரிப்பில் இறங்கிவிடுங்கள். அருகில் பாச்சிலர் மேன்ஷனோ, லேடீஸ் ஆஸ்ட்லோ இருந்தால்.. வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கு உணவு செய்து தந்து லாபம் பெறலாம். பின்னே... உணவை விரும்பாதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன?
  2,புகைப்படமெடுத்தல்
  புகைப்படமெடுத்தல் சிலருக்கு ஆர்வமாக இருக்கும், இன்னும் சிலருக்கு ஹாபியாக இருக்கலாம், ஆனால் இதை ஒரு தொழிலாகவும் எடுத்துக் கொள்ள தகுதியானதே.. சரியான கருவியும், புகைப்படம் மற்றும் அந்தக் கருவி குறித்த செயல்பாடுகள் பற்றிய சில அடிப்படைகளை தெரிந்து வைத்திருத்தல் அவசியம். இந்தக்கலையில் பெயரெடுத்தவிட்டால், உங்களுக்கு ஆஃபர்கள் வந்துகொண்டே இருக்கும்,
  3,செல்லப் பிராணிகள் ஸ்டோர்ஸ்
  ஏற்றத்தாழ்வு இல்லாமல் பலரும் செல்லப்பிரானிகள் வளர்க்கிறார்கள். இதுதான் சூட்சும்ம். செல்லப்பிரானிகளுக்குத் தேவையான உணவு,மருந்து, ஷாம்பு... என அனைத்தையும் வாங்கி வைத்து வியாபாரம் செய்யலாம்.
  அருகில் உள்ள வெட்டினரி ஆஸ்பத்திரியுடன் ஒரு டை அப் வைத்துக் கொண்டீர்களானால் பிசினஸ் வெகு சீக்கிரம் பிரபலமாகிவிடும். பிராணிகள் வளர்ப்பவர்கள் மட்டுமல்ல பிராணிகளும் பழக்கமாகிவிடும்

  ReplyDelete
 28. 4,திருமண வடிவமைப்பு
  மாப்பிள்ளை அழைப்பில் இருந்து, கட்டுசாதக்கூடை வரையான திருமணத்திற்கான சகல வேலைகளைகளையும் வடிவமைத்து நிகழ்த்திக்காட்டுவது, இது ஆண்களுக்கு மட்டுமே ஆனது என்றகாலம் மலையேறிவிட்டது, புதுமையும், வேகமும், செயல்திறனும், நல்லுறவும் இருந்தால் போதுமானது, ஒரு ஃபங்ஷன் முடித்துக்கொடுத்தால் லாபம் லட்சங்களில் நிற்கும்.
  5,வெப் பேஸ்டு வணிகம்
  கம்ப்யூட்டரின் உதவியோடு வெப் சார்ந்த விஷயங்களில், வெப் டிசைனராகவோ, வெப் டெவலப்பராகவோ தொழில் துவங்கலாம். கம்ப்யூட்டர், இண்டர்நெட், ஸ்கேனர், பிரன்டர் என கட்டமைப்பிற்கு சில ஆயிரங்கள் தேவைப்படும். அதை விட முக்கியமாகத் தேவைப்படுவது, விடா முயற்சியுடன் கூடிய ஆர்வம் தான். எல்லாம் கூடி வந்தால் உங்கள் பிசினஸ் ஜெட் வேகத்தில் பயணிக்கும் இந்த வணிகத்தில்
  6,தோட்டம்
  பூக்கள் மீதும், புற்கள் மீதும் ஒரே அளவு பாசம் கொண்டவர்களும், செடி கொடிகள் மீது விருப்பம் கொண்டவர்களும், வீட்டிலேயே தோட்டம் போடலாம், அதோடு அதை பிசினஸாகவும் மாற்றலாம். சிறு செடிகளை பதியம் போட்டு, நாற்றுகளாக்கி நர்சரி போல் அமைத்து விற்பனை செய்யலாம். ஹார்டிகல்சர் தெரிந்திருந்தால் பக்கத்து அலுவலகங்களில் அவுட் சோர்ஸ் முறையில் அவர்களது தோட்டத்தை பராமறித்தும் பணம் பார்க்கலாம். மணம் வீசும் தொழில் என்பது இதுதான்..
  10,ஆட்டோமோடீவ் பாகங்கள்
  இன்றைக்கு கார் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கார் வைத்திருப்போருக்கும் மோட்டார் கார் குறித்து முழுமையாகத் தெரியாது, இந்நிலையில் கார் பாகங்கள் பற்றியும் அதன் உதிரிபாகங்களின் சிறு டீலர்ஷிப் எடுக்கலாம். இந்த மார்க்கெட்டிங் துறை தயாரிப்பாளருக்கும் பயனாளிக்கும் பாலமாக இருப்பதோடு, உத்தரவாதமான லாபத்தை தரக்கூடியதுமாகும்.
  -உங்கள் சாய்ஸ் எதுவாக இருந்தாலும், ஆர்வமும், திட்டமிடுதலும் இருந்தால் நிச்சயம் பிசினஸ் சக்சஸாகவே இருக்கும்

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.