Monday, 20 April 2015

செந்தருவிற்காக செங்குருதி சிந்திய எம் தமிழருக்காக இக்கவித்துளி என் கண்ணீர் அஞ்சலி

தெய்வம் நின்று(ம்) கொல்லும்

·         ஈறுபோதல் விதி

செம்மரத்திற்கு மட்டுமல்ல
அங்கே சிதிலமான
இருபது பேருக்கும்
பொருந்தும்.

·         நெட்டை மரங்களை
வெட்டுவது
குற்றமென்பதை
இவன் மறந்தான்.
வெட்டியவனை
சுட்ட
அவனோ மரந்தான்’!.

·         இறுதி படுக்கைக்காக
மரங்கள்
அரங்கேறுவது சம்பிரதாயம்
மரங்களுக்காக
அரங்கேறியஇச்
சம்பவம் அநியாயம் !

·         தேசம் விட்டு தேசம்
கடத்திச் செல்லும்இக்
காசுமரம் காட்டிலும்
எந்தமிழன் உயிரென்ன
இலேசினமா !? மூடனே !

·         பணப்பயிருக்காக

எம்மினத்தை
படுகொலைச் செய்த
பாவிகளே
நீங்கள்
தெலுங்கினத்திற்க்கே
ஓர்
ஒழுங்கீனம் !

·         பகவானே
பரந்தாமா !
ஒருபுறம் இராவணன்
மறுபுறம் கெளரவர்கள்
எங்கள்
தமிழ்த்தாயை
யார்தான் காப்பது ?


·         அடிமை இந்தியாவில்
மட்டுமல்ல
சுதந்திர இந்தியாவிலும்
தமிழினம் மட்டும்
தணிக்கை செய்யப்படுவது  ஏனோ ?

·         இந்தியாவுக்கு
எல்லைதான் பிரச்சனை
தமிழனுக்கு
எல்லாமே பிரச்சனை !
எல்லாமே பிரச்சனை , , , , ,

இருப்பினும்
இந்த
ஆதிகுடும்பத்தின்
ஆணிவேரை
அறுக்க நினைப்பவர்
யாராயிருப்பினும் ?,,,

·         என் எழுதுகோல்
ஒன்றை மட்டும் சொல்லும்
தெய்வம் நின்று கொல்லும்
இஃது திண்ணம் ! , , ,
*******************


.வடிவேலு எம்..,பி.எட்.
ஆசிரியர் ( சமூகஅறிவியல் )
அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி,
வாலாஜாபாத்.

1 comment:

  1. மிக மிக மிக மிக மிக அருமையான கவிதை வடிவேல் சார்.....சூப்பர்....வாழ்த்துக்கள்

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.