Thursday, 2 April 2015

இயற்கை முறையில் கொசு ஒழிப்பு கருவி: கோவை பேராசிரியர் கண்டுபிடிப்பு

அதிகரிக்கும் கொசு உற்பத்தியை தடுத்து ஒழிக்க, உணவுக்கு பயன்படும் இயற்கை பொருள்களை மருந்தாக மாற்றி, புதிய கொசு ஒழிப்புக்கருவியை கண்டுபிடித்துள்ளார் கோவை பேராசிரியர்.

சாதாரண இருமல் முதல் உயிர் பறிக்கும் டெங்கு, பன்றி காய்ச்சல் வரையிலான, கொடிய நோய்கள் பெரும்பாலும் கொசுக்களினால் தோன்றி பரவுகிறது. தேங்கி நிற்கும் நீரிலும், சாக்கடை கழிவுகளில் உற்பத்தியாகும் கொசுக்கடியினால், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு, சில நேரங்களில் உயிரிழப்பும் உண்டாகிறது.மாநில சுகாதாரத்துறையும் கொசுக்களை ஒழிக்க, பல்வேறு மருந்துகளை சாக்கடைகளிலும், நீர் ஆதாரங்களிலும் கொட்டுகின்றனர். 

ஆனாலும், கொசு உற்பத்தி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பகல் மட்டுமல்லாது இரவு நேரங்களில் கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர். கொசுக்கடியில் இருந்து தப்பிக்கவும், கொசுவை விரட்டவும் சமீபகாலமாக பல்வேறு ரசாயன, பெட்ரோல் கலந்த கொசுவர்த்தி உள்ளிட்ட மருந்துகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனாலும், கொசுக்கள் ஒழிவதில்லை;மாறாக விரட்டப்படுகிறது. இதனால், நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச்சூழலில், கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன், கொசுக்களை இயற்கை முறையில் ஒழிக்க மேற்கொண்ட நடவடிக்கையில், புதிய கருவியை கண்டு பிடித்துள்ளார்.

நாகேந்திரன் கூறுகையில்,


''அதிகரித்து வரும் கொசுக்களை ஈர்த்து அழிக்கலாம் அல்லது விரட்டலாம். கொசுவர்த்தி புகை, கெரசின் போன்றவற்றால் கொசுக்களை விரட்ட மட்டுமே முடியும்; அவற்றை அழிக்க முடியாது. நோய்களை உருவாக்கும் கொசுக்களை அழிக்க ஈர்த்து அழித்தல் முறையே சிறந்தது.''கொசுக்களை அழிக்க பிளாஸ்டிக் 'டிரம்' ஒன்றின் உள்ளே பேட்டரி அல்லது மின்சாரத்தைப் பயன்படுத்தி, எரியும் அல்ட்ரா சோனிக் பல்புகளை பொருத்த வேண்டும். 

இதற்கு கீழாக, காற்றை உள் இழுக்கும் சிறு அளவிலான நான்கு காற்றாடிகள் பொருத்த வேண்டும். இதற்கு கீழான பகுதி முற்றிலும் மூடியிருக்க வேண்டும்.''வெளியில் இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டிலில் சர்க்கரை, சோடாஉப்பு, ஈஸ்ட் கரைசலை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்கரைசலில் இருந்து கார்பன்டை ஆக்சைடை உருவாக்கி, சிறு குழாய் வழியே கொசு அழிக்கும் அல்ட்ரா சானிக் விளக்குகள் எரியும் பகுதிக்கு செலுத்த வேண்டும். ''இந்த அல்ட்ரா சானிக் விளக்கு வெளிச்சத்துடன் 20 - 30 அடி துாரம் வரை, இக்கரைசலின் மெல்லிய வாசனை பரவும் தன்மை கொண்டது. ஈர்க்கும் தன்மை கொண்ட அல்ராசானிக் விளக்குகள் கொசுக்களை ஈர்க்கிறது. 

பறந்து வரும் கொசுக்கள் 'டிரம்'ல் உள்ள பெரிய துவாரங்கள் வழியாக உள்ளிழுக்கும் பேன்களுக்குள் விழுகின்றன.''வேகமாக ஓடும் பேன் காற்றால், கொசுக்களின் உடலில் இருக்கும் நீர் வேகமாக ஆவியாகி சில மணி நேரங்களில் இறந்துவிடுகின்றன. பொதுவாக வீட்டுவாசலில் வைக்கப்படும் இக்கருவியில், தினம், 1350 கொசுக்களில் இருந்து, 1500 கொசுக்கள் வரை சிக்கி அழிகின்றன. இக்கருவியை உருவாக்க வெறும், 1,000 ரூபாய் மட்டுமே செலவாகிறது.''இதை சாக்கடைகளின் அருகில் வைக்கும் பொழுது அதிகப்படியான கொசுக்களை அழிக்கலாம். நாளடைவில் கொசுவே இல்லாத நிலையை கொண்டு வரலாம்,'' என்றார்.

12 comments:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
  2. தங்கை விஜி நலமா? மற்றும் அட்மின் கார்த்தி, தம்பி பொன்மாரி, திரு. இராம பாலன் அனைவரும் நலமா?

    ReplyDelete
  3. குருகுல நண்பர்களே 2015 க்கான ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது வரும் தேர்வில் போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் அனைவரும் கடினமாக உழைக்க முயற்சி செய்யுங்கள். தேர்வு அறிவிப்பு சுப்ரிம் கோர்ட்டு தீர்ப்பு முடிவுக்குப் பின்னரே அறிவிக்கப்படும், தீர்ப்பு அரசுக்கு சாதகமாகவே அமையக்கூடும் எனவே காலத்தை விரயம் செய்ய வேண்டாம். 11000 ம் பணியிடங்களுக்கு மேல் அரசிடம் பள்ளிக்கல்வித்துறை அனுமதி வாங்கியுள்ளது மேலும் அம்மா அவர்களுக்கு தீர்ப்பு சாதகமாகவே அமையும் என்பதால் 2013,2014 ம் ஆண்டு காலி பணியிடங்களையும் சேர்த்து கூடுதலாக பணியிடங்கள்களை நிரப்ம வாய்ப்புள்ளது எனவே அனைவரும் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும்.

    ReplyDelete
    Replies
    1. above 90 job kidaikumnu sonnengale sir athu nadakuma kumaraguru sir

      Delete
    2. நன்றி குமரகுரு அவர்களே

      Delete
    3. நன்றி குமரகுரு அவர்களே

      Delete
  4. தற்போது டெட் நடத்ததான் அரசு ஆர்வம் காட்டுகிறது லதா மேடம் 2016 தேர்தல் வர இருப்பதால் அம்மா அவர்கள் ஆலோசனைப்படிதான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பத்தகுந்த தகஙல்

    ReplyDelete
  5. பணி நியமனம் பெற போகும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.......

    ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி பணிக்காக காத்திருந்து காத்திருந்து என் வாழ்க்கை ரொம்ப கஷ்டமாக போய் கொண்டு இருக்கிறது எனவே நான் வேறு மாநிலத்திருக்கு செல்கிறேன்....

    நான் விடை பெறுகிறேன்.....

    அனைவரும் நலமாக வாழ என் நல் வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
    Replies
    1. சங்கர் சார் நீங்கள் விரக்தியில் உள்ளீர்கள் என நினைக்கிறேன் அடுத்த தேர்விற்கு தயார் ஆகுங்கள் நண்பரே

      Delete
  6. PG TRB exam intha year varuma?

    Vacancy evavalavu varum

    Please replay me sir

    ReplyDelete
  7. அமைதியா அவர் அவர் வேலையை பார்த்து கொண்டும் படித்துக்கொண்டும் இருந்திருப்பார்கள். ஆனால் தேவையில்லாமல் 2வது பட்டியல் உறுதி என்று சொல்லி படிக்கிறவர்களையும் அவர்களை படிக்க விடாமல் செய்வதுபோல் சொல்லி இப்பொழுது மறுபடியும் படிக்க சொல்வதுபோல் சொல்வது ஏதோ ஒரு வகையில் நமக்கு விளம்பரம் தேடுவது போல் உள்ளது. தயவு செய்து மற்றவர்களுடைய வாழ்க்கையில் விளையாடும் இந்தமாதிரி தகவல் தயவு செய்து யாரும் சொல்லி மற்றவர்களுடைய வாழ்க்கையில் விளையாட வேண்டாம் நன்றி

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.