Thursday, 16 April 2015

ஹரப்பா காலத்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு




ஹரப்பாவில் கிடைத்த எலும்புக்கூடுகள்


ஹரப்பா நாகரிக காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நான்கு மனித எலும்புக்கூடுகளை வட இந்திய மாநிலமான ஹரியானாவில் இந்திய அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் துணைக்கண்டத்தின் மிகப் பழமையான நாகரிகம் நிலவிய காலமான ஹரப்பா நாகரிக காலத்தைச் சேர்ந்த மனித எலும்புக் கூடுகள் நான்கை தோண்டியெடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
இந்த எலும்புக்கூடுகள் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.
இரண்டு வயது வந்த ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடுகள் வட இந்திய மாநிலமான ஹரியானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த எலும்புக்கூடுகள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும், அவைகளை டி.என்.ஏ (மரபணு) பரிசோதனைக்கு உட்படுத்தப்போவதாகவும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.
ஹரப்பா நாகரிக கால மக்கள் குறித்த புதிய தகவல்களை இந்தக் கண்டுபிடிப்புகள் தரும் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

1 comment:

  1. It is the news I am searching so. Many days.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.