Thursday, 9 April 2015

தமிழகத்தில் புதிதாக 30 பி.எட் ஆசிரியர் கல்லூரி தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பம்: துணைவேந்தர் தகவல்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 30 பி.எட். ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தொடங்க

அனுமதி கேட்டு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.
பி.ஏ., பி.எஸ்.சி. பட்டபடிப்பு படித்து முடித்தவர்கள் உடனே பி.எட் ஆசிரியர்கள் பயிற்சியை தேர்வு செய்வார்கள். இந்த பயிற்சியை முடிந்தால்தான் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்ற முடியும். மேலும் தற்போது தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால்தான் அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை என்ற நிலை ஆகி விட்டது. அதனால் பி.எட் படிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பெண்கள் ஆசிரியர் பயிற்சியை அதிகளவு விரும்பி சேருகிறார்கள்.

 குறைந்த செலவில் ஆசிரியர் பயிற்சியை முடித்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் எந்த செலவு இல்லாமல் அரசு பணியில் சேர முடியும் என்ற நம்பிக்கை நகர்ப்புற மாணவர்களை காட்டிலும் கிராமப்புறங்களில் அதிகமாக மேலோங்கி உள்ளது. தமிழகத்தில் 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் 668 உள்ளன. இந்த கல்வியாண்டில் மேலும் 30 பி.எட் கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:– புதிய கல்லூரிகள் அனுமதி கேட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. அந்த கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கட்டமைப்பு வசதி இருக்கும் பட்சத்தில் அனுமதிக்கு பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பாக விளையாட்டு, கலாசார போட்டி, மாவட்ட, மண்டல அளவில் நடைபெற்று முடிந்தன. இதற்கான பரிசளிப்பு விழா துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் சேத்துப்பட்டில் நடந்தது. இதில் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு–பதக்கங்களை வழங்கினார். மேலும் மாநில அளவிலான போட்டி சேத்துப்பட்டு விளையாட்டு அரங்கத்தில் வருகிற 10–ந் தேதி நடக்கிறது. முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பழனியப்பன் பரிசு வழங்குகிறார். செயலாளர் அபூர்வா, செந்தமிழன் எம்.எல்.ஏ., சிண்டிகேட் உறுப்பினர் நரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை துணைவேந்தர் ஜி.விஸ்வ நாதன் தலைமையில் பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் செய்து வருகின்றனர்.

3 comments:

  1. முதுகலை தமிழாசிரியர் ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்!

    PG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா?
    உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
    முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை பெற்று 30.03.2015 அன்று பணியில் மகிழ்வுடன் சேர்ந்துள்ளனர்.

    இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.
    சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில்
    எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
    இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவ 30 க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சியில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும் முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
    நீங்களும் இணையுங்கள்
    கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
    வெற்றி- 7598299935

    ReplyDelete
  2. இருக்கிறவர்களூக்கே வேலை இல்லை. இன்னும் புதுசு தேவையா.

    ReplyDelete
  3. இருக்கிறவர்களூக்கே வேலை இல்லை. இன்னும் புதுசு தேவையா.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.