Wednesday, 18 March 2015

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நேர்முக தேர்வு அறிவிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு,வரும் 25ம் தேதி, நேர்முகத் தேர்வு நடத்தப்படும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், வணிகவியல் - கணினி பிரிவு, வணிகவியல் - சர்வதேச வணிகம் மற்றும் கணினி தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு, உதவி பேராசிரியர் பணிக்கு, நேரடி நியமன பணி, 2013ல் துவங்கியது. 

ஒரு பணியிடத்துக்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில், தேர்வானவர்கள் பட்டியலை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டு உள்ளது; 43 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்; கணினி தொழில்நுட்பத்துக்கு யாரும் தகுதி பெறவில்லை. 'வரும் 25ம் தேதி, நேர்முகத் தேர்வு நடத்தப்படும்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் கூடுதல் விவரங்களை, டி.ஆர்.பி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.