Friday, 27 March 2015

மருத்துவ அதிகாரி பதவிக்கு தேர்வு -டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவ அதிகாரி பணி காலியிடங்களுக்கு, மே 31ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்படும்' என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிடப்பட்ட அறிவிப்பு:தமிழக மருத்துவ பணிகள் துறையின், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி பிரிவில், உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு, 82 காலியிடங்கள் உள்ளன. 

சித்தா 63; ஆயுர்வேதா எட்டு; யுனானி மூன்று; ஹோமியோபதி ஒன்பது காலியிடங்கள் உள்ளன.இவற்றை நிரப்ப, நேரடித் தேர்வு நடத்தப்பட உள்ளது. எழுத்துத் தேர்வு, இரண்டு தாள்களாக, மே 31ம் தேதி காலை மற்றும் பிற்பகலில் நடக்கிறது. தகுதியானோர், தங்கள் விண்ணப்பங்களை, ஏப்ரல் 24ம் தேதி வரை, ஆன் - லைனில் பதிவு செய்யலாம். இத்தேர்வை எழுதுவதற்கான தகுதி, காலியிடங்கள் ஒதுக்கீடு குறித்த விவரங்கள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறு, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.