Sunday, 8 March 2015

மாநில அளவில் நடைபெற்ற கணித போட்டிகளில்
தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி 
           திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கணிதத்திறன்  மற்றும் கணித மாதிரி வடிவமைத்தல் போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று பரிசுகள் பெற்றனர்.   
                         
          இப்போட்டிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவிகள் கிருஷ்ணவேணி  மற்றும் மங்கையர்க்கரசி வெற்றி பெற்று பரிசுகளை தட்டி சென்றனர்.மாணவி கிருஷ்ணவேணி கணித திறன் தேர்வில் வெற்றி பெற்று சிறப்பு பரிசான அண்ணா அறிவியல் மையத்தின் மெடலையும் ,ரொக்கமாக பணமும் ,கணித  மாதிரி வடிவமைத்தல் போட்டியில் மாணவி மங்கையர்க்கரசி மூன்றாம் பரிசையும் ,இதே பிரிவில் மாணவி கிருஷ்ணவேணி நான்காம் பரிசையும் பெற்றனர். கணித மாதிரி வடிவமைத்தல் போட்டி புதியதாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.கணித மாதிரி வடிவமைத்தல் போட்டியில் பிதாகரஸ் தேற்றம்,முற்றொருமைகள் ,விகிதமுறு எண்கள் ,பின்னம்,லாப,நட்டம்,தனி வட்டி கணக்கீடு ,பங்குசந்தையை விளக்கும் வரைபடம்,நிழற்கடிகரம், மாறி,மாறிலி,மெழுகுவத்தி கடிகராம்,ஆகியவற்றை வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி பயன்படுத்துதல் தொடர்பானவற்றை இப்பள்ளி மாணவர்கள் மாதிரியாக வடிவமைத்திருந்தனர் .இப்போட்டிகளுக்கு மாணவிகளை தயார்செய்த ஆசிரியை முத்துமீனாள்,ஊக்க படுத்தி அழைத்து சென்ற பெற்றோரையும்,பரிசு பெற்ற மாணவிகளையும்,
பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.

 பட விளக்கம் :  IMG - 0264,0265 திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கணிதத்திறன்  மற்றும் கணித மாதிரி வடிவமைத்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி கிருஷ்ணவேணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு கழக இயக்குனர் பேரா .வி .ராமகிருஷ்ணன் பரிசு வழங்கினார்.உடன் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மைய செயல் இயக்குனர் பி .அய்யம்பெருமாள் உள்ளார்.


பட விளக்கம் : IMG - 0260 திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான  கணித மாதிரி வடிவமைத்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி மங்கையர்கரசிக்கு தேசிய அறிவியல் விருது பெற்ற மருத்துவர் நாகேந்திரன் பரிசு வழங்கினார்.உடன் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மைய செயல் இயக்குனர் பி .அய்யம்பெருமாள் உள்ளார்.

 

 

50 comments:

 1. நைல்நதியின் மகள் என சிறப்பிக்கப்படுவது

  ReplyDelete
 2. எகிப்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்

  ReplyDelete
 3. பண்டைய எகிப்தியரின் எழுத்து முறை

  ReplyDelete
 4. எகிப்திய அரசர் ---------என அழைக்கப்படுகிறார்

  ReplyDelete
  Replies
  1. பாரோக்கள் என்று அழைக்கப்பட்டனர்

   Delete
 5. Replies
  1. நன்றி மேடம் அனைத்தும் படித்தது தான் ஆனால் ஞாபகம் வருவதில்லை, நல்ல ஞாபக சக்கதிக்கு மருந்து கூறுங்கள்(தவறாக என்ன வேண்டாம்)

   Delete
  2. எனக்கும் மறக்கிறது சார் தொடர்ச்சியாக படித்தால் சரியாகிவிடும் என நினைக்கிறேன்

   Delete
  3. 9ம் வகுப்பில் முதல் மூன்று பாடங்கள் சார் படித்துவிட்டு மதியம் பதிலளியுங்கள்

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. This comment has been removed by the author.

   Delete
 6. புகழ்பெற்ற கிஸா பிரமிடைகட்டியவர்

  ReplyDelete
 7. மெசபடோமியா நாகரிகம் பிறைந்திரன் வடிவம் போல்தோற்றமளிப்பதால் ------------என அழைக்கப்படுகிறது

  ReplyDelete
 8. தொங்கும்தோட்டத்தை அமைத்த அரசர்

  ReplyDelete
 9. கியூனிபார்ம் எழுத்துகள் -------வடிவில்இருந்ததால் --------எழுத்துகள் என்று பெயர் பெற்றிருந்தது

  ReplyDelete
 10. ஷிஹிவாங்தி கட்டிய சுவர்

  ReplyDelete
 11. உலகத்திற்கு சீனா கொடுத்த நன்கொடை

  ReplyDelete
 12. சாக்ரடிஸின் மாணவர்

  ReplyDelete
 13. வரலாற்றியியலின் தந்தை

  ReplyDelete
 14. ஆக்டேவிஸ் சீசர் மக்களால்--------என அழைக்கப்பட்டார்

  ReplyDelete
  Replies
  1. அகஸ்டஸ் சீசர்

   Delete
 15. ஜொராஸ்டர் --------எனும் தெய்வத்தை வழிபடும்படி கூறினார்

  ReplyDelete
 16. தீர்த்தங்கரர்களில் முதன்மையானவர்

  ReplyDelete
 17. சமணர்களில் வெள்ளை ஆடை அணிந்தவர்கள்

  ReplyDelete
  Replies
  1. ஸ்வேதம்பரர்கள்

   Delete
 18. புத்தரின் திருமறை பீடகங்கள்

  ReplyDelete
  Replies
  1. சுத்த பீடகம்
   வினய பீடகம்
   அபிதம்ம பீடகம்

   Delete
 19. சிங்க இதயம் என்ற பட்டப்பெயர் பெற்றவர்

  ReplyDelete
  Replies
  1. முதலாம் ரிச்சர்ட்

   Delete
 20. Tomorrow balance history lessons friends

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.