Monday, 16 March 2015

திண்டிவனத்தில், ஆசிரியர்களின் சொந்த செலவில் ஏற்பாடு செய்த ஆங்கில உச்சரிப்பு சார்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி

திண்டிவனம் அருகில் உள்ள ஒன்றியங்களைச் சேர்ந்த நண்பர்கள் திரு.கலைவாணன், 

திரு.ராஜேஷ், திரு.மூர்த்தி ஆகியோர் தங்கள் ஒன்றியத்தை சேர்ந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் 
தங்களுடைய  சொந்த  செலவில் 21.02.2015 சனிக்கிழமை Teaching of phonetic method ல் உள்ள சந்தேகங்களை 
தீர்த்துக்கொள்ளும் விதமாகவும்,மற்ற ஆசிரியர்கள்பயன்படுத்தி வரும் சிறப்புஉக்திகளை பரிமாரிக்
கொள்ளும்விதமாகவும் கலந்துரையாடல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு ராஜேஸ்வரி முருகன் 
மகாலில் நடைபெற்றது. 

இச்செய்தி அறிந்த விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திரு.சீதாராமன் 
அவர்கள் அக்கூட்டதிற்கு வந்து சிறப்புரை ஆற்றியதோடு, விடுமுறை தினம் என்றும் பாராமல் கலந்து
கொண்ட ஆசிரியர்களையும், சுய ஆர்வத்துடன் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அனைத்து 
செலவுகளையும் செய்து வெற்றிகரமாக நடத்திய நண்பர்களின் முயற்சியையும் பாராட்டினார். 

நாமும் அந்த ஆசிரிய நண்பர்களை பாராட்டுவதோடு அல்லாமல் அனைவருக்கும் இதை தெரிய
படுத்துவோம். ஆசிரியர் சமூகத்திற்கு மரியாதை சேர்ப்போம். எங்கோ ஒரு மூலையில், யாரோ ஒருவர் 
செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த ஆசிரியர்களையும் குறைகூறும் மக்களுக்கு இதை எடுத்துச் 
சொல்லுவோம் இதுபோன்ற ஆசிரியர்களும் பலர் உள்ளனர் என்று.மற்ற ஆசிரியப்பெரு மக்களும் 
நம்மால் முடிந்தளவு முயற்சி எடுத்து ஏழைக்குழந்தைகளின் வாழ்வில் ஒளிஏற்றுவோம்.

2 comments:

  1. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம்.

    ReplyDelete
  2. Congrats friends for your great efforts and service.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.