Monday, 16 March 2015

போட்டி தேர்வு நடத்தப்படும் சிறப்பாசிரியர் தேர்வில் மாற்றம் இல்லை : டிஆர்பி அறிவிப்பு

ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களில்ஆசிரியர்களை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வில் எழுத்து தேர்வில் 95 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
5 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடக்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம் மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் வெளியிட்டது.

ஆனால் இந்த பாடத்திட்டத்துக்கான புத்தகங்கள் எங்கும் கிடைப்பதில்லை என்று சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு எழுத உள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் இந்த போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.இது குறித்து தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் ராஜ்குமார், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் 15169 பேர் தொகுப்பூதிய அடிப்படையில் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்களில் பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள் 5253 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடத்துக்கு போட்டித் தேர்வு ஜூன் மாதம் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு ஆணையம்(டிஆர்பி) அறிவித்துள்ளது. ஓவியர்களுக்கான பாடத்திட்டம் குளறுபடியாக உள்ளது என்று முதல்வருக்கு மனு அளித்துள்ளோம். எனவே போட்டித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுள்ளோம். அதனால் போட்டித் தேர்வு முறையை ரத்து செய்து விட்டு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் சிறப்பாசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ஓவியம், தையல், இசை, பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு முறையை ரத்து செய்து விட்டு மாநில பதிவு முன்னுரிமையை நடைமுறைப்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று ராஜ்குமார் கேட்டுள்ளார். இந்த கோரிக்கை மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அரசாணை எண் 185ல் கூறப்பட்டுள்ளபடியே ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்

6 comments:

 1. Replies
  1. அனைவருக்கும்

   Delete
  2. காலை வணக்கம்

   Delete
 2. ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்..முட்டை மதிப்பெண் கிடைத்ததால்பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம்அவன் அனைத்து கேள்விகளுக்கும்..சரியாக பதிலளித்திருப்பதாகவே நம்பினான்..!சரியான பதிலை எழுதியதாகவே.
  அந்த மாணவன்தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்..வாதாடினான்..!
  சரி.. அப்படி என்ன தான்கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..!

  கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான்உயிரிழந்தார்..?பதில்;- அவரது கடைசி போரில்..!

  கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான..பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..?பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!

  கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்..வாழை மரங்கள் எதற்காககட்டப்படுகிறது..?பதில்;- அவைகள் கீழே விழாமல்இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!

  கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கியகாரணம் என்ன..?பதில்;- திருமணம் தான்..!

  கேள்வி;- இரவு- பகல்..எவ்வாறு ஏற்படுகிறது..?பதில்;- கிழக்கே உதித்த சூரியன்..மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்..உதிப்பதாலும் இரவு- பகல்ஏற்படுகிறது..!

  கேள்வி;- மகாத்மா காந்தி..எப்போது பிறந்தார்..?பதில்;- அவரது பிறந்த நாளன்று..!

  கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில்நிச்சயிக்கப்படுகிறதா..?பதில்;- இல்லை.. திருமணங்கள்செய்யும் அவரவர் வீட்டில்..!

  கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார்கட்டினார்..?பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக..கொத்தனார்களால் கட்டப்பட்டது..!

  கேள்வி;- 8மாம்பழங்களை.. 6பேருக்கு எப்படி சரியாகபிரித்து கொடுப்பது..?பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில்சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..

  !மாணவன் சரியாகதானே பதிலளித்துள்ளான்..???

  ReplyDelete
 3. Super sir. Eppadi sir
  ithallam

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.