Thursday, 19 March 2015

10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்:கட்டுப்பாடுகள்

* முகப்பு சீட்டில், உரிய இடத்தில் கையெழுத்து போட வேண்டும்.


* ஒரு பக்கத்தில், 20 - 25 வரிகள் வரை, இருபுறமும் எழுத வேண்டும்.

* விடைக்கு அருகில், வினா எண்ணை தவறாமல் எழுத வேண்டும்.

* வினாத்தாள் வரிசையை (ஏ அல்லது பி) மதிப்பெண்களுக்கான பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.

* நீலம் அல்லது கறுப்பு மை பேனாக்களால் மட்டுமே, தெளிவாக எழுத வேண்டும்.

* விடைத்தாளில் எழுதாத பக்கங்களில், குறுக்கு கோடிட வேண்டும்.

* வினாத்தாளில் குறியீடு இடக்கூடாது. 

* விடைத்தாளில் தேர்வு எண், பெயர் அல்லது வேறு குறியீடு எழுதக் கூடாது.

* வண்ண பேனா, பென்சில், 'ஸ்கெட்ச்' பயன்படுத்தக் கூடாது.

* விடைத்தாளில் உள்ள (மார்ஜின்) கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் எழுதக் கூடாது.

* விடைத்தாள் புத்தக தாளை கிழிக்கவோ, நீக்கவோ கூடாது.
விடைத்தாள்கள் எப்படி?
* தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளுக்கு, 22 பக்க கோடிட்ட விடைத்தாள் வழங்கப்படும்.

* ஆங்கிலம் இரண்டாம் தாளில், முதல், இரண்டு பக்கங்கள் விளம்பரம் தொடர்பான கேள்விக்காக, கோடிடப்படாமல் இருக்கும்; மற்ற மொழிகளுக்கு, கோடில்லாத விடைத்தாளை பயன்படுத்தக் கூடாது.

* கணிதம், அறிவியல் பாடங்களுக்கு, 30 பக்கங்களில் கோடிடப்படாத விடைத்தாள் வழங்கப்படும்.

* கணிதத்துக்கு, 28 மற்றும் 29 பக்க விடைத்தாளில், 'க்ராப் ஷீட்' இணைக்கப்பட்டிருக்கும். 

* சமூக அறிவியலுக்கு, 30 பக்கங்களில், முதலில் நான்கு வரைபடங்கள் இருக்கும், மீதமுள்ள, 26 பக்கங்களில் தேர்வு எழுதலாம். * கூடுதல் விடைத்தாள்கள் தேவைப்பட்டால் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.