Saturday, 14 March 2015

1,000 புதிய பள்ளிகள் துவக்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு.

மாநிலம் முழுவதும், புதிதாக, 1,000 பள்ளிகள் துவங்கப்படுகிறது.

இது தொடர்பாக, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

* மாநிலம் முழுவதும், அரசுப் பள்ளிகளில், புதிய கட்டடங்கள் கட்டுதல், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட, அடிப்படை கட்டடமைப்பு வசதிகளை ஏற்படுத்த, நடப்பு பட்ஜெட்டில், 110 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

* கிராம பகுதிகளில் துவங்கப்பட்ட, 1,000 பள்ளிகள், நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், மேலும், 1,000 பள்ளிகள் துவங்கப்படும்.


* 10ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஜோடி ஷூ, 2 ஜோடி சாக்ஸ் வழங்க, 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது; இதனால், 54.54 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.

* ஆரம்பம் மற்றும் மத்திய கல்விக்காக, 16,204 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

* உயர்கல்வி திட்டங்களுக்காக, 3,896 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

2 comments:

  1. Replies
    1. வாங்க வெங்கட் சார்.மத்திய பட்ஜட்டுக்கான அறிவிப்பு தான் இது.எல்லா மாநிலத்துக்கும் சேர்த்துதான் 1000 பள்ளிகள்.நமக்கு பள்ளிகள் ஒதுக்கப்படுமா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் பள்ளிகளின் மூடுவிழாவிற்கான பரிதாப செய்தியைநேற்றைய செய்தியில் தான்பார்த்தோமே.

      Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.