Sunday, 8 February 2015

TNTET:ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்குமா? ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலை இல்லாமல் தவிப்பு


கடந்த, 2014ம் ஆண்டில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாதநிலையில், நடப்பாண்டிலாவது தகுதித்தேர்வை நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில், 2010ம் ஆண்டு, கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே, இனி பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டே நியமிக்க முடியும்.

நியமனம்:

இதன் அடிப்படையில், தமிழக அரசு, கடந்த, 2012ம் ஆண்டில், முதல் தகுதித்தேர்வை நடத்தியது. இதில், பல லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால், ஒரு சில மாதங்களில் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இரண்டிலும், தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கும், உடனடியாக அரசு பள்ளிகளில் நியமனம் வழங்கப்பட்டது. கடந்த, 2013ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு, ஆசிரியர்களிடையே ஆர்வம் அதிகரித்தது. தேர்ச்சி பெற்றால் அரசு வேலை என்ற குறிக்கோளில், ஏராளமானோர் தீவிரமாக பயிற்சியெடுக்க துவங்கினர். இதனால், அந்த ஆண்டில் நடந்த தகுதித்தேர்வில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். 10 ஆயிரத்திற்கும் குறைந்த காலிப்பணியிடங்களே இருந்த நிலையில், அனைவருக்கும் அரசு வேலை தர முடியாத சூழல் உருவானது. இதற்காக தரம்பிரிக்கும் முயற்சியில், 'வெயிட்டேஜ்' முறை அமல்படுத்தப்பட்டது. இதில் உள்ளகுறைபாடுகள் குறித்து, நீதிமன்றத்தில் தொடர்ந்த பல்வேறு வழக்குகளின் காரணமாக, அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிநியமனம் தாமதமாகிக்கொண்டே இருந்தது. வெயிட்டேஜ் முறை மாற்றியமைக்கப்பட்டு, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு, ஒரு வழியாக, கடந்த சில மாதங்களுக்கு முன், 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

ஆர்வம்:

கடந்த இரண்டு ஆண்டில் நடந்த, மூன்று ஆசிரியர் தேர்விலும், அரசு பணியிடங்கள்நிரப்பப்பட்டதால், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தினால், அரசு பணி நியமனம் வழங்கப்படும் என்ற எண்ணம் பொதுமக்களிடையே உருவாகியுள்ளது. ஆண்டுதோறும், அரசு பள்ளிகளில் சரிந்து வரும் மாணவர் எண்ணிக்கையால், தற்போதுள்ள ஆசிரியர் எண்ணிக்கையே உபரியாக இருந்து வருகிறது. அரசு பள்ளிகளில் பணிநியமனம் என்பது,இப்போதைக்கு தேவைப்படாது என்பதால், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவது குறித்தும், எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பணிநியமனம் இல்லாமல், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டால், மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால், ஆசிரியர் தேர்வு வாரியம் தயக்கம் காட்டி வருகிறது. கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில், ஆண்டுக்கு இரு முறை தகுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும், ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருப்பது, ஆசிரியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வலியுறுத்தல்:

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: அரசும் சரி, பொதுமக்களும் சரி, ஆசிரியர் தகுதித்தேர்வை, அரசு பள்ளிகளில் பணி நியமனத்துக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வாகவே கருதுகின்றனர். உண்மையில், தனியார் பள்ளிகள், உதவிப் பெறும் பள்ளிகள் என, அனைத்திலும், தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்பதை சட்டம் வலியுறுத்துகிறது. இப்படியிருக்கும் போது,அரசு பணியை மட்டும் கருத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தாமல், தள்ளி வைத்துக்கொண்டே வருவது, பலரின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் செயலாக உள்ளது. அதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளில், பி.எட்., மற்றும் இடைநிலை ஆசிரியர் கல்வி முடித்தவர்கள், உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர, நிர்வாகம் அனுமதித்தாலும், சேர முடியாத சூழல் உருவாகியுள்ளது. தகுதியான ஆசிரியர் என்பதற்கான அளவுகோலாக, ஆசிரியர் தகுதித்தேர்வை கருதி, உடனடியாக அதை நடத்திட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

12 comments:

  1. பணிநியமனத்திற்கு தற்போது தகுதி தேர்வு தேவையா ஏனென்றால் தகுதி பெற்றவர்கள் உபரியாக உள்ளனர் அவர்களை கொண்டு நியமிக்கலாமல்லவா

    ReplyDelete
    Replies
    1. Balan sir therchi petrathaal venam ena kooruvathu sariya avvaru enil therchi peramal payichiyum pattathinaiyum vaiththu thervukku kathirukkun pala latcham peroda valkkai ennavathu. Ithil therchi petravarin suyanalam mattume tgerikirathu...

      Delete
    2. Dear Mr Balan

      The Education Commission (1964-66) இந்தியாவின் விதி இப்போது ஆசிரியர்களின் பள்ளி கூடங்களிலே வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று உறுதியாக சொல்கிறது.

      எனவே National Policy on Education 1986 ஆசிரியர்களின் தகுதி சமுதாயத்தின் பண்பட்ட மனநிலையை எதிரொலிக்கிறது என்று உறுதியாக சொல்கிறது.

      Delete
    3. If TET is held at this stage nothing will happen except increasing numbers of eligible candidates

      Delete
    4. Though we have plenty of eligible candidates from TN TET 2013, they are sidelined by now

      Delete
    5. நண்பா முனி ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் பணிநியமத்திற்கும் தொடர்பில்லையே அது வெறும் தகுதிதேர்வுதானே பணி நியமனம் ஆசிரியர் தகுதிதேர்வை வைத்து நடைபெற அரசு விரும்பினால் தானே இல்லையெனில் அரசுக்கு அவசரமாக தேவையெனில் நியமன அறிவிப்பையும் வெளியிட எந்த தடையும் இல்லையே வழக்கு தவிற மேலும் நான் சுயநலமற்றவன் என்பது என்மனசாட்சிக்கு தெரியும் அது போதும் எனக்கு

      Delete
    6. அலெக்ஸ் சார் தகுதிதேர்வு முற்றிலும் தேவையில்லை என்று சொல்லவில்லை தற்போது அரசுக்கு ஆசிரியர்கள் தேவையெனில் ஆசிரியர் தகுதிதேர்வை நடத்த கட்டாயமா ஆசிரியர்தகுதி தேர்வு வைத்தே பணிநியமிக்க விதியுண்டா சார்

      Delete
    7. உங்கள் கருத்து முழுவதும் ஏற்கக்கூடியது பாலன் சார்

      Delete
    8. Yes Mr Balan

      NCTE has instructed all the State Govt. to conduct TET in recruiting Teachers for Govt Schools as well as Govt. aided school. As per the RTI act no State is not supposed to deny the TET.

      NCTE

      The essential qualifications for a person to be eligible for appointment as a teacher in any of the schools referred to in clause (n) of section 2 of the RTE Act is that he/she should pass the Teacher Eligibility Test (TET) which will be conducted by the appropriate Government in accordance with the Guidelines ffarmed by the NCTE

      Delete
    9. திரு பாலன் அவர்களுக்கு (19.21)

      Sorry for the interfere.

      1. ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் பணிநியமத்திற்கும் தொடர்பு உண்டு.

      2. மாநில அரசு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆசிரியர் பணி நியமனத்திற்க்கு தகுதி தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும்.

      Delete
  2. Dear Admin as well as Dear friends

    சரிந்துவரும் மாணவர்களின் எண்ணிக்கையாலோ அல்லது ஆசிரியர்களின் எண்ணிக்கை உபரியாலோ, தகுதி தேர்வு தள்ளிவைக்கப்படுகிறது என்பதாக இதுவரை செய்தி வெளிவரவில்லை.

    செய்தி;
    ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது?
    By dn, சென்னை
    First Published : 03 December 2014 05:31 AM IST

    உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிவடைந்த பிறகே, நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

    கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நிறைவடைந்ததும் அந்தத் தேர்வு தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
    அதேபோல், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண் சலுகையை எதிர்த்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு மதிப்பெண் சலுகை ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில், ஆசிரியர் பணி நியமனத்துக்காகப் பின்பற்றப்படும் தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு முடிந்த பிறகே, நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    http://www.dinamani.com/tamilnadu/2014/12/03/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/article2552907.ece

    ReplyDelete
  3. Dear alex Sir, முகநூலில் எனக்கு கிடைத்த செய்தியை பதிவிட்டேன், இந்த பதிவு என்னுடைய சொந்த கருத்தல்ல,

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.