Monday, 9 February 2015

நிதானமாக இரு...


தான் வெளியூர்
சென்று திரும்பும்முன் தான் எழுதிய
நூலைப்
படித்து முடித்து விடுமாறு குருகுலத்தில்
சீடர்களிடம் சொல்லிச்சென்றார் அந்த
குருநாதர். எல்லோரும் முழுமையாக
படித்து முடித்திருந்தார்கள்.
ஒரே ஒரு சீடர், அதில்
ஒரேயொரு வரியை மட்டுமே படித்ததாக
சொன்னார். மிகக் கடுமையாக ஏசினார்
குரு. சீடர் முகம் சற்றும் வாடவில்லை.
ஓங்கி அறைந்தார் குரு. அந்த இளைஞர்
வருந்தவில்லை. சிறிது நேரம் போனது.
அமைதி யடைந்த குரு, அந்த
சீடரை அழைத்து, "நீ படித்த வரி என்ன "
என்று கேட்டார். "உன் கோபத்தைக்
கட்டுப்படுத்து எப்போதும் நிதானமாக
இரு " என்பதே அந்த வாசகம். வெட்கித்
தலை கவிழ்ந்தார் குரு.
அந்த குரு துரோணாச்சாரியார்
அந்த சீடர் தருமர்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.