Friday, 6 February 2015

ஒரு சுவாரஸ்யத்தகவல்.....

உங்களிடம் நீங்கள் பிறந்த தேதியை கேட்டால் சரியாக சொல்லுவீர்கள் அல்லவா. ஆனால் பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதில் தர முடியுமா?

நீங்கள் பிறந்த தினத்திலிருந்து இன்று வரை உங்களுக்கு எத்தனை வருடங்கள், எத்தனை மாதங்கள், எத்தனை நாட்கள் என்பதை கூற முடியுமா?

சரி அதனையும் ஒரு சில கணித்து கூறிவிடுவீர்கள் என வைத்துகொள்வோம். அப்படியாயின் பின்வரும் கேள்விகளை பார்ப்போம்.

* நீங்கள் பிறந்த தினத்திலிருந்து இதுவரை உங்கள் இதயம் எத்தனை தடவைகள் துடித்துள்ளது/ துடித்துக்கொண்டிருக்கிறது.

* நீங்கள் பிறந்தது தொடக்கம் இதுவரை எத்தனை தடவைகள் சுவாசித்துள்ளீர்கள்

* நீங்கள் பிறந்தது முதல் இதுவரை சந்திரன் எத்தனை தடவை பூமியை வலம் வந்துள்ளது.

* நீங்கள் பிறக்கும் போது இந்த உலகில் எத்தனை பேர் உயிருடன் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்? தற்போது எத்தனை பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? இதை தவிர, நீங்கள் குழந்தை பருவத்தில் இருக்கும் போது உலகில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள் என்ன?

* உங்களுக்கு 20 வயதாக இருக்கும் போது உலகில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள் என்ன என இதுமட்டுமின்றி, நீங்கள் பிறந்த 500வது நாளை அடைந்த தேதி என்ன என இவற்றுக்கெல்லாம் ஒரு சாதாரண மனிதனால் இலகுவாக எப்படித்தான் விடையளிக்க முடியும். அப்படியே விடையளிக்க வேண்டுமெனின் எந்திரன் படத்திலுள்ள ரோபோ தான் வந்தாக வேண்டும். 

சரி இவற்றுக்கெல்லாம் விடை தருகிறது Getting Old எனும் இணையதளம். இந்த தளத்துக்கு சென்று உங்கள் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் ஒரு சில வினாடிகளிலேயே மேற்கூறப்பட்ட அனைத்து கேள்விகளுக்குமான விடையை பெற்றுக்கொள்ள முடியும். எவராலும், மிக இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எளிமையாகவும், தெளிவான தகவல்களை தருகின்றது. 

15 comments:

  1. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம்.

    ReplyDelete
  2. Madam good morning. Next tet eppo varum sollunga

    ReplyDelete
    Replies
    1. கடந்த டி இ டி யில் அறிவித்திருந்த வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றி பல வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது,
      அம்மதிப்பெண்ணின் பாதிப்பை எடுத்துரைத்ததில் ஏற்றுக்கொள்ளும் படியாகவும் உள்ளது,வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மாற்றம் வரலாம்.தீர்ப்பு வந்ததும் தேர்வுஅறிவிக்கப்படும்.10,12ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்ததும் எதிர்பார்க்கலாம்.

      Delete
  3. காலைவணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  4. குருகுலம் நண்பர்கள் அனைவருக்கும்
    காலை வணக்கம்

    ReplyDelete
  5. viji sis gud morning where is Dharini karthi madam ?

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் மீனு,நம் வலைதளத்தில் தான் இருக்கிறார்கள்,உன் பதிவைப் பார்த்தால் வருவார்கள்,ஏதேனும் அவசரச் செய்தியாக இருந்தால் சொல் மீனு தரிணியை வரச்சொல்லிமெயில் செய்கிறேன்.

      Delete
    2. aptilam aethum illa , Ellarum vantha rempa nalla irukum la sis athan koopiten

      Delete
  6. ஆம் மீனு,தொடர்ச்சியாக வலைதளத்தில் யாராவது பதிவிட்டுக்
    கொண்டிருந்தால் நண்பர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.....அவர்கள் பார்வையிடும் சமயம் யாரும் இல்லையென்றால் பார்த்துவிட்டு பதிவிடாமல் சென்றுவிடுவார்கள்.ஓய்வாக இருந்தால் மதியம் அல்லது evening ல் நீயும் ஏதேனும் ஒருபாடத்தலைப்பில் வினாக்களை வெளியிடு மீனு ,பார்வையிடும் நண்பர்கள் விடைதெரிந்தவர்கள் பதிவிடுவார்கள்.continueசெய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. supreme court relaxation case news therincha sollunga. plz.

      Delete
    2. enaku tamil la type panna varathu sis, athan eppavum answer panna mattum varuven sis

      Delete
    3. type செய்ய இந்த link use பண்ணிப்பாருங்கள் .கொஞ்சம் easy ஆக இருக்கும்

      http://www.google.com/inputtools/try/

      Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.