கோவை பி.எப்., உதவி கமிஷனர் பேசியதாவது:தொழில் முனைவோர், தொழிலாளர்கள், அரசு செயலர்கள் என முத்தரப்பு குழு ஆலோசனை பெற்று, பி.எப்., வாரியம் இயங்குகிறது. பயனாளிகள், தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில், பி.எப்., நடைமுறை கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் கணக்குகளுக்கு, "யுனிக் நம்பர்' எனப்படும் 10 இலக்க ஒருங்கிணந்த கணக்கு எண் வழங்கப்படுகிறது.பி.எப்., நிறுவன இணைய தளத்துக்குள் சென்று, "யுனிக்' எண், மொபைல் எண்களை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம், தங்கள் கணக்கில் சேர்க்கப்படும் தொகை, பெறப்பட்ட தொகை என அனைத்து விவரங்களையும் எஸ்.எம்.எஸ்., மூலம் பெறலாம். பதிவு செய்வது, குறைகேட்பு என அனைத்து சேவையும் ஆன்-லைனில் வழங்கப்படுவதால், அலுவலகத்தில் இருந்தபடி, பி.எப்., நடைமுறையை கையாள முடியும்.பி.எப்., கணக்கில் உள்ள தொகையை பெறுவது கடினம் என்ற தவறான எண்ணம் உள்ளது; அதிகபட்சம் 20 நாட்களுக்குள், வைப்புத்தொகையை பெற முடியும். பி.எப்., என்பது தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம். எனவே, தொழிலாளர்கள், தாங்களாக முன்வந்து, இத்திட்டத்தில் இணைய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.திருப்பூர் பி.எப்., அமலாக்க அதிகாரிகள் ஆல்பிரட் ராஜ், சசீதரன் ஆகியோர், திட்ட பயன்பாடு குறித்து பேசினர். பின்னலாடை உற்பத்தியாளர்கள், மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் பங்கேற்று, சந்தேகங்களை கேட்டறிந்தனர்.