Tuesday, 17 February 2015

உறுப்பு தானம் என்றால் என்ன?


ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர்
தனது உறுப்பின்
ஒரு பகுதியை அல்லது முழு உறுப்பை,
அந்த உறுப்பு தேவைப்படும் ஆனால்
கிடைக்காமல் இறக்கும் தருவாயில்
இருக்கும் ஒருவருக்கு தானமாகக்
கொடுத்து அவரை மரணத்தின்
பிடியிலிருந்து காப்பாற்றுவதாகும்.இறந்த
(மூளைச்சாவு ஏற்பட்ட பின்னர்) பின்
தானம் செய்யக் கூடிய உறுப்புகள்:
இரண்டு சிறுநீரகங்கள்,
கணையம்,கண்கள்
(கார்னியா எனப்படும்
விழித்திரை),குடல் முழுவதும்,
இதயம், நுரையீரல், இயற்கையான
மரணத்தின் பின் கார்னியா, இதய
வால்வுகள், தோல், எலும்புகள்
ஆகியவற்றை தானமாகக்
கொடுக்கலாம்.
இந்தியாவில் உறுப்பு தானம் என்ன
நிலையில் இருக்கிறது?
ஒவ்வொரு வருடமும் சுமார் 2 லட்சம்
நோயாளிகள் உறுப்பு தானம் பெற
காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்தியாவில் ஒரு லட்சம்
நபர்களில் 0.16 பேர் மட்டுமே தானம்
செய்ய முன் வருகிறார்கள்.உங்கள்
உடல் இறப்பினால் மடிய
வேண்டியதில்லைஇதைத்தான்
�உறுப்பு தானம்� என்கிறார்கள்
மருத்துவத்
துறையில்.உறுப்பு தானம்
என்பதை இரண்டு வகையாகப்
பிரிக்கலாம்.ஒன்று உயிருடன்
இருக்கும்போது செய்யும் தானம்.
இன்னொன்று இறந்த பின்னர்
செய்வது. உயிருடன் இருக்கும்
போது நமக்கு இரண்டு சிறுநீரகம்
இருப்பதால் ஒன்றை தானமாகக்
கொடுக்கலாம். நுரையீரல், குடல்,
கணையம், ஈரல் ஆகியவற்றின்
ஒரு பகுதி�யும் தானமாக
கொடுக்கலாம்.இறந்த
(மூளைச்சாவு ஏற்பட்ட பின்னர்) பின்
தானம் செய்யக் கூடிய உறுப்புகள்:
இரண்டு சிறுநீரகங்கள்,
கணையம்,கண்கள்
(கார்னியா எனப்படும்
விழித்திரை),குடல் முழுவதும்,
இதயம், நுரையீரல், இயற்கையான
மரணத்தின் பின் கார்னியா, இதய
வால்வுகள், தோல், எலும்புகள்
ஆகியவற்றை தானமாகக்
கொடுக்கலாம்.
ஒவ்வொரு வருடமும் சுமார் 2 லட்சம்
நோயாளிகள் உறுப்பு தானம் பெற
காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்தியாவில் ஒரு லட்சம்
நபர்களில் 0.16 பேர் மட்டுமே தானம்
செய்ய முன்
வருகிறார்கள்.கடைசி நிலை சிறுநீரகக்
கோளாறுகள் இந்தியாவில்
ஒரு லட்சத்துக்கு 175
நபர்களை தாக்குகிறது. அதாவது 2.1
லட்சம் இந்தியர்கள் சிறுநீரகத்திற்காகக்
காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் வருடத்திற்கு 3,000 முதல் 4,000
சிறுநீரகங்கள்
மட்டுமே மாற்றி பொருத்தப்படுகின்றன.இந்தியாவில்
சாலை விபத்துக்கள் மிக உயர்ந்த
அளவில் நிகழ்கின்றன. அதாவது 1.4
லட்சம் வருடத்திற்கு! கடுமையான
தலைக் காயங்களினால் ஏற்படக்கூடிய
மூளைச்சாவு இதில் 65%
என்று ஆய்வு கூறுகிறது. பெரிய
நகரங்களில் வசிப்பவர்களுக்கு இதன்
முக்கியத்துவம் தெரிந்திருந்தாலும்
தானம் செய்ய முன்வருவதில்லை.
இதற்குப் பல காரணங்கள்.'கொடை'
என்பதை எல்லா மதங்களுமே ஆதரிக்கின்றன.
நாம் இறந்த பிறகு நம்
உறுப்புகளை கொடுப்பதன் மூலம்
ஒருவரை வாழ வைக்க
முடியு மானால் அதைவிட
கொடை வேறென்ன இருக்க
முடியும்? நாம் இறந்தபின் நம் உடல்
மண்ணோடு மண்ணாக மட்கிப்
போவதைவிட இன்னொருவரை வாழ
வைக்க பயன்படுமாகில் செய்யலாமே
யார் தானம் கொடுக்கலாம்?
எல்லோருமே வயது, மதம், ஜாதி, இனம்
தாண்டி தானம் செய்யலாம்.
பெற்றோர்களின் சம்மதத்துடன்
குழந்தைகளும் தானம் செய்யலாம்.
தீவிர புற்றுநோய், எய்ட்ஸ், இரத்தத்தில்
நுண்ணுயிர் நச்சேற்றம் இருப்பவர்கள்
தானம் செய்ய முடியாது.

3 comments:

  1. இன்றைய கல்வியில் இடம்பெறக்கூடியவையாக பாடத்திட்டம் அமையவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஆலோசனைசகோதரா,நன்றி.

      Delete
    2. SUPREME COURT OF INDIA
      Case Status Status : PENDING

      Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014

      V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.


      Pet. Adv. : MR. T. HARISH KUMAR


      Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT


      Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS


      Listed 1 times earlier Likely to be Listed on : 09/03/2015

      Last updated on Feb 17 2015

      NIC

      Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.