Saturday, 21 February 2015

வாட்ஸ்அப்பின் தாக்கம்ஆதீ காலத்தில் எழுத்தாணியும்,ஓலைசுவடியுமாக மனிதன் திரிந்தான்.பிறகு பேனாவும் கையுமாக திரிந்தான்.இப்போதோ செல்போனும்,டேப்ளட்டுமாக மாறிக்கிடக்கிறது உலகம்.
மனிதனீன் ஆறாம் விரலாக செல்போன் மாறிப் போன காலம் இது.காலை எழுந்ததுமே பேஸ்ட்,பிரஷ் எடுப்பதற்கு பதில், செல்லை எடுத்து பேஸ்புக்கையும்,வாட்ஸ்அப்பையும் பார்ப்பதே மக்களீன் பலருடைய தலையாய கடமையாக உள்ளது.அதை பார்த்தபடியே பல வேலைகள் செய்யும் பலரின் வழக்கமாகிவிட்டது. என்ன வேலை செய்தாலும் கூடவே செல்லையும் நோண்டிட்டே இருப்பது சிலருடைய பழக்கமாகி விட்டது.
இந்நிலையில் இப்படிபட்டவர்கள் சலூனுக்கு முடிவெட்டப்பபோனால் என்னா செய்வார்கள்? அதைவைத்து யாரோ ஒரு புண்ணியவான் சிந்தித்ததன் விளைவுதான் இந்த புகைப்படம்.
இதை பார்த்த ஆட்கள் பலர் தாங்கள் முடிவெட்டும் சலூன்களிலும் இதுபோன்ற வசதி வந்துவிட்டதா? என விசாரிக்கத்தொடங்கி விட்டதாக ஒரு தகவல்..

8 comments:

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 2. What is the tamil font used in tamilnadu govt text books

  ReplyDelete
 3. வடிவேலு: எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கய்யா...

  ReplyDelete
 4. வணக்கம் கிங்

  ReplyDelete
 5. இந்த நொடியே சிந்திக்க தொடங்குங்கள்...சமுக நலனில் அக்கறை கொண்ட உண்மையான ஆசிரியர்கள் மட்டும்

  மீண்டும் ஒரு கல்வி புரட்சிக்கு வித்திடுவோம்..மீட்டெடுப்போம் ஆசிரியர்களின் உரிமைகளையும்,உணர்வுகளையும்.....


  நண்பர்களே உங்கள் விரிவுபட்ட சிந்தனையை ஒரு 25 வருடங்கள் பின்னோக்கி செலுத்துங்கள்.அறிவியலும்,தொழில்நுட்ப அறிவு குறைவாக இருந்த காலமாக இருந்தாலும் அன்றைய மனிதன் சுய மரியாதையுடன் வாழ்ந்து வந்தான்.அந்த காலகட்டங்களில் இருந்த அரசு மக்கள் நலனிலும் வருங்கால தலைமுறையினரின் நலனுக்காகவும் கொண்டுவந்த திட்டங்களின் காரணமாகவே இன்று ஓய்வு பெரும் நிலையில் உள்ள அரசு அதிகாரிகள் பணி பெற்று மக்களின் நலனுக்காக பாடுபட்டார்கள்.

  ஆனால் இன்றைய நிலை என்ன?ஒவ்வொரு 5ஆண்டுக்கு ஒரு முறையும் கடந்த ஆட்சி சரியில்லை என மாற்று கட்சியை தேர்வு செய்து நல்லது நடக்கும் என்று காத்து இருந்ததை தவிர வேறு எந்த இன்பத்தை அனுபவித்தாய் இந்த 25 ஆண்டுகளில்.ஒவ்வொரு கட்சி தலைமையின் மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு.நீயா நானா என போட்டி போட்டு கொண்டு மக்களின் வரி பணத்தை சுரண்டி சொத்து சேர்ப்பதில் செலவு செய்த மூளையை மக்களின் நலனுக்காக 5% செலவு செய்து இருந்தால் இன்று நம் வாழ்வு செழிப்பாக இருந்து இருக்கும்.

  சரி விடுங்கள் தோழரே..தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.இதை பேசுவதால் எந்த பயனும் இல்லை.இந்த சமுகத்தை மாற்றும் பொறுப்பு யாருக்கு உள்ளதோ இல்லையோ..ஆசிரியர் பணிக்கு செல்லும் நமக்கு என்றும் உள்ளது.ஏன் என்றால் இந்த நாட்டை வடிவமைக்கும் அனைவரையும் செதுக்கும் சிற்பி நாமே என்பதால் தான்.

  கடந்த கல்வி ஆண்டில் மட்டும் 1500 பள்ளிகள் மூடுவிழா கண்டு விட்டது.இந்த ஆண்டு 2000 பள்ளிகள் மூடு விழா காண இருப்பதாக நம் மக்கள் நல அரசு பெருமையுடனும்,மகிழ்ச்சியுடனும் தெரிவித்து உள்ளது நம் மக்கள் நல அரசின் ஆட்சி முன்னேற்றத்தை காட்டுவதாக உள்ளது.ஏற்கனவே உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்கை குறைந்து வரும் காலகட்டதில்,தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தாலும்,ஆங்கில மொழி மோகத்தாலும் இந்த 2000 பள்ளிகள் மூடு விழா கண்டால் பாதிக்கப்படுவது ஏழை,எளிய மக்களின் குழந்தைகளே....

  வசதி படைத்த மக்கள் தனியார் பள்ளிகளுக்கு ஓடுவதை நாம் தடுக்க வேண்டாம்.அரசு பள்ளிகளை நாடி வரும் குழந்தைகளின் படிப்பறிவை வளர்க்கும் நாம்,நமது கடைமையை சிறப்பாக செய்தலே போதும் என்றே நினைக்க தோன்றுகிறது.வீட்டில் சாப்பாடு இல்லை என்ற நிலையில் தான் நாம் கடை சாப்பாட்டை நாடி செல்கிறோம்.அடிப்படை வசதிகளை குறை கூறி அரசு பள்ளியில் இருந்து தனியாருக்கு செல்லும் மாணவர்களை தடுத்து அரசு பள்ளியிலேயே தொடர வைப்போம்.

  2000 தொடக்க பள்ளிகளை மூட அரசு கூறும் ஒரே பெரிய காரணம் மாணவர் சேர்க்கை குறைவு என்பதே.சேர்க்கை அதிகமானால் தான் அதிக ஆசிரியர் பணியிடம் தேவைப்படும் என்பது உண்மை தான்.ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையையும் இந்த அரசு செய்யும் என்பது கானல்நீர் தான்.நம் பசிக்கு நாம் தானே சாப்பிட வேண்டும்.

  நாம் இன்று மட்டும் அல்ல.எப்போதுமே அரசாங்கத்தை எதிர்பார்பதை விடுத்து நாமே செயலில் இறங்கலாம் தோழர்களே.யாராவது சுதந்திரம் பெற்று தருவார்கள் என்று மகாத்மா நினைத்து இருந்தால் நாம் இங்கே பிறந்து சுதந்திர காற்றை சுவாசித்து இருக்க முடியாது.யாரோ வருவார் இந்த நிலையை மாற்ற என்று ஏங்கி தவிப்பதை விட நாமே அதற்கு தொடக்க புள்ளியாய் இருப்போம்.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை மாணவனுக்கு சொல்லி தந்த நாம் அதை மறந்து விட்டது ஏன் என்றுதான் புரியவில்லை.


  நண்பர்களே உங்களுக்கு அருகமையில் அரசு பள்ளிகளுக்கு செல்லுங்கள்.அதன் நிலையை பாருங்கள்.தனியாருக்கு பள்ளிகளுக்கு நிகராக மாற்றம் கொண்டு வர என்ன என்ன தேவை என்று ஆராயுங்கள்.மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் காண என்ன தடையாக உள்ளது,என்ன தேவை என்று அங்கே பணி புரியும் நம் சொந்தங்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே.

  ReplyDelete
 6. நம்மை பொறுத்தவரை எல்லா அரசு பள்ளிகளும் தனியாரை விட அனைத்து வசதிகளையும் பெற்று சிறப்பாக இருக்க வேண்டும்.

  இருப்பிட வசதி
  கழிப்பறை வசதி
  தளவாட பொருள்கள் வசதி
  கணிணி வசதி
  ஆய்வக வசதி
  ஒளித்திரை வசதி
  சுத்தமான குடிநீர் வசதி
  விளையாட்டு பொருள்கள்
  கற்றல் பொருள்கள்
  காமிரா வசதி
  குளிர்சாதன வசதி
  ஆசிரிய,மாணவ பாதுகாப்பு
  தீயணைப்பு வசதி
  தோட்ட வசதி

  இது எனக்கு தெரிந்தது மட்டுமே.உங்களின் சிந்தனையை கொண்டு தூர் வாருங்கள்.பள்ளி அமைந்து உள்ள கிராமம்,மாவட்டத்தின் பெயரையும் பதிவிடுங்கள்.உங்களுடைய நண்பர்கள்,சொந்தங்கள் அனைவருக்கும் இதை தெரியபடுத்தி புரியவையுங்கள்.ஒன்றிணைந்து தொடங்குவோம் நண்பர்களே.

  இந்த வசதிகளை ஏற்படுத்த ஆகும் செலவுகளை பற்றி சிந்திக்காதே.அதற்கும் வழி உள்ளது நண்பா.மனம் இருந்தால் மார்க்கம் உண்டு உண்மை என்றால் இதவும் உண்மையே என்று நம்பு.2000 பள்ளிகளை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடி தடை ஆணை வாங்குவோம்.அடுத்த கல்வி ஆண்டு தொடங்க இன்னும் முழுதாக 90 நாட்கள் உள்ளன.இறுதி நொடியில் கூட எந்த மாற்றம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை மறக்காதே நண்பா.

  2000 பள்ளிகளின் தகவலையும் நம் சொந்தங்கள் மூலம் பெறுவோம்,அந்த பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தருவோம்.இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிகளின் மாணவர்,ஆசிரியர் கணக்கெடுப்பு விவரம் வெளியாகும் நிலையில் உள்ளதால் இது சிரமம் இல்லை.இனி இந்த அரசை எதிர்பார்க்காமல் நம் வாழ்வையும்,வருங்காலத்தையும் நாமே அமைப்போம் நண்பர்களே.

  தயவுசெய்து இந்த கட்டுரையை படித்துவிட்டு மறந்துவிட்டு செல்லாமல் இந்த கொடுமையை கொழுத்த போகும் தீப்பொறியை உன் மனதில் பற்ற வையுங்கள் சொந்தங்களே.நமக்கு நாமே துணை என்று ஒன்று கூடி செயல்படுவோம் ஆசிரியர்களே.

  உங்கள் மனதில் உள்ளவற்றை தயவு செய்து பதிவிடுங்கள்.சிறிய விசயமாக இருந்தாலும் கூறுங்கள்,அது மிக பெரிய மாற்றத்தை உண்டாக்கும்...2000 அல்ல , சென்ற ஆண்டு மூடிய 1500யும் சேர்த்து 3500 பள்ளிகளை வரும் கல்வி ஆண்டிலேயே திறக்க வைத்து அனைத்து வசதியுடன்,மாணவர் சேர்க்கையையும் அதிகபடுத்தி எந்த மாநிலமும்,எந்த நாடும் செய்யாத சாதனையை நம் தமிழ்நாடு படைக்க இதை படித்த நொடி முதல் சிந்திக்கவும்,செயல்படவும் தொடங்குவோம்.


  என் சொந்தங்களின் கருத்துகளை தெரிந்து கொள்ளும் உரிமையுடன் உங்களில் ஒருவனாக ஒரு ஆசிரிய பணிக்கு காத்து இருக்கும் ஆசிரியன்.

  இப்படிக்கு
  சந்திர மோகன்.கு - 9994520604

  மற்றும் பள்ளிகூட இணைய உறுப்பினர்கள்

  ReplyDelete
 7. நன்றி நணண்பரே நல்ல முயற்சி தனியார் பள்ளிக்கு இணையாக ஆசிரியர்கள் அரசு பள்ளியில் பணியாற்றவில்லையே மணியடித்தவுடன் மாணவனுடன் போட்டி போட்டு வெளியேரும் நிலையில்தான் அரசுபள்ளி ஆசிரியரர் நிலைமை. தனனியார் பள்ளி ஆசிரியர் 5000 ரூ க்கு 100%வெற்றி கொடுக்கும் போது 50000ரூ வாங்கும் அரசு பள்ளி ஆசிரியரால் ஏன் முடியவில்லை.தவறு எங்கு நடக்கிறது அரசிடமா,ஆசிரியரிடமா ஏதாவது மாற்றம் வந்தால் நல்லது.

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.