Monday, 23 February 2015

மாணவ-மாணவிகள் தேர்வை ஒரு கொண்டாட்டமாக கருதி எதிர்கொள்ளுங்கள் மாணவர்களுக்கு மோடி அறிவுரை


பிரதமர் நரேந்திரமோடி ‘மன் கி பாத்’ என்ற தலைப்பில் வானொலியில் மாதம் மாதம் தொடர்ந்து பேசி வருகிறார். வானொலியில் அவர் மாணவர்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: மாணவ-மாணவிகளே நீங்கள் உங்களை தேர்வுக்கு தயார் செய்து கொள்ளும் இந்நேரத்தில் நானும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

நான் என்னுடைய பள்ளிப் பருவத்தில் மிகவும் சாதாரணமான மாணவனாகத்தான் இருந்தேன். நான் எழுதிய தேர்வுகளில் மிகவும் நல்ல மதிப்பெண்கள் எல்லாம் எடுக்கவில்லை. என்னுடைய கையெழுத்தும் மிகவும் மோசமாகத்தான் இருந்தது.தேர்வு மோசமாக எழுதிவிட்டால் 
வாழ்க்கையில் எல்லாமே மோசமாகிவிடும் என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. தேர்வுகளை மிகவும் சகஜமாக அணுகுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்குவழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

படி படி என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நெருக்கடி தராமல்  மற்றவர்களை விட நம் குழந்தைகள் சிறந்த படிப்பாளியாக வரவேண்டும் என்ற நோக்கத்தில் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் அணுக வேண்டும்.உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் தான் இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள் இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

7 comments:

  1. தங்கை விஜி, தம்பி பொன்மாரி, மற்றும் நமது குருகுல நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்

    ReplyDelete
  2. அனைவரும் காலத்தை விரயம் செய்யாமல் வரும் 2015- ம் ஆண்டிற்க்கான டி.இ.டி தேர்விற்க்கு அனைவரும் தயாராகுங்கள் இனி ஒரு போதும் 2 வது பட்டியலுக்கு வாய்ப்பு மிக,மிக குறைவே எனவே நாம் அனைவரும் 90- 90க்கு மேல் பெற்றுள்ளோம் என இருமாப்பாக இருந்துவிட வேண்டாம் ஏனெனில் படித்து முடித்து வெளியே வரும் இளைய தலைமுறையினர் அதிக மதிப்பெண்களோடும் மிகவும் எச்சரிக்கையோடும் படித்து வருகின்றனர் ஆகவே இனி வரும் காலங்களிலாவது நடந்ததை எண்னி வருத்தப்படாமல் தேர்விற்க்கு அதிக கவனம் எடுத்து அடுத்த பணியிடத்திலாவது வேலைக்கு செல்ல முயற்ச்சி செய்யவும். என்றும் குருகுலத்திற்க்கு ஆதரவுடன் : குமரகுரு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி குமரகுரு அண்ணா,

      Delete
  3. S அதிவிரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு
    அறிவிப்பு வெளிவர போகிறது.அதற்கு இப்பொழுது இருந்தே தயார் ஆவதே நல்லது.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.