Sunday, 22 February 2015

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிநிரவல் கணக்கெடுக்க உத்தரவு


தொடக்க கல்வி இயக்குனரகம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தொடக்கக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளிகள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 31.8.2014 தேதியில் உள்ளவாறு மாணவர்கள், ஆசிரியர்கள் விவரங்களை வரும் 25-ந் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

ஆகஸ்டு மாதத்திற்குரிய பள்ளிக்கூடமாதாந்திர அறிக்கை அடிப்படையில்
மாணவர்கள் விவரம் பூர்த்தி செய்யப்படவேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில
வழி மாணவர்களை அந்தந்தவகுப்புகளுக்கு மொத்தமாககணக்கிட்டு வகுப்பு வாரியாக அளிக்கவேண்டும்.இவ்வாறுஅதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வுக்கூட்டங்களில் பெறப்படும்விவரத்தின் அடிப்படையில் உபரியாக
உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம்ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியிட
மாற்றம் செய்யப்படுவார்கள்என்று கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2 comments:

  1. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம்.

    ReplyDelete
  2. Vijikka suthaag intha mail id use panrathillaiya

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.