Saturday, 7 February 2015

டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவிகளை நிரப்பக் கோரி வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் காலியாக உள்ள
உறுப்பினர் பதவிகளை நிரப்பவும், அதில் அருந்ததியினர் பிரிவிலிருந்து ஒருவரை நியமனம் செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவுக்கு மார்ச் 19-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.இதுதொடர்பாக சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த வலசை இ.ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

தமிழ்நாடு அருந்ததியர் சட்டம் 2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இச் சட்டம் அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில், மாநில அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில் அருந்ததியரை நியமனம் செய்வதற்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவதாகும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் உறுப்பினர் பதவிகள் நீண்ட காலமாக காலியாக உள்ளது. இதனால், பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பரிவு 319, ஒவ்வொரு மாநிலத்திலும் அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அமைப்பதற்கு வழிவகை செய்கிறது.

இதன் படி, தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர்களை அந்தந்த மாநில ஆளுநர்கள் நியமிக்கலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஒழுங்குமுறைச் சட்டம் 1954-இன் படி, இந்த ஆணையத்தில் ஒரு தலைவர், 14 உறுப்பினர்கள் அமைக்கப்படுவர்.

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் 5 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இதனால், அரசுப் பணிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த 24 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர் (மோச்சி) சமூகத்திலிருந்து ஒருவர் கூட அந்த உறுப்பினர் பதவியில் நியமிக்கப்படவில்லை. அந்த சமூகப் பிரிவில் தகுதி உள்ள நபர்களை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்க வேண்டும்.

எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் காலியாக உறுப்பினர் பதவிகளை நிரப்பவும், அதில் அருந்ததியர் சமூகப் பிரிவிலிருந்து ஒருவரை நியமிப்பது குறித்து பரிசீலனை செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் வி.இளங்கோவன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு மார்ச் 19-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

11 comments:

 1. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம்.

  ReplyDelete
 2. அட்மின் கார்த்திக் மற்றும் பொன்மாரி நண்பருக்கு, ஒருfunction க்காகவெளியூர் செல்லக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன்,நாளை இரவு அல்லது திங்களன்று தான்வருவேன்,2 நாட்களுக்கும் செய்தியை வெளியிட்டுவிடுங்கள்.

  ReplyDelete
 3. PG Result page ஐ முதல் பதிவாக மாற்றிவிடுங்கள் அட்மின்.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்  ReplyDelete
 6. hai sup court la tet case yepo? hearing ku varthu

  ReplyDelete
 7. PG TAMIL: இறுதிப்பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறுமா?

  தமிழ் பாடத்திற்கு 325 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுல் 277 பேர் மட்டுமே இறுதிப்பட்டியலில் இடம்பெறுவர்.எனவே உங்கள் நிலையை அறிய
  ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தமிழ்ப்பாடப் சன்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டோர் பட்டியலின் அடிப்படையில் தாங்கள் பெற்ற மதிப்பெண்ணுடன் தங்களின் வேலைவாய்ப்பக பதிவு முன்னுரிமைக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்,11,12 ஆம் வகுப்பு கற்பித்தல் அனுபவத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் ஆகியவற்றினையும் as on (16.02.2015)கீழ்கண்டவாறு குறுந்தகவல்(sms) கீழ்கண்ட அலைபேசி எண்ணுக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வெய்ட்டேஜ் மதிப்பெண்ணை சரியாக கணக்கிட்டு அனுப்பவும்.தேர்ந்தெடுக்கப்பட உள்ளோரின் இறுதி கட்-ஆப் மதிப்பெண்ணை நாம் ஓரளவுக்கு யூகிக்க அவை தமிழ்த்தாமரையில் வெளியிடப்படும்.


  கீழ்கண்ட தகவல்களை அனுப்பிவக்க வேண்டுகிறோம்.
  SMS அனுப்பிவைக்க வேண்டிய பார்மேட்
  SMS. FORMATE
  NAME-GENDER -COMMUNITY- mark in exam- marks for employment seniority and experience - total - community turn as per CV list

  EXAMPLE

  Ramesh. M. BC 109 4. 113 GTG

  SAKTHI. . M. MBC. 100 2. 103. GTWPH


  அலைபேசி எண்:9578945369


  DETAILS
  Weigtage marks marks for employment seniority as on 16.02.2015

  1-3.Years. 1.


  3-5.Years. 2

  5-10.Years. 3

  Above 10.Years. 4

  Weigtage marks for experience handling tamil subject for class 11,12 in recognized schools-as on 16.02.2015

  1-2.Years. 1.


  2-5.Years. 2

  Above 5. Years 3

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.