Friday, 20 February 2015

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்


சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கக் கோரி, மாற்றுத் திறனாளிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை வியழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வில் 4,550 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். இவர்களில் 934 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதில் 650 பேருக்கு இதுவரை பணி நியமனம் வழங்கப்படவில்லை என மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏராளமான பின்னடைவு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களை காலிப்பணியிடங்களில் நியமிக்க வேண்டும் அல்லது எதிர்காலத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2 நாள்களாக ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கையைப் பரிசீலித்து அரசு அறிவிப்பை வெளியிட வேண்டும் என அவர்கள் கோரினர்.

போராட்டம் நடத்தியவர்களுடன் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை துணை ஆணையர் சுகந்தி வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக மார்ச் மாதம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

8 comments:

  1. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம்.

    ReplyDelete
  2. காலைவணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  3. வணக்கத்தை விடுங்க ஐயா ஏதாவது தகவலை சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. தகவல் தந்தால் அது மிகப்பெரிய சுமையாக மாறுகிறது எனவே தகவல் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு செய்யும் செயலில் முழு ஈடுபாட்டோடு,அர்பணிப்புணர்வோடு செய்யுங்கள் அது மிகப்பெரிய தகவலை உங்களுக்கு தரும்

      Delete
  4. விரக்தியில் உழன்று கொண்டிருக்கும் நமக்கு வணக்கம் கூட கசந்துபோனதை நினைத்தால் வேதனையாகதான் இருக்கிறதுஎன்ன செய்ய.? முக்கிய செய்தி இருந்தால் உடனடியாக தெரிவிக்கப்பபடும் நண்பரே.

    ReplyDelete
  5. வணக்கம். நல்லது நடக்கும்.

    ReplyDelete
  6. காணவில்லை மகேந்திரன்

    ReplyDelete
  7. Pgtrb second list vara vaipu ulatha

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.