Monday, 16 February 2015

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது ஏன்?


நவக்கிரகங்களில்
விவேகமும்,
பண்பும்
நிறைந்தவர் புதன்.
ஒருவருடைய
அறிவுத்திறனையும்,
சுபாவத்தையும் நிர்ணயிப்பவராக
இவர் இருக்கிறார். புதனின்
சுபபலன்
ஒருவருக்கு கிடைக்காவிட்டால்,
ஒருவர் திறமையுள்ளவராக
இருந்தாலும்,
அவரது உழைப்பு வீணாகப் போய்
விடும்.
இவ்வளவு சிறப்புமிக்கவரின்
ஆசி நமக்குத் தேவையல்லவா?
அதைத் தான்
உயர்வு கருதி இப்படி சொல்லியுள்ளனர்.
பொன்னன் எனப்படும் குருவின்
அருள் கிடைத்தாலும், புதன்
அருள் கிடைக்காது.
அவசரமாக ஒரு செயலைச் செய்தாக
வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிற
நேரத்தில்,
புதன்கிழமை அமைந்து விட்டால்
வேறு எதையும் பார்க்காமல்
செய்து விடலாம். பொன்னைக்
கூட(தங்கம்)
விலை கொடுத்து வாங்கி விடலாம்.
நமக்குப் பொருத்தமாக புதன்
கிடைப்பது அரிது என்பது இதன்
பொருள்.
நவக்கிரகத்தில் புதனுக்கு உரிய
காயத்ரி மந்திரம்
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்.
மற்றும்..
ஸெளம்ய ! ஸெளம்ய குணோபேத !
புதக்ரஹ மஹாமதே !
ஆத்மானாத்ம விவேகம் மே
ஜயை த்வத்பரசாதத:
-என்று சொல்லி வணங்கி,
இயற்கையில் விளைந்த
பொருட்களை புதனுக்கு அர்ப்பணிக்கலாம்.
புதன்கிழமை நன்னாளில்,
இப்படி மனதாரப் பிரார்த்தியுங்கள்.
வழிபாட்டில் ஆடம்பரம்
தேவையில்லை. ஆடம்பரத்தில்,
பூஜை மூழ்கிப் போகும்.
என்றென்றைக்கும்
நடைமுறைப்படுத்தும்
அளவுக்கு வழிபட்டால்,
தடங்கலின்றி பூஜையை என்றும்
தொடர முடியும். ஒருவேளை,
பூஜைக்கு நேரம்
கிடைக்காது போனால், மனதுள்
புதன் பகவானது மூல
மந்திரத்தையும் ஸ்லோகத்தையும்
சொல்ல... மருத்துவரையும் தேட
வேண்டாம்; ஜோதிடரையும் பார்க்க
வேண்டாம் ! ஆரோக்கியமும்
அமைதியும்தான், நாம்
ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிற
அனைத்தும் கிடைக்கும்
என்பது நம்பிக்கை.

6 comments:

 1. ஆன்மீகத்தைப் பற்றிய மிக அருமையான தகவலை தந்த நமது குருகுல நல்ல தம்பி பொன்மாரிக்கு நன்றி! காலை வணக்கம் தம்பி.

  ReplyDelete
  Replies
  1. இனிய காலை வணக்கம் அண்ணா

   Delete
 2. குருகுல நண்பர்கள் திரு அலெக்ஸ், ராம பாலன், அருமை தங்கை திருமதி. விஜி, மற்றும் நமது குருகுல நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம். 2013- தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நமது நண்பர்களுக்கு விரைவில் நல்ல நேரம் அமையப் போகிறது அனைவரும் அந்த நற்செய்தியை விரைவில் அறிய காத்திருங்கள் நண்பர்களே.....

  ReplyDelete
  Replies
  1. காலை வணக்கம் அண்ணா.

   Delete
  2. Good evening Mr Kumaraguru.

   Thank you very much for your positive wishes

   Delete
 3. Gurukulam is a unique website because of this like information.

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.