Thursday, 5 February 2015

உண்மையை அறிந்தால்......


ஒரு மருத்துவ மனையில் அவசர கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து மருத்துவர்கள் அனைவரும் ஒன்று கூடினர்.பிறகு அந்த முக்கியப் பிரச்சனைப் பற்றி கலந்தாலோசித்து இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சரியாக 8 மணிக்கெல்லாம் தினம் ஒரு நோயாளி இறந்து கொண்டிருக்கிறார் என்பது தான் அந்த புரியாத புதிர்.

மருத்துவ ரீதியாக அதற்கு எந்தஒரு விளக்கமும் கொடுக்க முடியவில்லை.
நிபுணர்களூக்கே இந்த விஷயம் மிகவும் சவாலாக இருந்தது.மிகச் சரியாக 8 மணிக்கெல்லாம் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி மருத்துவமனையின் ஒரு அறைக்குள் புகுந்து ஒவ்வொரு உயிராக பறித்துச்செல்கிறது என இறுதியில்
விளக்கம் பகிரப்பட்டது.

எதுவானாலும் இன்று கண்டுபிடித்தே தீரவேண்டும் என அனைத்து மருத்துவர்களும்அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கிவிட்டுஒவ்வொரு அறைக்கு அருகிலும் ஒரு மருத்துவர்மறைந்திருந்து பார்த்துக்
கொண்டிருந்தனர்.மிகச் சரியாக 8 மணிக்கெல்லாம் ஓசை படாமல் கதவு திறந்தது.துப்புரவு செய்யும் பெண்மணி உள்ளே நுழைந்தாள்.உயிர் காக்கும் இயந்திரத்தின் பிளக்கைப் பிடுங்கிவிட்டு அங்கே வாக்கும்கிளீனரின் ஒயரைச் சொருகி அறையைச் சுத்தம் செய்தாள் ,சுத்தம் செய்து முடிக்கவும் அங்கே ஒரு உயிர் பிரிந்தது.மறைந்திருந்த மருத்துவர்களுக்கு உண்மை புரிந்தது.

இப்படித்தான் நாமும், சில சமயங்களில் கண்மூடித்தனமாக காரணம் கற்பித்துக்கொண்டிருக்கிறோம். 

13 comments:

 1. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் காலை வனக்கம்.

  ReplyDelete 2. .... ஒலகத்துல இருக்குற அறிவாலிங்க பூரா பையலும் நம்மநாட்லத்தான்ய்யா இருக்காய்ங்க...? ? ?

  ReplyDelete
 3. காலை வணக்கம் கணேஷ் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. ........
   ............
   ................வ் வ் வ்வணக்கம்.......!

   Delete
 4. குருகுலம் நண்பர்களுக்கு காலை வணக்கம்

  ReplyDelete
 5. முக்கிய செய்தி....108 ஆம்புலன்ஸ் எண் தற்காலிகமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்படவில்லை....அதற்கு பதிலாக 044-71709009 இந்த எண் நிர்வாகத்தால் மாற்று எண்ணாக அவசர ஆம்புலன்ஸ் ஊர்தியை அழைக்க கொடுக்கப்பட்டுள்ளது.

  ReplyDelete
 6. டாக்டர் அ‌ந்த ஆளு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீங்க எ‌ன்னடா‌ன்னா எதுவு‌ம் பேசாமலயே இருக்கீங்களே?

  ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா?

  ReplyDelete
 7. அவரு போலி டாக்டர்னு எப்படி சொல்றே?

  கண்ணுல தண்ணி வருதுண்ணு சொன்னா, வெங்காயம் உரிக்காதீங்க, டிவி சீரியல் பார்க்காதீங்கன்னு சொல்றாரே ! ...

  ReplyDelete
 8. மேலே உள்ள பதிவு சிரிப்பதற்கும்,
  சிந்திப்பதற்கும்.

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.